பதிவேற்ற முறையைத் தேர்வுசெய்தல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

உள்ளடக்கத்தைப் பதிவேற்ற பல வழிகளை YouTube வழங்குகிறது. உங்கள் உள்ளடக்கத்தின் வகை, எண்ணிக்கை, கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் பதிவேற்ற முறையை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். சரியான பதிவேற்ற முறையைத் தேர்வுசெய்வதன் மூலம் உங்கள் நேரத்தைச் சேமிக்கலாம்.

அடிப்படையான பதிவேற்ற முறை

வீடியோவையும் அதன் தரவுத்தகவலையும் பதிவேற்றுவதற்கான எளிய முறை பதிவேற்றுதல் பக்கத்தைப் பயன்படுத்துவதாகும். இந்த முறையில் பதிவேற்ற தரவுத்தகவல் ஃபைல் உங்களிடம் இருக்க வேண்டியதில்லை; வீடியோவைப் பதிவேற்றியதும் தரவுத்தகவலை நேரடியாக நீங்கள் டைப்செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ஒரே நேரத்தில் சில வீடியோக்களைப் பதிவேற்றும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த முறை பொருத்தமாக இருக்கும். இதற்கு எந்தவொரு தொழில்நுட்ப நிபுணத்துவமும் பெற்றிருக்க வேண்டியதில்லை, பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் உடனடியாக YouTubeல் தோன்றும். தொகுப்புச் செயலாக்கமும் உள்ளடக்க நிர்வாக அமைப்புடனான எந்தவொரு ஒருங்கிணைப்பும் இல்லை என்பதே இதன் குறையாகும். மேலும், உலகளவில் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு உரிமையில்லாத சவுண்டு ரெக்கார்டிங்குகள், இசைத் தொகுப்புகள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவேற்ற பதிவேற்றுதல் பக்கம் ஆதரிக்காது. இந்த வகையான உடைமைகளைப் பதிவேற்ற நீங்கள் மொத்தப் பதிவேற்ற முறைகளில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்.

மொத்தப் பதிவேற்றம்

பதிவேற்றுவதற்கு உங்களிடம் நிறைய உடைமைகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை மொத்தமாக YouTubeல் பதிவேற்ற விரும்பினால், உள்ளடக்க வழங்கல் கருவியில் இருக்கும் "மதிப்பாய்வு செய்து பதிவேற்று" என்ற பட்டனுக்குக் கீழே உள்ள தொகுப்புப் பதிவேற்றியைப் பயன்படுத்தலாம். உங்கள் அனைத்து உள்ளடக்க ஃபைல்களையும் (சவுண்டு ரெக்கார்டிங்குகள் மற்றும் வீடியோக்கள்) பதிவேற்றத் தொகுப்புகளாக உருவாக்க இந்தக் கருவி உதவுகிறது. மேலும் விவரங்களுக்கு இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

மொத்தப் பதிவேற்ற முறையைப் பயன்படுத்தும்போது பதிவேற்றிய அனைத்து உடைமைகளுக்கும் தரவுத்தகவலைத் தனித்தனி ஃபைலாக வழங்குவீர்கள். நீங்கள் YouTubeல் பதிவேற்றும் மீடியா ஃபைல்களுடன் சேர்த்து தரவுத்தகவல் ஃபைல்களையும் பதிவேற்றுவதற்கான விரிதாள் டெம்ப்ளேட்டுகளின் தொகுப்பை YouTube வழங்குகிறது. விரிதாளிலுள்ள ஒவ்வொரு வரிசையும் ஓர் உடைமைக்கான தரவுத்தகவலைக் குறிக்கும். பதிவேற்றத்தின்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க விரிதாளை நீங்கள் முன்கூட்டியே சரிபார்க்கலாம். உள்ளடக்க நிர்வாகியில் டெம்ப்ளேட்டுகள் பிரிவின் கீழ் உள்ளடக்க வழங்கல் பக்கத்திலிருந்து விரிதாள் டெம்ப்ளேட்டுகளைப் பதிவிறக்கலாம்.

ஆர்ட் டிராக்குகளுக்காக சவுண்டு ரெக்கார்டிங்குகளை வழங்கும் இசை லேபிள்கள் தங்கள் உரிமையுடையவற்றுக்கான விவரத்தை ஆர்ட் டிராக் விரிதாள் மூலமாகவோ தொழிற்துறைத் தரத்திலான DDEX வடிவத்தின் மூலமாகவோ வழங்கலாம்.

அதிகப் பதிவேற்றங்கள்

வழக்கமாக அதிகளவில் உடைமைகளைப் பதிவேற்றும் (மாதத்திற்கு 100 ஃபைல்களுக்கும் அதிகமாக) கூட்டாளர்கள் தங்கள் மீடியா மற்றும் தரவுத்தகவல் ஃபைல்களைத் தொகுப்புப் பதிவேற்றிக்குப் பதிலாகப் பாதுகாப்பான ஃபைல் பரிமாற்ற நெறிமுறை (SFTP - Secure File Transfer Protocol) அல்லது Aspera மூலம் பதிவேற்றலாம். SFTPயை விட Aspera முறையில் வேகமாகப் பதிவேற்ற முடியும், மீடியா ஃபைல்களை அதிகமாகப் பதிவேற்ற இது சிறந்த முறையாகும். கூட்டாளர் தொழில்நுட்ப நிர்வாகி ஒதுக்கப்பட்டிருக்கும் கூட்டாளர்களுக்கு ஆஃப்லைன் டிஸ்க் பதிவேற்ற முறையையும் YouTube வழங்குகிறது. இதன் மூலம் அளவுக்கதிகமான உள்ளடக்கங்களைக் கொண்ட டிஸ்க்கை நீங்கள் Google பதிவேற்ற மையத்தில் பதிவேற்றலாம்.

YouTube APIகள்

உங்கள் பதிவேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக YouTube APIகளைப் பயன்படுத்தி ஒரு பிரத்தியேகப் பதிவேற்ற முறையை உருவாக்கிக் கொள்ளலாம். YouTube Data API, YouTube Content ID API ஆகியவற்றைப் பயன்படுத்துவது ஸ்டேட்டஸ் அப்டேட்களையும் ஃபால்பேக் லாஜிக்கையும் கட்டுப்படுத்த உதவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14982679938699626024
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false