Content ID உரிமைகோரலை மறுத்தல்

உங்கள் வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்றிருந்தால், பின்வருபவை போன்ற நியாயமான காரணங்களுக்காக உரிமைகோரலை நீங்கள் மறுக்கலாம்:

  • உங்கள் வீடியோவிலுள்ள உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
  • நியாயமான பயன்பாடு போன்ற பதிப்புரிமை விதிவிலக்கிற்குத் தகுதிபெறும் வகையில் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துகிறீர்கள்.
  • உங்கள் வீடியோ தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவோ பிழை ஏற்பட்டுள்ளதாகவோ நம்புகிறீர்கள்.
Content ID உரிமைகோரல்களில் இருந்து பதிப்புரிமை எதிர்ப்புகள் வேறுபட்டவை. உங்கள் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெற்றிருந்தால் அதுகுறித்து மேலும் அறிய, பதிப்புரிமை எதிர்ப்புகள் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

Content ID உரிமைகோரலை நீங்கள் மறுத்தால் உங்கள் வீடியோவை உரிமைகோருபவருக்கு அது குறித்து அறிவிக்கப்படும். உரிமைகோருபவர் பதிலளிக்க 30 நாட்கள் அவகாசம் தரப்படும்.

மறுப்பு தெரிவிக்கும் முன்பாக

Content ID உரிமைகோரலை நீங்கள் மறுப்பதற்கு முன்பு பொதுக் களம் குறித்தும் நியாயமான பயன்பாடு அல்லது நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகள் குறித்தும் நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். உரிமைகோரலை மறுப்பதற்குப் பின்வருபவை நியாயமான காரணங்கள் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

நீங்கள் மறுப்பைச் சமர்ப்பிக்கவில்லை எனில் Content ID உரிமைகோரலுக்குத் தீர்வுகாண்பதற்கு வேறு சில வழிகள் உள்ளன. உங்கள் வீடியோவில் உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுவது இந்த வழிகளில் ஒன்றாகும்.

உரிமைகோரலை மறுக்கலாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும், YouTube அதைத் தீர்மானிக்க முடியாது. என்ன செய்வது எனத் தெரியவில்லை எனில், உரிமைகோரலை மறுப்பதற்கு முன்பு சட்ட ஆலோசனையைப் பெறலாம்.

உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருக்கின்றன என உறுதியாக நம்பினால் மட்டுமே உரிமைகோரலை நீங்கள் மறுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உரிமைகோரலை மறுக்கும் செயல்முறையைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதோ தீங்கிழைக்கும் விதத்தில் தவறாக உபயோகிப்பதோ உங்கள் சேனல் அல்லது வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.

மறுப்பைச் சமர்ப்பித்தல்

Content ID உரிமைகோரலை மறுப்பதற்கு:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வீடியோக்கள் பிரிவில் நீங்கள் மறுப்பு தெரிவிக்கும் உரிமைகோரல் உள்ள வீடியோவைக் கண்டறியவும்.
    • வீடியோவை எளிதாகக் கண்டறிய, வடிப்பான் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யலாம்.
  4. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில் உள்ள பதிப்புரிமை என்பதற்கு மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  5. விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இந்த வீடியோவில் கண்டறியப்பட்டுள்ள உள்ளடக்கம் பிரிவில் சம்பந்தப்பட்ட உரிமைகோரலைக் கண்டறிந்து, செயல்களைத் தேர்ந்தெடுங்கள் அதன் பிறகு உரிமைகோரலை மறுத்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: உங்கள் வீடியோவைத் தடைசெய்யும் Content ID உரிமைகோரல்களை நேரடியாக மறுபரிசீலனைக்கு அனுப்பும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு இருக்கக்கூடும். இந்த விருப்பத்தேர்வு மறுப்புச் செயல்முறையின் முதல் படியைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக மறுபரிசீலனையுடன் அந்தச் செயல்முறையைத் தொடங்கும். நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல் விருப்பம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

மறுப்பைச் சமர்ப்பித்த பிறகு

நீங்கள் மறுப்பைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் வீடியோவை உரிமைகோருபவர் பதிலளிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

