நியாயமான பயன்பாடு தொடர்பான பொதுவான கேள்விகள்

நியாயமான பயன்பாடு என்பது ஒருசில சூழ்நிலைகளில், பதிப்புரிமையாளரின் அனுமதியைப் பெறாமல் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நீங்கள் மீண்டும் உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கும் சட்டக் கோட்பாடு ஆகும்.

நியாயமான பயன்பாட்டை ஓர் உள்ளடக்கத்திற்குத் தானாகவே பொருந்துவதற்கான மந்திரச் சொற்கள் ஏதும் இல்லை. வேறொருவரின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நீங்கள் உபயோகிக்கும்போது, நியாயமான பயன்பாட்டின்கீழ் நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை.

நியாயமான பயன்பாடு - YouTubeல் பதிப்புரிமை

 

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

 

நியாயமான பயன்பாடு பற்றிய பொதுவான கேள்விகள்

நியாயமான பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது?
அமெரிக்காவில், நியாயமான பயன்பாட்டின் கீழ் இது அனுமதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு, கோட்பாடுகளின் தொகுப்பு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நீதிபதி குறிப்பிட்ட வழக்கை விசாரிப்பார். பதிப்புரிமையாளரின் அனுமதி இல்லாமல் உள்ளடக்கத்தை எப்போது உபயோகிக்கலாம் என்பதற்கு வெவ்வேறு நாடுகள்/பிராந்தியங்கள் வெவ்வேறு விதிகளைப் பின்பற்றுகின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் வர்ணனை, விமர்சனம், ஆய்வு, கற்பித்தல், செய்தி அறிவிப்பு ஆகியவை நியாயமான பயன்பாடாகக் கருதப்படக்கூடும். “நியாயமாகக் கையாளுதல்” என்றழைக்கப்படும் கருத்தாக்கத்தை (நியாயமான பயன்பாடு போன்றது) மற்ற சில நாடுகள் கொண்டுள்ளன. இது வேறுவிதமாகச் செயல்படக்கூடும்.
எவையெல்லாம் நியாயமான பயன்பாட்டில் சேரும்?

1. உபயோகத்தின் நோக்கமும் தன்மையும் (வணிக ரீதியான உபயோகம், லாபநோக்கமற்ற கல்வி நோக்கங்களுக்கான உபயோகம் உள்ளிட்டவை)

நீதிமன்றங்கள் வழக்கமாக, உள்ளடக்கத்தின் உபயோகம் ”உருமாறியதன்மை” உடையதா என்பதைக் கவனிக்கும். அதாவது, அசலான உள்ளடக்கத்தில் புதிய வெளிப்படுத்தும் விதத்தையோ அர்த்தத்தையோ சேர்க்கிறதா அல்லது அசல் உள்ளடக்கத்திலிருந்து வெறுமனே நகலெடுக்கிறதா என்பதைக் கவனிக்கும். வீடியோவின் மூலம் வருமானம் ஈட்டுவதுடன் அது நியாயமான பயன்பாடு எனக் கருதுவதற்கு வாய்ப்பிருந்தாலும் வணிக ரீதியிலான உபயோகங்கள் நியாயமானவை எனக் கருதப்பட வாய்ப்பு குறைவு.

2. பதிப்புரிமை பெற்ற படைப்பின் தன்மை

முழுவதும் கற்பனையான படைப்புகளை உபயோகிப்பதை விட அதிகளவில் உண்மை சார்ந்த படைப்புகளிலிருந்து உள்ளடக்கத்தை உபயோகிப்பது மிகவும் நியாயமானதாக இருக்கக்கூடும்.

3. பதிப்புரிமை பெற்ற படைப்பின் மொத்த அளவில் உபயோகிக்கப்பட்ட பகுதியின் அளவு மற்றும் முக்கியத் தன்மை

அசல் படைப்பிலிருந்து பெரிய பகுதிகளைப் பயன்படுத்துவதைவிட அதிலிருந்து சிறு பகுதிகளைப் பயன்படுத்துவது நியாயமான பயன்பாடாகக் கருதப்படக்கூடும். எனினும், அது படைப்பின் “அதிமுக்கிய” பகுதியாக இருந்தால், சிறிய அளவுகூட சில தருணங்களில் நியாயமான பயன்பாடாகக் கருதப்படாமல் போகக்கூடும்.

4. பதிப்புரிமை பெற்ற படைப்பிற்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு அல்லது மதிப்பின் மீது உபயோகத்தின் காரணமாக ஏற்படும் மாற்றம்

பதிப்புரிமையாளர் தங்களுடைய அசல் உள்ளடக்கத்திலிருந்து வருமானம் ஈட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் உபயோகங்கள் நியாயமானவையாகக் கருதப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. பதிப்புரிமை வழக்குகளில், நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு இந்தக் காரணியின் கீழ் நீதிமன்றங்கள் சில சமயங்களில் விதிவிலக்கு வழங்கியுள்ளன.

