ஒரு பிராண்டு கணக்கிலிருந்து மற்றொரு பிராண்டு கணக்கிற்கு உங்கள் YouTube சேனலை இடமாற்றுதல்

தொடங்குவதற்கு முன்பு:

YouTube சேனல் தானாகவே ஒரு கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு வெவ்வேறு வகையான கணக்குகள் உள்ளன:

Google கணக்கு YouTubeல் உள்நுழைய Google கணக்கு தேவை. உங்கள் Google கணக்கின் பெயரே சேனலின் பெயராகத் தானாகவே அமைந்துவிடும்.
பிராண்டு கணக்கு

பிராண்டு கணக்கு என்பது உங்கள் பிராண்டுக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்படும் கணக்காகும். இது உங்கள் தனிப்பட்ட Google கணக்கு போன்றதல்ல. ஒரு சேனல் பிராண்டு கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகள் அந்தச் சேனலை நிர்வகிக்கலாம்.

பிராண்டு கணக்கை உருவாக்கும் வழிமுறையை அறிக:

  1. முதலில் உங்களிடம் ஏற்கெனவே பிராண்டு கணக்கு உள்ளதா எனப் பார்க்கவும்.
  2. YouTubeல் உள்நுழையவும்.
  3. உங்கள் சேனல் பட்டியலுக்குச் செல்லவும்.
  4. சேனலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பிராண்டு கணக்கிற்குப் பெயரிடுவதற்கான விவரங்களை நிரப்பி கணக்கைச் சரிபார்க்கவும்.
  6. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனல் மாற்றத்தால் ஏற்படும் சிக்கல்கள்

உங்கள் சேனலையும் அதில் இருக்கும் வீடியோக்களையும் ஒரு பிராண்டு கணக்கிலிருந்து அதே Google கணக்குடன் தொடர்புடைய மற்றொரு பிராண்டு கணக்கிற்கு நீங்கள் இடமாற்றலாம். இந்தச் செயல்முறை சேனல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

பாதுகாக்கவேண்டிய கணக்கு உள்நுழைவுத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் உங்கள் கணக்கிற்கான அணுகலை இழக்காதிருக்க ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்வதும் உங்கள் பொறுப்பாகும். உங்கள் சேனலை மீட்டெடுக்க, கணக்கு மீட்டெடுப்புக்கான இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றுங்கள்.

உங்கள் பிராண்டு கணக்கை வேறொரு பிராண்டு கணக்கிற்கு இடமாற்றுவது என்பது நீங்களே செய்துமுடிக்கக்கூடிய ஒரு செயலாக்கம் ஆகும். ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். தவறான கணக்கு இடமாற்றங்கள் தவறான சேனலை நீக்குவதற்கு வழி வகுக்கும்.    

பிராண்டு கணக்கு இடமாற்றத்தின் காரணமாக நீங்கள் இவற்றை இழப்பீர்கள்:

கணக்கு இழக்கும் உள்ளடக்கம்
பிராண்டு கணக்கு A: இடமாற்றப்படும் சேனலுடன் தொடர்புடையது
பிராண்டு கணக்கு B: எந்தக் கணக்கிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அந்தச் சேனலுடன் தொடர்புடையது (பிராண்டு கணக்கு A இடமாற்றப்பட்டதும் இந்தக் கணக்கில் இருந்தவை நீக்கப்படும்)
  • வீடியோக்கள்
  • மெசேஜ்கள்
  • பிளேலிஸ்ட்கள்
  • சேனல் செயல்பாடுகள்
  • சரிபார்ப்பு முத்திரை

ஒரு பிராண்டு கணக்கிலிருந்து மற்றொரு பிராண்டு கணக்கிற்கு உங்கள் சேனலை நகர்த்துதல்:

உங்களிடம் இருப்பது கண்காணிக்கப்படும் கணக்கு எனில் உங்களால் சேனலை இடமாற்ற முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பள்ளிக் கணக்கு எனில், சேனல் மாற்றம் செய்வதற்கான தகுதிகளின் அடிப்படையில் அதன் சேனலை இடமாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கலாம்.

தொடங்குவதற்கு முன்பு இதை உறுதிப்படுத்தவும்:

  • பிராண்டு கணக்கின் முதன்மை உரிமையாளரின் கணக்காக இருப்பது உங்களுடைய Google கணக்கே. 
  • YouTube Studioவில் சேனல் அனுமதிகளில் இருந்து உங்கள் சேனலுக்கு ஒப்புதல் நீக்கியுள்ளீர்கள். உங்கள் சேனல் ஒரு பிராண்டு கணக்கைப் பயன்படுத்திக்கொண்டிருந்து, சேனல் அனுமதிகளுக்கு ஒப்புதல் அளித்திருந்தால் இது பொருந்தும். 
    • ஒப்புதலை நீக்க, “YouTube Studioவில் அனுமதிகளுக்கான ஒப்புதலை நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதை YouTube Studioவின் அமைப்புகள் அதன் பிறகு அனுமதிகள் என்பதில் தேர்வுசெய்யலாம்.
  • சேனல் அனுமதிகளுடன் உங்கள் சேனலுக்கான அணுகலை நீங்கள் மற்றவர்களுக்கு வழங்கவில்லை. 

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. தேவையெனில், நீங்கள் நகர்த்த விரும்பும் சேனலுடன் தொடர்புடைய Google கணக்கிற்கு மாறிக்கொள்ளலாம்.

    எச்சரிக்கை:

    எதிர்பாராவிதமாக வேறொரு சேனலை நீங்கள் நீக்கும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, நீங்கள் இடமாற்ற விரும்பும் சேனலுடன் தொடர்புடைய Google கணக்கில்தான் உள்நுழைந்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். 

    உதாரணமாக, சேனல் A என்பது உங்களுடைய பழைய சேனல். சேனல் B என்பதற்கு அதை நீங்கள் மாற்றுகிறீர்கள். இப்போது நீங்கள் சேனல் A கணக்கில்தான் உள்நுழைய வேண்டும்.

  4. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மேம்பட்ட அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. சேனலை பிராண்டு கணக்கிற்கு இடமாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. எந்தக் கணக்கிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அந்தக் கணக்கைத் திரையில் தோன்றும் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யவும். கணக்குகளின் பட்டியல் காட்டப்படவில்லை எனில் மேலே உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்திப் பிழையறிந்து திருத்தவும்.
  8. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கணக்கு ஏற்கெனவே ஒரு YouTube சேனலுடன் தொடர்புடையதாக இருந்தால், மாற்று என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, பாப்-அப் ஆகும் பெட்டியில் சேனலை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • கவனிக்க வேண்டியது: இவ்வாறு செய்வதால் அந்தக் கணக்குடன் ஏற்கெனவே தொடர்புப்படுத்தப்பட்டுள்ள சேனல் நீக்கப்படும். இந்தச் சேனலுடன் தொடர்புடைய வீடியோக்கள், கருத்துகள், மெசேஜ்கள், பிளேலிஸ்ட்கள், முந்தைய செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் நிரந்தரமாக நீக்கப்படும்.
  9. நகர்த்திய பிறகு உங்கள் சேனலின் பெயர் எப்படித் தோன்றும் என்பதைப் பார்க்கவும், அதன்பிறகு சேனலை நகர்த்து என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17653689608509956045
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false