உரிமைகோருபவர் செய்யக்கூடியவை
  • உரிமைகோரலை விடுவித்தல்: உரிமைகோருபவர் உங்கள் மறுப்பை ஏற்றுக்கொண்டால் உரிமைகோரலை அவர் விடுவிக்கலாம். வீடியோ மூலம் நீங்கள் ஏற்கெனவே வருமானம் ஈட்டியிருந்தால், உங்கள் வீடியோ மீதான அனைத்து உரிமைகோரல்களும் விடுவிக்கப்பட்ட பிறகு வருமானம் ஈட்டுதல் அமைப்புகள் அனைத்தும் தானாகவே மீட்டெடுக்கப்படும். Content ID உரிமைகோரலை மறுத்தல் செயல்முறையின்போது வருமானம் ஈட்டுதல் குறித்து மேலும் அறிக.
  • உரிமைகோரலை மறுவுறுதி செய்தல்: உரிமைகோரல் சரியானதுதான் என உரிமைகோருபவர் கருதினால், அதை அவர்கள் மறுவுறுதி செய்யலாம். அவ்வாறு செய்தால், உங்கள் மறுப்பு நிராகரிக்கப்பட்டு உங்கள் வீடியோவில் உரிமைகோரல் தொடர்ந்து நீடிக்கும் என்று அர்த்தம். இந்த முடிவை எதிர்த்து மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கும் நீங்கள் தகுதிபெற்றிருக்கக்கூடும்.
  • அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்: உரிமைகோருபவர் தனது உரிமைகோரல் சரியானதுதான் என இன்னும் நம்பினால் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை அவர் சமர்ப்பிக்கலாம். அகற்றுதல் கோரிக்கை சரியானது எனில் YouTubeல் இருந்து உங்கள் வீடியோ அகற்றப்படும். மேலும் உங்கள் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும். பதிப்புரிமை எதிர்ப்பிற்குத் தீர்வுகாண்பதற்கான விருப்பத்தேர்வுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
  • உரிமைகோரல் காலாவதியாகும் வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருத்தல்: 30 நாட்களுக்குள் உரிமைகோருபவர் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை எனில், உங்கள் வீடியோ மீதான உரிமைகோரல் காலாவதியாகிவிடும். அந்த வீடியோவில் இருந்து உரிமைகோரல் விடுவிக்கப்படும்.

 

இந்த வீடியோவில் "Content IDக்கான மறுப்புச் செயல்முறை" எனும் அத்தியாயத்தில் மறுப்புச் செயல்முறை குறித்து மேலும் அறிக:

Content ID உரிமைகோரல்கள் & மறுக்கும் செயல்பாடுகள்: Studioவில் உரிமைகோரல்களை நிர்வகித்தல் & நடவடிக்கை எடுத்தல்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

பொதுவான கேள்விகள்

எனது உரிமைகோரல் மறுப்பு நிராகரிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
உங்கள் உரிமைகோரல் மறுப்பு நிராகரிக்கப்பட்டால் வீடியோவில் உரிமைகோரல் தொடர்ந்து நீடிக்கும். நீங்கள் இன்னும் உரிமைகோரல் தவறானதுதான் என்பதில் உறுதியாக இருந்தால், முடிவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கு நீங்கள் தகுதிபெறக்கூடும். Content ID உரிமைகோரலை மறுபரிசீலனை செய்யக் கோருதல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
உரிமைகோரலை மறுக்கும் செயல்முறையின்போது உரிமைகோருபவர் எப்போது வேண்டுமானாலும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறு சமர்ப்பித்து, அகற்றுதல் கோரிக்கை சரியானது எனத் தீர்மானிக்கப்பட்டால் YouTubeல் இருந்து உங்கள் வீடியோ அகற்றப்படும். மேலும் உங்கள் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும்.
உரிமைகோருபவர் ஏன் தொடக்கநிலை மறுப்பையும் மறுபரிசீலனையையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்?

