YouTube குடும்பத் திட்டத்தை அமைத்தல்

YouTube குடும்பத் திட்டத்தைப் பெற்று YouTube கட்டண மெம்பர்ஷிப்பையோ Primetime சேனல்களையோ (அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் மட்டும்) அதிகபட்சம் 5 குடும்ப உறுப்பினர்களுடன் பகிருங்கள்.

YouTube மற்றும் YouTube TVயில் குடும்பக் குழுக்களை உருவாக்குவதற்கான வழிமுறை

குடும்பத் திட்டம் செயல்படும் விதம்

YouTube குடும்பத் திட்டங்கள் மூலம் உங்கள் மெம்பர்ஷிப் பலன்களை ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் (5 பேர் வரை) பகிர்ந்துகொள்ளலாம்.

  • குடும்ப நிர்வாகி:
    • கணக்கின் முதன்மை நிர்வாகி ஆவார்.
    • Google குடும்பக் குழுவை உருவாக்கி குடும்ப உறுப்பினர்களுக்குக் குழுவில் சேருமாறு அழைப்பு விடுக்கலாம்.
  • குடும்ப உறுப்பினர்கள்:
    • பகிரப்பட்ட மெம்பர்ஷிப்பை அணுக தங்கள் சொந்த Google கணக்கைப் பயன்படுத்த வேண்டும்.
    • குடும்ப நிர்வாகி வாங்கும் Primetime சேனல்களின் உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். உறுப்பினர்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட Primetime சேனலையும் வாங்கலாம். இது குடும்ப நிர்வாகியுடன் பகிரப்படாது.
    • தங்களுக்கென லைப்ரரி, சந்தாக்கள் மற்றும் பரிந்துரைகளை வைத்துக்கொள்ளலாம் – பார்ப்பதற்கான விருப்பத்தேர்வுகளையோ இதுவரை பார்த்தவற்றையோ குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளில் பகிர மாட்டோம்.
    • 18 வயதுக்குக் கீழுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வயதுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
  • குடும்பக் குழுக்கள் மூலம் இவற்றை அணுகலாம்:
குறிப்பு: குடும்பத் திட்டங்கள் தற்போது பெலாரஸ், ஐஸ்லாந்து, இஸ்ரேல், ஸ்லோவேனியா, தென் கொரியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் கிடைக்காது.

YouTube Premiumமில் குடும்பத் திட்டங்கள்

விளம்பரமின்றிப் பார்த்தல், ஆஃப்லைன் பதிவிறக்கம் மற்றும் பின்னணி இயக்கம் உட்பட YouTube Premium குடும்பத் திட்டத்தின் அனைத்துப் பலன்களையும் பெற, இங்கே சென்று குடும்பத் திட்ட மெம்பர்ஷிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

YouTube Music Premiumமில் குடும்பத் திட்டங்கள்

விளம்பரமின்றிக் கேட்டல், ஆஃப்லைனில் இயக்குதல் மற்றும் திரை பூட்டியிருக்கும்போது ஆடியோவை இயக்குதல் உட்பட YouTube Music Premium குடும்பத் திட்டத்தின் அனைத்துப் பலன்களையும் பெற, இங்கே சென்று குடும்பத் திட்ட மெம்பர்ஷிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

YouTube TVயில் குடும்பத் திட்டங்கள்

நீங்கள் YouTube TV மெம்பர்ஷிப்பை வாங்கியிருந்தால், குடும்பக் குழுவை உருவாக்கி கூடுதல் கட்டணம் இல்லாமல் அதிகபட்சமாக 5 பேருடன் மெம்பர்ஷிப்பைப் பகிரலாம். நீங்கள் குடும்பக் குழுவை உருவாக்கும்போது குடும்ப நிர்வாகியாகிவிடுவீர்கள்.
ஒரு குடும்ப நிர்வாகியாக, YouTube TVயில் நீங்கள் மட்டுமே பர்ச்சேஸ் செய்யவோ மெம்பர்ஷிப் குறித்த முடிவுகளை எடுக்கவோ முடியும். நீங்கள் கூடுதல் சந்தாக்கள் மற்றும் தொகுப்புகளை வாங்கினால், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து அவற்றைப் பார்க்கலாம்.
நீங்கள் வீட்டின் இருப்பிடத்தையும் அமைக்கலாம். மேலும் குடும்ப உறுப்பினர்களை உங்கள் குடும்பக் குழுவிற்கு அழைக்கலாம் அல்லது அதிலிருந்து அகற்றலாம். 
பதிவு செய்து குடும்பக் குழுவை உருவாக்க:
  1. YouTube TVயில் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு அமைப்புகள்  அதன் பிறகு குடும்பத்தில் பகிர்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. Google குடும்பக் குழுவை உருவாக்கவும்.
  5. YouTube கட்டணச் சேவை விதிமுறைகள் மற்றும் Google தனியுரிமைக் கொள்கையை ஏற்கவும்.
  6. ரத்துசெய் அல்லது அடுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. குழுவில் சேர உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மின்னஞ்சல் அழைப்பைப் பெறுவார்கள், தங்கள் Google கணக்குகளைப் பயன்படுத்தி அவர்கள் உள்நுழையலாம்.