நியாயமான பயன்பாடு எப்போது பொருந்தும்?
பதிப்புரிமையாளருக்கு நன்றி தெரிவித்தல், "மீறும் நோக்கத்தில் இல்லை" என்பது போன்ற பொறுப்புதுறப்பு இடுகைகளைப் பதிவிடுதல், அல்லது வேறொருவரின் உள்ளடக்கத்துடன் அசலான உள்ளடக்கத்தைச் சேர்ப்பது போன்றவை தானாகவே ஒன்றை நியாயமான பயன்பாடாக மாற்றாது. அசல் உள்ளடக்கத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பது அல்லது விமர்சிப்பதற்குப் பதிலாக அந்த உள்ளடக்கத்திற்கு மாற்றாக வர முயற்சிக்கும் உபயோகங்கள் நியாயமான பயன்பாடு எனக் கருதப்படாது.
நியாயமான பயன்பாட்டில் Content ID எவ்வாறு செயல்படுகிறது?

பதிப்புரிமையாளரின் அனுமதி இல்லாமல் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வீடியோவை நீங்கள் பதிவேற்றினால், Content ID உரிமைகோரலை எதிர்கொள்ளக்கூடும். உள்ளடக்கத்தைச் சில வினாடிகள் மட்டுமே உபயோகித்தாலும்கூட (பிரபலப் பாடல்களின் சிறிய அளவிலான உபயோகம் போன்றவை) உரிமைகோரல் செய்யப்பட்டிருந்தால் வீடியோவின் மூலம் வருமானம் ஈட்ட முடியாது.

Content ID போன்ற தானியங்கு சிஸ்டங்களால் நியாயமான பயன்பாட்டைத் தீர்மானிக்க முடியாது, ஏனெனில் அது நீதிமன்றங்களால் மட்டுமே முடிவுசெய்யக்கூடிய தனிப்பட்ட தீர்மானங்களுக்கு உட்படக்கூடியதும் வழக்குக்கு வழக்கு மாறுபடக்கூடியதும் ஆகும். நியாயமான பயன்பாட்டைத் தீர்மானிக்கவோ பதிப்புரிமைச் சிக்கல்களில் மத்தியஸ்தம் செய்யவோ எங்களால் முடியாதபோதும், நியாயமான பயன்பாடு YouTubeல் தொடர்ந்து இருக்கும். உங்கள் வீடியோ நியாயமான பயன்பாட்டின் கீழ்தான் வருகிறது என நம்பினால், Content ID உரிமைக் கோரலை மறுக்கும் செயல்முறை மூலம் உங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கலாம். இந்த முடிவை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சில நேரங்களில், அந்தப் புகாரை மறுபரிசீலனை மூலமாகவும் DMCA எதிர் அறிவிப்புச் செயல்முறை மூலமாகவும் எடுத்துச்செல்ல வேண்டியிருக்கலாம்.

நீங்களோ உரிமைகோருபவரோ புகாரில் சம்பந்தப்பட்ட வீடியோவின் மூலம் வருமானம் ஈட்ட முயற்சித்தால், புகார் தீர்க்கப்படும் வரை வீடியோ மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும். அதன்பிறகு, நாங்கள் சரியான உரிமையாளருக்குக் கிடைத்த தொகையை வழங்குவோம்.  

உரிமைக்கோரலை மறுக்கும் செயல்முறைக்கு வெளியே உரிமைகோரல்களுக்குத் தீர்வுகாண நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்

Content ID உரிமைகோரல்களை எளிதாகக் கையாள்வதற்கான வழி, தொடக்கத்திலேயே அவற்றைத் தவிர்ப்பதாகும். உங்கள் வீடியோவுக்கு அவசியம் இல்லையெனில் பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் வீடியோக்களில் பயன்படுத்துவதற்கான கட்டணமற்ற இசையைப் பெற YouTube ஆடியோ லைப்ரரியைப் பாருங்கள். உரிமத்தொகை இல்லாத அல்லது உரிமம் வழங்கும் பிற தளங்களிலிருந்து இசையைப் பெற விரும்பினால், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படியுங்கள். இவற்றில் சில சேவைகள் YouTubeல் இசையை உபயோகிக்கவோ அதன் மூலம் வருமானம் ஈட்டவோ உரிமைகள் வழங்காமல் போகக்கூடும், அதனால் இப்போதும் Content ID உரிமைகோரலை நீங்கள் எதிர்கொள்ளலாம்.

உங்கள் வீடியோவுக்கு அவசியமில்லாத இசைக்கான Content ID உரிமைகோரலைப் பெற்றால், அந்த இசையை அகற்ற முயலவும் அல்லது ஆடியோ லைப்ரரியிலிருந்து பதிப்புரிமையாளர் அனுமதி தேவையில்லாத டிராக்குகளை அதற்குப் பதிலாகப் பயன்படுத்தவும். உரிமைகோரப்பட்ட உள்ளடக்கமின்றி முற்றிலும் புதிதாக எடிட் செய்யப்பட்ட வீடியோவையும் புதிய URLலில் நீங்கள் பதிவேற்றலாம்.

