பதிப்புரிமை மீறல் தொடர்பான எதிர் அறிவிப்பைச் சமர்ப்பித்தல்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை காரணமாக உங்கள் வீடியோ அகற்றப்பட்டிருந்து, அந்த வீடியோ தவறுதலாகவோ தவறாக அடையாளம் காணப்பட்டதாலோ அகற்றப்பட்டதாக நீங்கள் நம்பினால் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம். இது பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை காரணமாக அகற்றப்பட்ட வீடியோவை YouTube மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வக் கோரிக்கை ஆகும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • உங்கள் வீடியோ தவறுதலாகவோ தவறாக அடையாளம் காணப்பட்டதாலோ அகற்றப்பட்டிருந்தால் மட்டுமே எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் நியாயமான பயன்பாடு நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகளும் அடங்கும்.
  • மேற்கண்ட நிபந்தனைகளை உங்கள் வீடியோ பூர்த்திசெய்யாத பட்சத்தில் பதிப்புரிமை எதிர்ப்பு காலாவதியாவதற்கு 90 நாட்கள் வரை காத்திருக்கலாம். உரிமைகோருபவரை நேரடியாகத் தொடர்புகொண்டு அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெறும்படியும் கேட்கலாம்.
பொய்யான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். எங்கள் செயல்முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவது (மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் போன்றவை) உங்கள் கணக்கை முடக்குவதற்கோ பிற சட்ட விளைவுகளுக்கோ வழிவகுக்கக்கூடும்.

வீடியோவை மதிப்பீடு செய்தல்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை காரணமாக அகற்றப்பட்ட வீடியோவை மதிப்பாய்வு செய்ய:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஃபில்டர் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சம்பந்தப்பட்ட வீடியோவைக் கண்டறியவும்.
  5. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில் உள்ள பதிப்புரிமை என்பதற்கு மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  6. விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. அகற்றுதல் கோரிக்கையில் கண்டறியப்பட்ட உள்ளடக்கம் குறித்த கூடுதல் தகவலைக் காட்டும் வீடியோ பதிப்புரிமை விவரங்கள் பக்கத்தைப் பார்க்கவும்.
    • பிற வீடியோக்கள் அகற்றப்பட்டு அவற்றுக்கும் அதே பதிப்புரிமை எதிர்ப்பு விதிக்கப்பட்டிருந்தால் பிற வீடியோக்களின் வீடியோ பதிப்புரிமை விவரங்கள் பக்கத்தையும் தவறாமல் பாருங்கள். பல வீடியோக்கள் தவறாக அகற்றப்பட்டதாக நீங்கள் கருதினால், அந்த அனைத்து வீடியோக்களுக்கும் சேர்த்து ஒரே எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.
  8. எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் முன்பு இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்:  
  • உரிமை: இந்த உள்ளடக்கம் உங்களின் சொந்தப் படைப்பா? அதற்கான அனைத்து உரிமைகளும் உங்களிடம் உள்ளனவா?
  • ஆதாரம்: பதிப்புரிமை பெற்ற வேறொருவரின் படைப்பை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் அதைப் பயன்படுத்துவதற்கான உரிமமோ அனுமதியோ உங்களிடம் உள்ளதா?
  • பதிப்புரிமை விதிவிலக்கு: உங்களின் பயன்பாடு நியாயமான பயன்பாடு அல்லது அதைப் போன்ற பதிப்புரிமை விதிவிலக்கு மூலம் பாதுகாக்கப்படுகிறதா?
  • பொதுக் களம்: இந்த உள்ளடக்கம் பொதுக் களத்தில் உள்ளதா?

மேலே உள்ளவற்றில் எதுவுமே உங்கள் வீடியோவிற்குப் பொருந்தவில்லை எனில் பதிப்புரிமை எதிர்ப்பு காலாவதியாவதற்கு 90 நாட்கள் வரை காத்திருக்கலாம். உரிமைகோருபவரை நேரடியாகத் தொடர்புகொண்டு அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெறும்படியும் கேட்கலாம்.

எதிர் அறிவிப்பைச் சமர்ப்பித்தல்

விவாதத்திற்குட்பட்ட வீடியோவைப் பதிவேற்றியவர் மட்டுமே எதிர் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும். எதிர் அறிவிப்பில் உள்ள தகவல்களை உரிமைகோருபவருடன் பகிர்வதற்கு வீடியோவைப் பதிவேற்றியவர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பதிவேற்றியவர் கருதினால், அவரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வழக்கறிஞர் போன்றோர்) அவரின் சார்பாக மின்னஞ்சல், ஃபேக்ஸ் அல்லது தபால் மூலம் எதிர் அறிவிப்பை அனுப்பலாம்.

YouTube Studioவில் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்க:

  1. அகற்றப்பட்ட வீடியோவை YouTube Studioவில் கண்டறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  2. இந்த வீடியோவில் கண்டறியப்பட்டுள்ள உள்ளடக்கம் என்பதற்குக் கீழ், செயல்களைத் தேர்ந்தெடுங்கள் அதன் பிறகு எதிர் அறிவிப்பைச் சமர்ப்பித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிப்பதற்கான தேவைகளைப் படித்துப் பார்த்து, அவற்றைப் பூர்த்திசெய்வதை உறுதிப்படுத்துவதற்கான பெட்டிகளைத் தேர்வுசெய்துவிட்டு அதன் பிறகு தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் தொடர்புத் தகவல்களை உள்ளிட்டு அதன் பிறகு தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்களின் முழுமையான இருப்பிட முகவரியையும் சட்டப்பூர்வமான முழுப் பெயரையும் (பொதுவாக, உங்கள் முதல் பெயரும், இறுதிப்பெயரும்) குறிப்பிட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளவும். நிறுவனத்தின் பெயரையோ சேனலின் பெயரையோ உள்ளிட வேண்டாம்.
  5. எதிர் அறிவிப்புக்கான காரண விளக்கத்தை உள்ளிடவும். உங்கள் வீடியோ தவறுதலாகவோ தவறாக அடையாளம் காணப்பட்டதாலோ அகற்றப்பட்டதாக நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கவும்.
  6. அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தேவைகளைப் படித்துப் பார்த்து, அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க பெட்டிகளைத் தேர்வுசெய்யவும்.
  7. உங்களின் சட்டப்பூர்வமான முழுப் பெயரைக் கையொப்பமாக உள்ளிட்டு அதன் பிறகு தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. (விருப்பத்திற்குரியது) அதே அகற்றுதல் கோரிக்கையால் மற்ற வீடியோக்கள் அகற்றப்பட்டு, அவை தவறாக அகற்றப்பட்டதாக நீங்கள் நம்பினால், அந்த வீடியோக்களைத் தேர்ந்தெடுத்து எதிர் அறிவிப்பில் சேர்க்கலாம்.
  9. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல், ஃபேக்ஸ் அல்லது தபால் மூலமும் நீங்கள் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.
 

எதிர் அறிவிப்பைச் சமர்ப்பித்த பிறகு என்ன நடக்கும்?

எதிர் அறிவிப்பு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, வீடியோ தவறாக அடையாளம் காணப்பட்டதாகவோ பிழையாக அகற்றப்பட்டதாகவோ நீங்கள் ஏன் கருதுகிறீர்கள் என்பதற்கான தெளிவான விளக்கம் உட்பட, அனைத்துத் தேவைகளையும் அது பூர்த்திசெய்யும்பட்சத்தில் உரிமைகோருபவருக்கு அனுப்பப்படும். அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யாத எதிர் அறிவிப்புகள் நிராகரிக்கப்படலாம்.

உரிமைகோருபவருக்கு எதிர் அறிவிப்புக்குப் பதிலளிக்க பதிப்புரிமைச் சட்டத்தின்படி 10 அமெரிக்க வணிக நாட்கள் அவகாசம் உண்டு. YouTubeல் மீண்டும் வீடியோ காட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டதற்கான ஆதாரத்துடன் உரிமைகோருபவர் பதிலளிக்க வேண்டும்.

உரிமைகோருபவர் இந்த 10 நாட்களுக்குள் இதைச் செய்யாவிட்டால், YouTubeல் உங்கள் வீடியோ மீண்டும் காட்டப்படும் (நீங்கள் அதை முன்பே நீக்காமல் இருந்தால்) மற்றும் உங்கள் சேனலில் இருந்து அது தொடர்பான பதிப்புரிமை எதிர்ப்பும் நீக்கப்படும்.

பொதுவான கேள்விகள்

நான் சமர்ப்பித்த எதிர் அறிவிப்பின் நிலையைப் பார்ப்பது எப்படி?

நீங்கள் சமர்ப்பித்த எதிர் அறிவிப்பின் நிலையைத் தெரிந்துகொள்ள:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வடிப்பான் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சம்பந்தப்பட்ட வீடியோவைக் கண்டறியவும்.
  5. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில் உள்ள பதிப்புரிமை என்பதற்கு மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  6. விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. இந்த வீடியோவில் அடையாளம் காணப்பட்ட உள்ளடக்கம் எனும் பிரிவிற்குக் கீழே, எதிர் அறிவிப்பின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
நான் சமர்ப்பித்த எதிர் அறிவிப்பை ரத்துசெய்ய முடியுமா?
எதிர் அறிவிப்பை ரத்துசெய்ய விரும்பினால், உரிமைகோருபவர் எதிர் அறிவிப்புக்கு இன்னும் பதிலளிக்காத நிலையில் நீங்கள் அதைச் செய்யலாம்.
அதை ரத்துசெய்ய, YouTubeன் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலுக்கு (எதிர் அறிவிப்பு பெறப்பட்டதை உறுதிப்படுத்தி அனுப்பப்பட்ட மின்னஞ்சல்) நேரடியாகப் பதிலளியுங்கள். நீங்கள் எதிர் அறிவிப்பைத் திரும்பப் பெற விரும்புவதாக அதில் குறிப்பிடுங்கள். copyright@youtube.com எனும் முகவரிக்கும் இந்தத் தகவல்களை நீங்கள் அனுப்பலாம்.
வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கு எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிப்பது எப்படி?

கருத்துகள், சேனல் பேனர் படங்கள் போன்ற வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கான எதிர் அறிவிப்புகளை மின்னஞ்சல், ஃபேக்ஸ் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

கவனத்திற்குசேனலின் சுயவிவரப் படங்கள் Googleளில் ஹோஸ்ட் செய்யப்படுவதால், அவை தொடர்பான எதிர் அறிவிப்புகளை Googleளின் இணையப் படிவம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிப்புரிமை மீறல்கள் காரணமாக எனது கணக்கு முடக்கப்பட்டிருந்தால் நான் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்க முடியுமா?
பதிப்புரிமை மீறல்கள் காரணமாக உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், YouTube Studioவில் நீங்கள் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்க முடியாது. ஆனால் மின்னஞ்சல், ஃபேக்ஸ் அல்லது தபால் மூலம் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18318738061767570304
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false