YouTube கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுதல்

நீங்கள் தகுதிபெறும் கிரியேட்டர் எனில் எங்கள் கிரியேட்டர் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளலாம். YouTube கூட்டாளர் திட்டம் மூலம் வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களுக்கும் இது பொருந்தும்.

நாங்கள் எந்த வகையில் உதவ முடியும்?

ஒரு கிரியேட்டராக ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொண்டாலோ YouTube மூலம் அதிகப் பலன்களைப் பெற விரும்பினாலோ, இவை தொடர்பாக எங்களால் உதவ முடியும்:

  • YouTubeஐ நீங்கள் பயன்படுத்துகின்ற விதத்தை மேம்படுத்துதல் (YouTubeன் தொழில்நுட்பம் அல்லது சேவை சார்ந்த உதவிக்குறிப்புகள் உட்பட).
  • கொள்கை மற்றும் பதிப்புரிமை தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல்.
  • உங்கள் கணக்கு மற்றும் சேனல் நிர்வாகம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
  • உங்கள் செயல்திறன் மற்றும் எங்களின் பகுப்பாய்வுக் கருவிகள் குறித்துப் புரிந்துகொள்ள உதவுதல்.
  • Content ID மற்றும் உரிமைகள் நிர்வாகம் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்.
  • உங்கள் கணக்கு தொடர்பான சிக்கல்களைப் பிழையறிந்து திருத்திச் சரிசெய்தல்.
உரையாடல் உதவிக்கான விருப்பம் காட்டப்படவில்லை எனில், உதவி பெறுவதற்குத் தகுதிபெறும் சேனலில் (உதாரணமாக, YouTube கூட்டாளர் திட்டத்திலுள்ள சேனல்) நீங்கள் உள்நுழைந்துள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதன் பிறகும் எங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனில் கருத்தை அனுப்பு பட்டனைப் பயன்படுத்தி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மின்னஞ்சல் உதவி

கிடைக்கும் மொழிகள்

பின்வரும் மொழிகளில் உரையாடல் மற்றும் மின்னஞ்சல் மூலம் உதவி வழங்கப்படுகிறது:
  • அரபிக்
  • வங்காளம்
  • சீனம் (எளிதாக்கப்பட்டது)
  • சீனம் (பாரம்பரியம்)
  • ஆங்கிலம்
  • ஃபிரெஞ்சு
  • ஜெர்மன்
  • இந்தி
  • இத்தாலியன்
  • இந்தோனேஷியன்
  • ஜாப்பனீஸ்
  • கொரியன்
  • போலிஷ்
  • போர்ச்சுகீஸ்
  • ரஷ்யன்
  • ஸ்பானிஷ்
  • தாய்
  • டர்கிஷ்
  • வியட்நாமீஸ்
  • உருது

குறிப்பு: ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் மின்னஞ்சல் மூலம் 24/7 உதவி வழங்கப்படும். மற்ற மொழிகளில், திங்கள் முதல் வெள்ளி வரை இயல்பான வணிக நேரத்தில் உதவி வழங்கப்படும்.

உதவி மையத்தில் இருந்து கிரியேட்டர் உதவிக் குழுவினருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்

  1. support.google.com/youtube என்ற தளத்திற்குச் சென்று உள்நுழையவும்.
  2. பக்கத்தின் கீழ்ப்புறம் "கூடுதல் உதவி தேவையா?" என்பதற்குக் கீழுள்ள எங்களைத் தொடர்புகொள்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. எங்களின் கிரியேட்டர் உதவிக் குழுவினருக்கு மின்னஞ்சல் அனுப்ப இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

YouTubeல் இருக்கும் கிரியேட்டர் உதவிக் குழுவினருக்கு மின்னஞ்சல் அனுப்புதல்

  1. உங்கள் YouTube சேனலில் உள்நுழையவும். 
  2. உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி , உதவி & கருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "கூடுதல் உதவி தேவையா?" என்பதற்குக் கீழுள்ள எங்களைத் தொடர்புகொள்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. எங்கள் கிரியேட்டர் உதவிக் குழுவினருடன் உரையாட இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மின்னஞ்சல் செய்வதற்கான விருப்பத்தேர்வைப் பார்க்க முடியவில்லையெனில் YouTube கூட்டாளர் திட்டத்தில் உள்ள சேனலில்தான் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். அப்போதும் எங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லையெனில் கருத்தை அனுப்பு பட்டன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7653448518523350288
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false