உரிமை தொடர்பான தீர்மானங்களை YouTube எடுக்க முடியாது என்பதால் தொடக்கநிலை மறுப்பும் மறுபரிசீலனைக் கோரிக்கையும் உரிமைகோருபவரால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. எந்த உள்ளடக்கத்திற்குச் சரியான உரிமம் உள்ளது என்று YouTubeக்குத் தெரியாது. மேலும் நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகளுக்கு எந்த உள்ளடக்கம் தகுதியானது என்றும் YouTube தீர்மானிக்க முடியாது.

உரிமைகோருபவரால் இன்னும் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படுவதை மறுபரிசீலனைச் செயல்முறை உறுதிசெய்கிறது. ஏனெனில், உரிமைகோரலை மறுவுறுதி செய்யும் முடிவை அவர்கள் எடுத்தால், வீடியோவை அகற்ற பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை  (சட்டரீதியான செயல்முறை) அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்க நீங்கள் முடிவெடுத்தால் உங்கள் வீடியோவை அகற்றிய நிலையிலேயே வைத்திருக்க, உரிமைகோருபவர் ஓர் நீதிமன்ற வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மறுப்பு, மறுபரிசீலனைக்குக் கோருதல் ஆகிய விருப்பத்தேர்வுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

தொடக்கநிலை மறுப்புப் படியில், உரிமைகோருபவர் மறுப்பிற்குப் பதிலளிக்க 30 நாட்கள் வரை அவகாசம் தரப்படலாம். உரிமைகோருபவர் உங்கள் மறுப்பை நிராகரித்தால், முடிவை எதிர்த்து மறுபரிசீலனை செய்யுமாறு கோர நீங்கள் தகுதிபெறக்கூடும். அதன் பிறகு, மறுபரிசீலனைக்குப் பதிலளிக்க உரிமைகோருபவருக்கு 7 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது.

'மறுபரிசீலனைக்குக் கோருதல்' என்ற விருப்பத்தேர்வு உங்கள் வீடியோவைத் தடைசெய்யும் Content ID உரிமைகோரல்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதைத் தேர்ந்தெடுத்தால், மறுப்புச் செயல்முறை (உரிமைகோருபவர் 30 நாட்களுக்குள் பதிலளிப்பதற்கான விருப்பத்தேர்வை இது வழங்கும்) தவிர்க்கப்பட்டு, மறுபரிசீலனைக்குக் கோரும் செயல்முறை தொடங்கும். இதற்கு உரிமைகோருபவர் 7 நாட்களில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதால் உரிமைகோரலை மறுக்கும் செயல்முறை விரைவாகத் தீர்க்கப்படும்.

உரிமைகோருபவர் உங்கள் மறுபரிசீலனையை நிராகரித்தால், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை அவர் சமர்ப்பிக்கலாம். அகற்றுதல் கோரிக்கை சரியானது எனத் தீர்மானிக்கப்பட்டால் YouTubeல் உங்கள் வீடியோ அகற்றப்படும். மேலும் உங்கள் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும். கவனத்திற்கு: அகற்றுதல் கோரிக்கை தவறானது எனக் கருதினால் நீங்கள் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

ஒரு வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட Content ID உரிமைகோரல்களைப் பெறுமா?
ஆம். ஒரு வீடியோ பல Content ID உரிமைகோரல்களைப் பெறலாம். அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட அகற்றுதல் கோரிக்கையையும் ஒரு வீடியோ பெறலாம். ஆனால் ஒரே சமயத்தில் ஒரேயொரு பதிப்புரிமை எதிர்ப்பை மட்டுமே அது பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
Content ID உரிமைகோரலை நான் மறுக்கவில்லை எனில் அதற்கு எவ்வாறு தீர்வுகாண்பது?
நீங்கள் மறுப்பைச் சமர்ப்பிக்கவில்லை எனில், Content ID உரிமைகோரலுக்குத் தீர்வுகாண்பதற்கு வேறு சில வழிகள் உள்ளன. உங்கள் வீடியோவில் இருந்து உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுவது இந்த வழிகளில் ஒன்றாகும்.
மறுப்பைச் சமர்ப்பித்த பிறகு அதை நான் ரத்துசெய்ய முடியுமா?
முடியாது. மறுப்பைச் சமர்ப்பித்த பிறகு அதை நீங்கள் ரத்துசெய்ய முடியாது.

கூடுதல் தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5665534612056076067
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false