YouTube Primetime சேனல்களில் குடும்பத் திட்டங்கள்

குடும்பத் திட்டத்தை நீங்கள் அமைத்திருந்தால், அழைக்கப்பட்ட அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுடனும் Primetime சேனல்களுக்கான அணுகல் தானாகவே பகிரப்படும்.

குடும்பக் குழுவுக்கான தேவைகள்

முக்கியமானது: Google Workspace கணக்கைப் பயன்படுத்தி குடும்பத் திட்டத்தைத் தொடங்கவோ அதில் சேரவோ முடியாது. குடும்பத் திட்டத்திற்குப் பதிவு செய்ய, Google கணக்கை உருவாக்கவும் அல்லது நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் Google கணக்கில் உள்நுழையவும்.

குடும்ப நிர்வாகிக்கான தேவைகள்

ஒரு குடும்ப நிர்வாகியாக, நீங்கள் மட்டுமே YouTube குடும்பத் திட்டத்தை வாங்கவோ குடும்பக் குழுவிற்கான மெம்பர்ஷிப் முடிவுகளை எடுக்கவோ முடியும். நீங்களே வீட்டின் இருப்பிடத்தை அமைப்பீர்கள். மேலும் நீங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைக்கலாம் அல்லது அகற்றலாம்.

உங்கள் YouTube குடும்பத் திட்டத்தைக் குடும்பக் குழுவுடன் பகிர, நீங்கள்:

  • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதுடையவராக) இருக்க வேண்டும்.
  • Google கணக்கு வைத்திருக்க வேண்டும். உங்களிடம் Google Workspace கணக்கு இருந்தால், எப்போதும் பயன்படுத்தக்கூடிய Google கணக்கை உருவாக்கவும் அல்லது உள்நுழையவும்.
  • YouTube Premium, YouTube Music Premium அல்லது Primetime சேனல்கள் கிடைக்கும் நாட்டில் வசிக்க வேண்டும்.
    • குறிப்பு:
      • குடும்பத் திட்டங்கள் கொரியாவில் கிடைக்காது.
      • Primetime சேனல்கள் அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன.
  • மற்றொரு குடும்பக் குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடாது.
  • கடந்த 12 மாதங்களில் ஒரு குடும்பக் குழுவிலிருந்து மற்றொரு குடும்பக் குழுவுக்கு மாறியிருக்கக்கூடாது.

குடும்ப உறுப்பினருக்கான தேவைகள்

குடும்பக் குழுவில் சேரும்படி 5 குடும்ப உறுப்பினர்கள் வரை குடும்ப நிர்வாகி அழைக்கலாம். YouTube குடும்பத் திட்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் குடும்பக் குழுவில் சேர, நீங்கள்:

  • Google கணக்கு வைத்திருக்க வேண்டும். உங்களிடம் Google Workspace கணக்கு இருந்தால், எப்போதும் பயன்படுத்தக்கூடிய Google கணக்கை உருவாக்கவும் அல்லது உள்நுழையவும்.
  • குடும்ப நிர்வாகி வசிக்கும் அதே வீட்டில் வசிக்க வேண்டும்.
  • YouTube Premium, YouTube Music Premium அல்லது Primetime சேனல்கள் கிடைக்கும் நாடு அல்லது பிராந்தியந்தில் வசிக்க வேண்டும்.
  • மற்றொரு குடும்பக் குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடாது.
  • கடந்த 12 மாதங்களில் ஒரு குடும்பக் குழுவிலிருந்து மற்றொரு குடும்பக் குழுவுக்கு மாறியிருக்கக்கூடாது.
உதவிக்குறிப்பு: உங்கள் YouTube குடும்பத் திட்டத்தை அமைப்பது மற்றும் நிர்வகிப்பது எப்படி என அறிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பத் திட்டம் தொடர்பாக உதவி தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் உதவி மையத்தையும் தொடர்புகொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18222300580648153988
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false