YouTubeல் இதுவரை தேடியவற்றைப் பார்த்தல் அல்லது நீக்குதல்

நீங்கள் YouTubeல் இதுவரை தேடியவற்றை எனது செயல்பாடுகள் பக்கத்தில் பார்க்கலாம். அங்கிருந்து:

  • இதுவரை தேடியவற்றைப் பார்க்கலாம்
  • குறிப்பிட்ட வீடியோவைக் கண்டறிய இதுவரை தேடியவற்றில் தேடலாம்
  • இதுவரை தேடியவற்றை முழுமையாக அழிக்கலாம்
  • தேடல் பரிந்துரைகளில் இருந்து தேடல்களை ஒவ்வொன்றாக அகற்றலாம்
  • இதுவரை தேடியவற்றை இடைநிறுத்தலாம்
கவனத்திற்கு: YouTubeல் நீங்கள் ஏற்கெனவே பார்த்த வீடியோக்களைப் பார்க்கவோ நீக்கவோ எனது செயல்பாடுகள் பக்கத்தைப் பார்க்கவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • நீங்கள் நீக்கும் தேடல் உள்ளீடுகள் அதன் பிறகான பரிந்துரைகளில் எந்தப் பங்கும் வகிக்காது.
  • இதுவரை தேடியவற்றை அழித்த பிறகு, 'தேடல் பெட்டியில்' கடந்த காலத் தேடல்கள் பரிந்துரைகளாகக் காட்டப்படாது.
  • இதுவரை தேடியவை இடைநிறுத்தப்பட்டிருக்கும்போது நீங்கள் உள்ளிடும் தேடல் வார்த்தைகள் அதில் சேமிக்கப்படாது.

உங்கள் சாதனம் ஆஃப்லைனில் இருக்கும்போது 'இதுவரை பார்த்தவை' பகுதியிலிருந்து ஏதேனும் வீடியோக்களை அகற்றியிருந்தால், அந்த மாற்றங்கள் ஒத்திசைய சில மணிநேரம் ஆகக்கூடும்.

தேடல்களை ஒவ்வொன்றாக நீக்குதல்

எனது செயல்பாடுகள் என்பதற்குச் சென்று அதன் பிறகு நீங்கள் நீக்க விரும்பும் தேடலுக்கு அடுத்துள்ள 'நீக்கு ' என்பதைக் கிளிக் செய்யவும்.

இதுவரை தேடியவற்றை அழித்தல்

எனது செயல்பாடுகள் என்பதற்குச் சென்று அதன் பிறகு …இதன்படி செயல்பாடுகளை நீக்கு என்பதைக் கிளிக் செய்துஅதன் பிறகு நீங்கள் நீக்க விரும்பும் செயல்பாடுகளின் கால அளவைத் தேர்வுசெய்து அதன் பிறகு பாப்-அப்பின் கீழ் வலதுபுறத்தில் 'நீக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.

இதுவரை தேடியவற்றை இடைநிறுத்துதல்

செயல்பாடுகள் சேமிக்கப்படுகின்றன  என்பதைக் கிளிக் செய்துவிட்டு, அதை முடக்குவதற்கு ஆன்/ஆஃப் பட்டனைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இதுவரை தேடியவற்றையும் பார்த்தவற்றையும் மீண்டும் இயக்கும் வரை அவை சேமிக்கப்படாது.

இதுவரை தேடியவற்றையும் பார்த்தவற்றையும் தானாக நீக்குதல்

இதுவரை YouTubeல் தேடியவற்றையும் பார்த்தவற்றையும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாக நீக்குவதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. கம்ப்யூட்டரில் உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறப் பேனலில் தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதன் கீழ் YouTube செயல்பாடுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. செயல்பாடுகளைத் தானாக நீக்குவதற்கான உங்கள் விருப்பத்தைச் சேமிக்க, உங்களுக்கு விருப்பமான கால அளவு அதன் பிறகு அடுத்து அதன் பிறகு பாப்-அப்பின் கீழ் வலதுபுறத்தில் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

டிவி, கேம் கன்சோல் அல்லது மீடியா ஸ்ட்ரீமிங் பெட்டி

இதுவரை தேடியவற்றை இடைநிறுத்துதல்

  1. இடதுபுற மெனுவில், அமைப்புகளுக்கு  செல்லவும்.
  2. இதுவரை தேடியவற்றை இடைநிறுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இதுவரை தேடியவற்றை இடைநிறுத்து எனும் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதுவரை தேடியவற்றை அழித்தல்

  1. இடதுபுற மெனுவில், அமைப்புகளுக்கு செல்லவும்.
  2. இதுவரை தேடியவற்றை அழி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இதுவரை தேடியவற்றை அழி எனும் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதுவரை பார்த்தவை, பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களை அகற்றுதல், பரிந்துரைகளை மேம்படுத்துதல் போன்றவை குறித்த கூடுதல் விவரங்களுக்கு எங்களின் பிற கட்டுரைகளைப் படிக்கவும்.

மறைநிலைப் பயன்முறையில் தேடுதல்

மறைவான பயன்முறையில் உலாவும்போது மேற்கொள்ளப்படும் தேடல்கள் சேமிக்கப்படாது. மறைவான பயன்முறை குறித்து மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13975014144626331142
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false