YouTubeல் இதுவரை தேடியவற்றைப் பார்த்தல் அல்லது நீக்குதல்

நீங்கள் YouTubeல் இதுவரை தேடியவற்றை எனது செயல்பாடுகள் பக்கத்தில் பார்க்கலாம். அங்கிருந்து:

  • இதுவரை தேடியவற்றைப் பார்க்கலாம்
  • குறிப்பிட்ட வீடியோவைக் கண்டறிய இதுவரை தேடியவற்றில் தேடலாம்
  • இதுவரை தேடியவற்றை முழுமையாக அழிக்கலாம்
  • தேடல் பரிந்துரைகளில் இருந்து தேடல்களை ஒவ்வொன்றாக அகற்றலாம்
  • இதுவரை தேடியவற்றை இடைநிறுத்தலாம்
கவனத்திற்கு: YouTubeல் நீங்கள் ஏற்கெனவே பார்த்த வீடியோக்களைப் பார்க்கவோ நீக்கவோ எனது செயல்பாடுகள் பக்கத்தைப் பார்க்கவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • நீங்கள் நீக்கும் தேடல் உள்ளீடுகள் அதன் பிறகான பரிந்துரைகளில் எந்தப் பங்கும் வகிக்காது.
  • இதுவரை தேடியவற்றை அழித்த பிறகு, 'தேடல் பெட்டியில்' கடந்த காலத் தேடல்கள் பரிந்துரைகளாகக் காட்டப்படாது.
  • இதுவரை தேடியவை இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது நீங்கள் உள்ளிடும் தேடல் வார்த்தைகள் அதில் சேமிக்கப்படாது.

உங்கள் சாதனம் ஆஃப்லைனில் இருக்கும்போது 'இதுவரை பார்த்தவை' பகுதியிலிருந்து ஏதேனும் வீடியோக்களை அகற்றியிருந்தால், அந்த மாற்றங்கள் ஒத்திசைய சில மணிநேரம் ஆகக்கூடும்.

இதுவரை தேடியவற்றை இடைநிறுத்துதல்

  1. உங்கள் சுயவிவரப் படத்தை  தட்டவும்.
  2. அமைப்புகள் அதன் பிறகு இதுவரையான செயல்பாடுகள் அனைத்தையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
  3. YouTube செயல்பாடுகள் சேமிக்கப்படுகின்றன என்பதைத் தட்டி அதன் பிறகு "YouTubeல் மேற்கொள்ளக்கூடிய தேடல்கள்" என்பதைத் தேர்வுநீக்கவும்.

தேடல்களை ஒவ்வொன்றாக நீக்குதல்

  1. 'தேடுக ' என்பதைத் தட்டவும்.
  2. பதிவு ஐகானுடன் காட்டப்படும் தேடல் முடிவுப் பரிந்துரையைத் தட்டிப் பிடிக்கவும்.
  3. பாப்-அப்பில் அகற்று என்பதைத் தட்டவும்.

டிவி, கேம் கன்சோல் அல்லது மீடியா ஸ்ட்ரீமிங் பெட்டி

இதுவரை தேடியவற்றை இடைநிறுத்துதல்

  1. இடதுபுற மெனுவில், அமைப்புகளுக்கு  செல்லவும்.
  2. இதுவரை தேடியவற்றை இடைநிறுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இதுவரை தேடியவற்றை இடைநிறுத்து எனும் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதுவரை தேடியவற்றை அழித்தல்

  1. இடதுபுற மெனுவில், அமைப்புகளுக்கு செல்லவும்.
  2. இதுவரை தேடியவற்றை அழி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இதுவரை தேடியவற்றை அழி எனும் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதுவரை பார்த்தவை, பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களை அகற்றுதல், பரிந்துரைகளை மேம்படுத்துதல் போன்றவை குறித்த கூடுதல் விவரங்களுக்கு எங்களின் பிற கட்டுரைகளைப் படிக்கவும்.

மறைநிலைப் பயன்முறையில் தேடுதல்

மறைவான பயன்முறையில் உலாவும்போது மேற்கொள்ளப்படும் தேடல்கள் சேமிக்கப்படாது. மறைவான பயன்முறை குறித்து மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15221606185204585310
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false