கீழே குறிப்பிட்டுள்ள சூழல்களில் நான் நியாயமான பயன்பாட்டின் கீழ் பாதுகாக்கப்படுவேனா?

பதிப்புரிமையாளருக்கு நன்றி தெரிவித்தால்?

உருமாறியதன்மை என்பது பொதுவாக நியாயமான பயன்பாடு பகுப்பாய்வில் முக்கியமானதாகும். பதிப்புரிமை பெற்ற படைப்பை உபயோகிக்கும் போது, அதன் உரிமையாளருக்கு நன்றி கூறுவது மட்டுமே அவர்கள் உள்ளடக்கத்தின் மாற்ற முடியாத நகலை நியாயமான பயன்பாடாகத் தானாகவே மாற்றிவிடாது. “அனைத்து உரிமைகளும் பதிவிட்டவருக்கே” மற்றும் “நான் உரிமையாளர் அல்ல” போன்ற சொற்றொடர்களைக் குறிப்பிடுவது அந்த உள்ளடக்கத்தை நீங்கள் நியாயமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று தானாகவே அர்த்தமாகாது. மேலும் அவற்றை உபயோகிப்பதால் பதிப்புரிமையாளரின் அனுமதியைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும் அர்த்தமாகாது.

எனது வீடியோவில் பொறுப்புதுறப்பை இடுகையிட்டால்?
வேறொருவரின் பதிப்புரிமை பெற்ற படைப்பை உபயோகிக்கும்போது நியாயமான பயன்பாடு அதில் பொருந்தச் செய்வதற்கான மந்திரச் சொற்கள் எதுவும் இல்லை. “மீறும் நோக்கத்தில் இல்லை” எனக் குறிப்பிடுவது, பதிப்புரிமை மீறல் தொடர்பாக உரிமைகோருவதிலிருந்து தானாகவே உங்களைப் பாதுகாக்காது.
உள்ளடக்கத்தை "பொழுதுபோக்கிற்கு" அல்லது "லாபநோக்கமற்ற" உபயோகங்களுக்காகப் பயன்படுத்தினால்?

உபயோகம் நியாயமானதுதானா என்பதை மதிப்பிடும்போது உங்கள் உபயோகத்தின் நோக்கத்தை நீதிமன்றங்கள் கவனமாக மதிப்பாய்வு செய்கின்றன. உதாரணத்திற்கு, உங்கள் பதிவேற்றத்தை “பொழுதுபோக்குக் காரணங்களுக்காக மட்டும்” என்று அறிவிப்பது, நியாயமான உபயோகத்திற்கான அளவீட்டில் உங்கள் சார்பாக எதையும் செய்வதற்கு வாய்ப்பை வழங்குவதில்லை. அதேபோல, “லாப நோக்கமற்ற” உபயோகங்கள் என்பது நியாயமான பயன்பாட்டின் பகுப்பாய்வில் சாதகமானதாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் அது தானாகவே பதிப்புரிமை விதிவிலக்காக ஆகாது.

வேறொருவரின் பதிப்புரிமை பெற்ற படைப்பில் நான் சொந்தமாக உருவாக்கிய உள்ளடக்கத்தைச் சேர்த்திருந்தால்?
வேறொருவரின் உள்ளடக்கத்தில் நீங்கள் ஏதேனும் சேர்த்திருந்தாலும் கூட, உங்கள் உபயோகம் நியாயமானதாகக் கருதப்படாமல் போகக்கூடும். நீங்கள் உருவாக்கியது புதிய வெளிப்படுத்தும் விதத்தையோ அர்த்தத்தையோ செய்தியையோ அசல் உள்ளடக்கத்தில் சேர்க்கவில்லையெனில் அது நியாயமான பயன்பாடு அல்ல. இங்கு விவாதிக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துச் சூழல்களையும் போலவே, நியாயமான பயன்பாட்டிற்கான பரிசோதனையின் நான்கு காரணிகளையும் (அசல் படைப்பைப் பயன்படுத்திய அளவு உட்பட) நீதிமன்றங்கள் பரிசீலிக்கும்.
நான் அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கிறேன்
பதிப்புரிமை விதிவிலக்குகள் பற்றிய விதிகள் பெரும்பாலும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவை வேறுபடலாம். பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பதிப்புரிமைதாரரின் அனுமதியின்றி எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்த விதிகள் நாடுகளுக்கும்/பிராந்தியங்களுக்கும் இடையே வேறுபடக்கூடும்.
நியாயமான பயன்பாடு தொடர்பான வழக்குகளை ஒவ்வொரு வழக்கின் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பயன்படுத்தும் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு முன்பு, நீங்கள் ஒரு நிபுணரிடமிருந்து சட்ட ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.

கூடுதல் தகவல்கள்

நியாயமான பயன்பாடு பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினால், அது தொடர்பான ஏராளமான தகவல்களை ஆன்லைனில் பெறலாம். பின்வரும் தளங்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, அவற்றை YouTube அங்கீகரிக்கவில்லை:

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4282207664088012623
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false