YouTubeல் உள்ள அம்சம் குறித்த பரிசோதனைகளும் வெளியீடுகளும்

சில சமயங்களில், YouTube அம்சங்கள் வெவ்வேறு கணக்குகளில் வெவ்வேறு விதமாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நீங்கள் ஆப்ஸின் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்காமல் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். பரிசோதனை அம்சத்தையோ சமீபத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் அம்சத்தையோ நீங்கள் பார்க்கக்கூடும்.

பரிசோதனை என்றால் என்ன?

பரிசோதனை என்பது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு அம்சங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணக்கிடுவதற்காக நாங்கள் பயன்படுத்தும் ஒரு முறையாகும். தேடல், வீடியோக்களைப் பகிர்தல், விளம்பரங்கள் ஆகியவை இந்த அம்சங்களில் உள்ளடங்கும்.

உங்களுக்கு மிகவும் முக்கியமான வீடியோக்களை எளிதாகக் கண்டறியவும் பார்க்கவும் பகிரவும் உதவுகின்ற வழிகளைக் கண்டறிவதற்காக நாங்கள் எப்போதும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்கிறோம். அவ்வப்போது இவற்றில் சில மாற்றங்களை நீங்கள் பார்க்கக்கூடும்.

இந்தப் பரிசோதனைகளிலிருந்து பெறப்படும் உங்களுடைய கருத்தின் அடிப்படையில் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் பெரிதளவில் வெளியிடுவது பற்றிய முடிவுகளை எடுப்போம். 

வெளியீடு என்றால் என்ன?

புதிய அம்சம் படிப்படியாக வெளியிடப்படுவதையே வெளியீடு என்கிறோம். சில சமயங்களில், புதிய அம்சம் தடையின்றிச் செயல்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் அதை அனைவருக்கும் ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை. அதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட அளவு பார்வையாளர்கள் மற்றும்/அல்லது கிரியேட்டர்களுக்கு அதை முதலில் வெளியிட்டு, அந்த அளவைக் காலப்போக்கில் அனைவருக்கும் கிடைக்கும்படி அதிகரிப்போம்.

ஏதேனும் பரிசோதனை பற்றிய சிந்தனைகளை எங்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினால் உங்கள் கருத்தை அனுப்பவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3182403110534837963
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false