வயதுக் கட்டுப்பாடுள்ள வீடியோ

சில சமயங்களில் உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்றாலும், அது YouTubeன் சேவை விதிமுறைகளுக்கு இணங்காமல் இருக்கக்கூடும் அல்லது 18 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். இந்தச் சூழல்களில், நாங்கள் வீடியோவிற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கக்கூடும். வீடியோக்கள், வீடியோவிற்கான விளக்கங்கள், பிரத்தியேகச் சிறுபடங்கள், லைவ் ஸ்ட்ரீம்கள், பிற YouTube தயாரிப்புகள்/அம்சங்கள் ஆகியவற்றுக்கு இந்தக் கொள்கை பொருந்தும்.

வயதுக் கட்டுப்பாடு பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

வயதுக் கட்டுப்பாடு உள்ளது எனக் கருதக்கூடிய உள்ளடக்க வகைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே உள்ளன. இந்தத் தீம்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவற்றைக் கொண்டுள்ள உள்ளடக்கத்துக்கு நாங்கள் வயதுக் கட்டுப்பாட்டை விதிக்கக்கூடும். வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்படக்கூடிய உள்ளடக்கத்திற்கான உதாரணங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இந்தத் தீம்களை விளக்கும் உதாரணங்களைப் பார்க்க, கொள்கைப் பிரிவுகளுக்குச் செல்லவும். இது முழுமையான பட்டியல் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

சிறுவர் பாதுகாப்பு

  • வெடிபொருட்களைக் கையாளுதல் அல்லது உடலில் காயங்களை ஏற்படுத்தக்கூடிய சவால்களை மேற்கொள்வது போன்று பெரியவர்கள் பங்கேற்கும் ஆபத்தான செயல்பாடுகள் உள்ள வீடியோ. இதுபோன்ற செயல்களைச் சிறுவர்கள் எளிதில் செய்துபார்க்க வாய்ப்புள்ளது
  • குடும்பத்திற்கு ஏற்றது என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடிய வயது வந்தோருக்கான வீடியோ
கவனத்திற்கு: "சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை" அமைப்புகள் உங்கள் வீடியோக்கள் மீதான வயதுக் கட்டுப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

விற்பனை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், போதைப் பொருட்கள் உட்பட தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது ஆபத்தான செயல்பாடுகள்

  • தீங்கு விளைவிக்கக்கூடிய போலியான குறும்புச் செயல்கள் உள்ள வீடியோ. இது பார்வையாளர்களால் வேறுபாடு காண முடியாத அளவுக்கு உண்மையானதாகத் தெரியும்
  • கஞ்சா விற்கும் இடத்தை விளம்பரப்படுத்தும் வீடியோ

நிர்வாணம் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வீடியோ

  • பாலுணர்வைத் தூண்டும் வகையிலான நடனம், தொடுதல் போன்ற பாலியல்ரீதியான செயல்பாடு உள்ள வீடியோ
  • வீடியோவில் உள்ளவர் காட்டப்படும் நிலை பார்வையாளரைப் பாலியல் ரீதியாகத் தூண்டக்கூடிய வகையில் இருக்கும் வீடியோ
  • உள்ளாடை போன்ற பொது இடங்களில் அணிய ஏற்றுக்கொள்ள முடியாத ஆடையை வீடியோவில் உள்ளவர் அணிந்திருக்கும் வீடியோ

வன்முறையான அல்லது கொடூரமான உள்ளடக்கம்

  • பெரிய சாலை விபத்திலிருந்து மீண்டவரின் காயங்களைச் சூழல் விளக்கத்துடன் காட்டும் வீடியோ
  • வன்முறை அல்லது பயங்கரத்தை மையப்படுத்தும் வீடியோ. உதாரணமாக, திரைப்படம் / வீடியோ கேமின் மிகக் கொடூரமான பகுதியை மட்டும் மையப்படுத்திக் காட்டுதல்.

