Content ID உரிமைகோரலை மறுத்தல் செயலில் இருக்கும்போதும் வருமானம் ஈட்டுதல்

வீடியோ கிரியேட்டரும் Content ID உரிமைகோருபவரும் வீடியோவின் மூலம் வருமானம் ஈட்ட விரும்பினால் Content ID உரிமைகோரல் மறுத்தல் செயலில் இருக்கும்போதும் வீடியோவின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். Content ID உரிமைகோரலை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மறுக்கலாம். 5 நாட்களுக்குள் நீங்கள் உரிமைகோரலை மறுத்தால், உரிமைகோரப்பட்ட முதல் நாளிலிருந்து வீடியோவிற்கான எந்த வருவாயும் நிறுத்திவைக்கப்படும். உரிமைகோரப்பட்ட தேதியிலிருந்து 5 நாட்களுக்குப் பிறகு Content ID உரிமைகோரலை நீங்கள் மறுத்தால் அந்தத் தேதியிலிருந்து வருவாயை நிறுத்திவைக்கத் தொடங்குவோம்.

உரிமைகோரலை மறுத்தல் செயல்முறை முடியும் வரை வருவாய் தனியாக நிறுத்திவைக்கப்படும், உரிமைகோரலை மறுத்தல் தீர்க்கப்பட்டதும் சரியான உரிமையாளருக்கு வருவாயை வழங்குவோம்.

Content ID உரிமைகோரலை மறுக்கும் செயல்முறையின்போது வீடியோவுக்குக் கிடைக்கும் வருவாய்க்கு என்ன ஆகும் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே உள்ளன:

Content ID உரிமைகோரலுக்கான மறுப்பைச் சமர்ப்பித்தல்

உங்கள் வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்ற பிறகு, அதற்குப் பதிலளிக்க உங்களுக்குச் சில விருப்பங்கள் உள்ளன:

  • எதுவும் செய்யாமல் உங்கள் வீடியோ மீதான உரிமைகோரலை அப்படியே விட்டுவிடுதல்: நிறுத்திவைக்கப்பட்ட வருவாய் ஏதேனும் இருந்தால் உரிமைகோரப்பட்ட தேதியிலிருந்து 5 நாட்களுக்குப் பிறகு அது உரிமைகோரியவருக்கு வழங்கப்படும்.
  • 5 நாட்களுக்குள் உரிமைகோரலுக்கான மறுப்பைச் சமர்ப்பித்தல்: விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படும். உரிமைகோரியவர் நீங்கள் சமர்ப்பித்த உரிமைகோரல் மறுப்பை மதிப்பாய்வு செய்யும்போது, வீடியோ ஈட்டும் அனைத்து வருவாயும் நிறுத்திவைக்கப்படும்.
  • 5 நாட்களுக்குப் பிறகு உரிமைகோரலுக்கான மறுப்பைச் சமர்ப்பித்தல்: உரிமைகோரியவர் நீங்கள் சமர்ப்பித்த உரிமைகோரல் மறுப்பை மதிப்பாய்வு செய்யும்போது, உரிமைகோரப்பட்ட தேதியிலிருந்து வீடியோ ஈட்டும் வருவாய் நிறுத்திவைக்கப்படும்.

Content ID உரிமைகோரல் மறுப்பு செயல்முறையின்போது என்ன ஆகும் என்பது குறித்து மேலும் அறிக.

Content ID உரிமைகோரலை மறுபரிசீலனை செய்வதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

மீண்டும் உறுதிசெய்யப்பட்ட உரிமைகோரலை மறுபரிசீலனை செய்யும்படி கோர அல்லது மறுபரிசீலனைக்காக மேலிடப் பார்வைக்கு அனுப்ப நீங்கள் முடிவுசெய்தால், உங்களுக்குச் சில விருப்பங்கள் உள்ளன:

  • எதுவும் செய்யாமல் உங்கள் வீடியோ மீதான உரிமைகோரலை அப்படியே விட்டுவிடுதல்: நிறுத்திவைக்கப்பட்ட வருவாய் ஏதேனும் இருந்தால் 5 நாட்களுக்குப் பிறகு அது உரிமைகோரியவருக்கு வழங்கப்படும்.
  • 5 நாட்களுக்குள் மறுபரிசீலனைக்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தல்: விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படும். உரிமைகோரியவர் நீங்கள் சமர்ப்பித்த மறுபரிசீலனைக் கோரிக்கையை மதிப்பாய்வு செய்யும்போது, வீடியோ ஈட்டும் அனைத்து வருவாயும் நிறுத்திவைக்கப்படும்.
  • 5 நாட்களுக்குப் பிறகு மறுபரிசீலனைக்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தல்: உரிமைகோரியவர் நீங்கள் சமர்ப்பித்த மறுபரிசீலனைக் கோரிக்கையை மதிப்பாய்வு செய்யும்போது, மறுபரிசீலனைக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து வீடியோ ஈட்டும் வருவாய் நிறுத்திவைக்கப்படும்.

Content ID உரிமைகோரலை மறுபரிசீலனை செய்தால் என்ன ஆகும் என்பது குறித்து மேலும் அறிக.

YouTube பகுப்பாய்வுகளில் உரிமைகோரல் மறுத்தல்கள் செயலில் இருக்கும்போது பெற்ற வருவாய்

உங்கள் வீடியோவில் Content ID உரிமைகோரல் செயலில் இருந்து நீங்கள் அதை மறுத்தாலோ மறுபரிசீலனைக்குக் கோரினாலோ வீடியோவுக்கான வருவாய்த் தரவு YouTube பகுப்பாய்வுகளில் காட்டப்படாது. உரிமைகோரல் விடுவிக்கப்பட்டால், உரிமைகோரலை மறுத்தல் செயலில் இருந்த காலத்திற்கான வருவாய்த் தரவு பிறகு YouTube பகுப்பாய்வுகளில் சேர்க்கப்படும். மாதத் தொடக்கத்திலேயே உரிமைகோரல் தீர்க்கப்பட்டால், இந்தத் தரவு அடுத்த மாதத்தின் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் காட்டப்படும். மாதக் கடைசியில் உரிமைகோரல் தீர்க்கப்பட்டால், 2 மாதங்களுக்குப் பிறகு 10ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் தரவு காட்டப்படக்கூடும்.

உதாரணத்திற்கு:
  • ஜூலை 12 அன்று Content ID உரிமைகோரலை நீங்கள் மறுத்து, அது ஆகஸ்ட் 6 அன்று உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட்டது. ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரையிலான வருவாய்த் தரவு செப்டம்பர் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் பகுப்பாய்வுகளில் காட்டப்படும்.
  • ஆகஸ்ட் 4 அன்று Content ID உரிமைகோரலை நீங்கள் மறுத்து, அது ஆகஸ்ட் 29 அன்று உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட்டது. ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரையிலான வருவாய்த் தரவு அக்டோபர் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் பகுப்பாய்வுகளில் காட்டப்படும்.
உள்ளடக்க நிர்வாகியில் பதிவிறக்கக்கூடிய அறிக்கைகளுக்கான அணுகல் உங்களுக்கு இருந்தால் சரிகட்டல் அறிக்கையில் இந்தத் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்.
YouTube Studioவின் வீடியோக்கள் பக்கத்தில் வருமானம் ஈட்டுதலை முடக்குவதன் மூலம், உரிமைகோரலை மறுத்தல் செயலில் இருக்கும்போது உங்கள் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டாம் எனத் தேர்வுசெய்யலாம்.

Content ID தொடர்பான கூடுதல் உதவி பெறுங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7455688879310098873
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false