Google கணக்கில் சேனல்களுக்கிடையே மாறுதல்

ஒரு Google கணக்கின் மூலம் 100 சேனல்கள் வரை நிர்வகிக்கலாம். YouTube சேனல்களை நிர்வகிக்க, பிராண்டு கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

சேனல்களுக்கிடையே மாறுதல்

YouTubeல் ஒரு சமயத்தில் ஒரு சேனலை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரே Google கணக்கில் இணைக்கப்பட்டுள்ள YouTube சேனல்களுக்கிடையே மாறுவதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

கம்ப்யூட்டர் மூலம் YouTubeல் உள்நுழையும்போது, பயன்படுத்துவதற்கு ஒரு சேனலைத் தேர்வுசெய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும். பீட்டாவை நீங்கள் பயன்படுத்தியதில்லை எனில் அதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.

நீங்கள் நிர்வகிக்கும் மற்றொரு சேனலுக்கு மாற:

  1. youtube.com தளத்தில் மேல் வலது மூலையில் உள்ள, உங்கள் சுயவிவரப் படத்தை கிளிக் செய்யவும்.

  2. கணக்கை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்  அதன் பிறகு. நீங்கள் நிர்வகிக்கும் கணக்குகளின் பட்டியலையும் உங்கள் Google கணக்கின் அடையாளத்தையும் பார்ப்பீர்கள்.

  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கைக் கிளிக் செய்யவும். சேனல் இல்லாத பிராண்டு கணக்கைத் தேர்வுசெய்தால், அந்தப் பக்கத்திற்கு ஒரு சேனலை நீங்கள் உருவாக்கலாம்.

தற்போது நீங்கள் எந்தச் சேனலைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை மேல் வலது மூலையில் உள்ள பெயரையும் ஐகானையும் பார்த்து எப்போது வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.

சேனலை அணுகுவதற்கான அனுமதி இருந்தும் அது பட்டியலில் காட்டப்படவில்லை

உங்கள் சேனல் காட்டப்படவில்லை எனில் சேனல்களுக்கிடையே மாறுவதற்கு studio.youtube.com தளத்திற்குச் செல்லவும்.

பிராண்டு கணக்குடன் இணைக்கப்பட்ட சேனல் என்னிடம் இருந்தும் அது பட்டியலில் காட்டப்படவில்லை

உங்கள் சேனல் காட்டப்படவில்லை எனில், அந்தச் சேனலின் பிராண்டு கணக்கின் நிர்வாகி பட்டியலில் இப்போது நீங்கள் உள்நுழைந்திருக்கும் Google கணக்கு இல்லை.

சிக்கலைச் சரிசெய்ய: அந்தச் சேனல் இணைக்கப்பட்டுள்ள பிராண்டு கணக்கின் நிர்வாகியாக உங்கள் Google கணக்கைச் சேர்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

இந்தப் பட்டியலிலிருந்து சேனலை நீக்க வேண்டுமெனில்

குறிப்பு: உங்கள் பெயருக்குப் பதிலாக மின்னஞ்சல் முகவரியைக் காட்டும் விருப்பத்தைப் பார்த்தால் நீங்கள் சேனல் இல்லாமலே ஒரு பார்வையாளராக YouTubeஐப் பயன்படுத்தலாம். இதை அகற்ற முடியாது. ஆனால் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தி Google கணக்கிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயரில் ஒரு புதிய சேனலை உருவாக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2653150584493725760
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false