கொச்சையான வார்த்தைகள்

  • தலைப்பு, சிறுபடம் அல்லது தொடர்புடைய தரவுத்தகவலில் மோசமான தகாத சொற்கள் உள்ள வீடியோ
  • தகாத சொற்கள் பயன்படுத்தப்படுவதை மையப்படுத்தும் வீடியோ. எ.கா. ஒரு முழு வீடியோவிலிருந்து தகாத சொற்கள் இருக்கும் கிளிப்புகளை மட்டும் காட்டுதல் அல்லது அவற்றைத் தொகுத்து ஒரு வீடியோவாகக் காட்டுதல்.

உள்ளடக்கத்திற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் என்ன ஆகும்?

வயதுக் கட்டுப்பாடு உள்ள வீடியோக்களை 18 வயதுக்கும் குறைந்தவர்கள் அல்லது கணக்கிலிருந்து வெளியேறிய பார்வையாளர்களால் பார்க்க முடியாது. அத்துடன் வயதுக் கட்டுப்பாடு உள்ள வீடியோக்களைப் பெரும்பாலான மூன்றாம் தரப்பு இணையதளங்களிலும் பார்க்க முடியாது. உட்பொதிக்கப்பட்ட பிளேயர் போன்ற வேறொரு இணையதளத்தில் வயதுக் கட்டுப்பாடு உள்ள வீடியோவைப் பார்வையாளர்கள் கிளிக் செய்தால் அது YouTube அல்லது YouTube Musicகிற்குச் செல்லும். அங்கே அவர்கள் கணக்கில் உள்நுழைவதுடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் மட்டுமே வீடியோவைப் பார்க்க முடியும். வீடியோ எங்கே கண்டறியப்பட்டிருந்தாலும் அது YouTube மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால் அதைப் பொருத்தமான பார்வையாளர்கள் மட்டுமே பார்ப்பதற்கு இந்தச் செயல்முறை உதவுகிறது.

தவறுதலாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதினால் வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை மறுபரிசீலனைக்குக் கேட்கலாம்.

வருமானம் ஈட்டுதலும் வயதுக் கட்டுப்பாடுகளும்

உங்கள் சேனல் விளம்பரங்களுக்குத் தகுதிபெற்றுள்ளது எனில் எங்கள் விளம்பரதாரருக்கு ஏற்ற உள்ளடக்க வழிகாட்டுதல்களைப் படித்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். வயதுக் கட்டுப்பாடு உள்ள வீடியோக்கள் விளம்பரங்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டலாம். சில விளம்பரதாரர்கள் குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்ற வீடியோவில் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள தீம்களில் இல்லாத வீடியோவில் விளம்பரப்படுத்த விரும்பலாம். இந்தச் சூழலில், உங்கள் வீடியோவிற்கு விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுதல் குறைவாகவோ முற்றிலும் இல்லாமலோ போகக்கூடும்.

சில சமயங்களில் உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்றாலும், அது YouTubeன் சேவை விதிமுறைகளுக்கு இணங்காமல் இருக்கக்கூடும் அல்லது 18 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கக்கூடும்.

உங்கள் வீடியோவிற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்தல்

உங்கள் உள்ளடக்கத்திற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, YouTube Studioவிற்குச் சென்று ‘வயதுக் கட்டுப்பாடு’ வடிப்பானைப் பயன்படுத்தலாம் அல்லது வீடியோக்கள் பக்கத்தில் கட்டுப்பாடுகள் பிரிவில் “வயதுக் கட்டுப்பாடு” என்பதில் பார்க்கலாம். எங்கள் சிஸ்டங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, உங்கள் ரேட்டிங்கில் ஏதாவது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அது மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

உள்நுழைந்துள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வீடியோவுக்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை வீடியோவிற்குக் கீழேயுள்ள விளக்கத்தைப் பார்ப்பதன் மூலம் சொல்ல முடியும். வயதுக் கட்டுப்பாடு உள்ள வீடியோக்களைப் பார்ப்பது பற்றி மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16398172216961282553
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false