பிளேலிஸ்ட்களை உருவாக்குதலும் நிர்வகித்தலும்

பிளேலிஸ்ட் என்பது வீடியோக்களின் தொகுப்பாகும். யார் வேண்டுமானாலும் பிளேலிஸ்ட்களை உருவாக்கலாம், பகிரலாம், நண்பர்கள் உங்கள் பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்க்கலாம்.

நீங்கள் பிரிவிற்குச் சென்று உங்கள் பிளேலிஸ்ட்கள் அனைத்தையும் பார்க்கலாம். நீங்கள் YouTube Studioவிலும் உங்கள் பிளேலிஸ்ட்களை நிர்வகிக்கலாம்.

நீங்கள் முகப்புப்பக்கத்தில் இருக்கும்போது, "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்ட வீடியோவையோ சேனலையோ பிளேலிஸ்ட்டில் சேர்க்க முடியாது. எனினும், தேடல் முடிவுகளிலிருந்து கிடைக்கும் வீடியோக்களை நீங்கள் பிளேலிஸ்ட்களில் சேர்க்க முடியும்.

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

உங்கள் பிளேலிஸ்ட்களைக் கண்டறிய, வழிகாட்டி  என்பதற்குச் சென்று நீங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

Create and manage a YouTube playlist on your desktop

வீடியோ/Shorts வீடியோவில் இருந்து பிளேலிஸ்ட்டை உருவாக்குதல்

வீடியோவில் இருந்து பிளேலிஸ்ட்டை உருவாக்க:

  1. பிளேலிஸ்ட்டில் சேர்க்க விரும்பும் வீடியோவின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. 'மேலும் 'அதன் பிறகு சேமி அதன் பிறகு புதிய பிளேலிஸ்ட்டை உருவாக்கு  என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு பிளேலிஸ்ட்டுக்குப் பெயரிடவும்.
  3. பெட்டியைப் பயன்படுத்தி உங்கள் பிளேலிஸ்ட்டின் பார்வையாளர் அனுமதி அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும். 'தனிப்பட்டது' என்பதைத் தேர்ந்தெடுத்தால் அந்தப் பிளேலிஸ்ட்டை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
  4. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Shorts வீடியோவில் இருந்து பிளேலிஸ்ட்டை உருவாக்க:

  1. பிளேலிஸ்ட்டில் சேர்க்க விரும்பும் Shorts வீடியோவின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. 'மேலும் '''அதன் பிறகு சேமி அதன் பிறகு புதிய பிளேலிஸ்ட்டை உருவாக்கு  என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு பிளேலிஸ்ட்டுக்குப் பெயரிடவும்.
  3. பெட்டியைப் பயன்படுத்தி உங்கள் பிளேலிஸ்ட்டின் பார்வையாளர் அனுமதி அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும். 'தனிப்பட்டது' என்பதைத் தேர்ந்தெடுத்தால் அந்தப் பிளேலிஸ்ட்டை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
  4. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

பிளேலிஸ்ட்டை நிர்வகித்தல்

பிளேலிஸ்ட்டில் வீடியோவைச் சேமித்தல்

  1. உங்கள் பிளேலிஸ்ட்டில் சேர்க்க விரும்பும் வீடியோ/Shorts வீடியோவின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. 'மேலும் 'அதன் பிறகு சேமி  என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு 'பிறகு பார்க்க' என்பதையோ நீங்கள் ஏற்கெனவே உருவாக்கிய பிளேலிஸ்ட்டையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. வீடியோ எந்தப் பிளேலிஸ்ட்டில் சேர்க்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் விதமாக உங்கள் திரையின் கீழ்ப்பகுதியில் ஒரு பாப்-அப் மெசேஜ் தோன்றும்.

பிளேலிஸ்ட்டைத் திருத்துதல்

  1.  நீங்கள் திருத்த விரும்பும் பிளேலிஸ்ட்டை வழிகாட்டியில் தேர்ந்தெடுக்கவும்.
  2. நீங்கள் திருத்த விரும்பும் பிரிவிற்கு அடுத்துள்ள திருத்து  என்பதைக் கிளிக் செய்யவும்.

பிளேலிஸ்ட்டை வீடியோ வகைப்படி வடிகட்டுதல்

  1. நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் பிளேலிஸ்ட்டை வழிகாட்டியில் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் பிளேலிஸ்ட்டில் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ வகையைக் கொண்ட சிப்பைத் தேர்ந்தெடுக்கவும்:
    1. எல்லாம்: பிளேலிஸ்ட்டில் சேமிக்கப்பட்ட அனைத்து வகை வீடியோக்களையும் காட்டும்.
    2. Shorts: பிளேலிஸ்ட்டில் சேமிக்கப்பட்ட Shorts வீடியோக்களைக் காட்டும். கம்ப்யூட்டர்களில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கிறது. 
    3. வீடியோக்கள்: பிளேலிஸ்ட்டில் சேமிக்கப்பட்ட நீள வடிவ வீடியோக்களைக் காட்டும்.

பிளேலிஸ்ட்டை மறுவரிசைப்படுத்துதல்

  • வீடியோக்களை மறுவரிசைப்படுத்த: பிளேலிஸ்ட்டைத் திறந்து அதன் பிறகு அதிலுள்ள வீடியோவை மேலே/கீழே இழுக்கவும்.
  • வீடியோக்களைத் தற்காலிகமாக மறுவரிசைப்படுத்த: வீடியோ முகப்புப் பக்கத்தின் பிளேலிஸ்ட் பேனலில் ஒரு வீடியோவை மேலே அல்லது கீழே இழுக்கவும்.

குறிப்பு: YouTube Shorts மட்டுமே உள்ள பிளேலிஸ்ட்களுக்கு இந்த அம்சம் கிடைக்காது. 

 

பிளேலிஸ்ட்டை நீக்குதல்

  1. உங்கள் பிளேலிஸ்ட்களில் ஒன்றுக்குச் செல்லவும்.
  2. மேலும் '' என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பிளேலிஸ்ட்டை நீக்கு  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பிளேலிஸ்ட்டை நீக்க விரும்புவதை உறுதிசெய்ய நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
கவனத்திற்கு: பார்வையாளர்களின் 'இதுவரை பார்த்தவை' பக்கத்தில் உங்களுடைய பழைய பிளேலிஸ்ட் தொடர்ந்து காட்டப்படலாம்.

ஒரு பிளேலிஸ்ட்டை நீக்கிய பிறகு, அதன் URLலையும் தலைப்பையும் YouTube பகுப்பாய்வுகளில் பார்க்க/தேட முடியாது. அந்தப் பிளேலிஸ்ட் தொடர்பான தரவு ('பார்வை நேரம்' போன்றவை) தொடர்ந்து விரிவான அறிக்கைகளின் பகுதியாக இருக்கும். ஆனால் அவை நீக்கப்பட்ட பிளேலிஸ்ட்டுடன் தொடர்புப்படுத்தப்படாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11035668584547968062
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false