YouTube கணக்கைச் சரிபார்த்தல்

உங்கள் சேனலைச் சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். சரிபார்ப்புக் குறியீட்டை மெசேஜ் மூலமோ குரல் அழைப்பின் மூலமோ அந்த எண்ணிற்கு அனுப்புவோம்.

கணக்கை நாங்கள் சரிபார்த்தவுடன், நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

நீங்கள் ஏற்கெனவே போதுமான சேனல் செயல்பாடுகளைக் உருவாக்கியிருந்தால், உங்கள் YouTube கணக்கைச் சரிபார்ப்பது மேம்பட்ட அம்சங்களை அன்லாக் செய்யும்.

பதிவுசெய்யும்போது உங்கள் கணக்கைச் சரிபார்க்கும்படியும் கேட்கப்படக்கூடும்.

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

YouTube எதற்காக எனது மொபைல் எண்ணைக் கேட்கிறது?

ஸ்பேமையும் தவறான பயன்பாட்டையும் கடுமையாகக் கையாள்வோம். மொபைல் எண்கள் மூலம் அடையாளத்தைச் சரிபார்ப்பது நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்குமான ஒரு வழி ஆகும்.

உங்களுக்குச் சரிபார்ப்புக் குறியீட்டை அனுப்ப மொபைல் எண்ணைப் பயன்படுத்துவோம். இந்த மொபைல் எண் ஆண்டுக்கு 2க்கும் மேற்பட்ட சேனல்களுடன் இணைக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்துகொள்வோம்.

கவனத்திற்கு: உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்கமாட்டோம்.

நான் சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறவில்லை

குறியீட்டை உடனடியாகப் பெற்றிருக்க வேண்டும். பெறவில்லையெனில், புதிய குறியீட்டைக் கேட்கலாம். பின்வரும் பொதுவான சிக்கல்களில் எதையும் நீங்கள் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும்:

  • சில நாடுகள்/பிராந்தியங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் Googleளில் இருந்து வரும் மெசேஜ்களை ஆதரிப்பதில்லை: பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் Googleளில் இருந்து வரும் மெசேஜ்களை ஆதரிக்கின்றன. உங்கள் மொபைல் நிறுவனம் Googleளில் இருந்து வரும் மெசேஜ்களை ஆதரிக்கவில்லையெனில், குரல் அழைப்பு விருப்பத்தையோ வேறு மொபைல் எண்ணையோ பயன்படுத்தவும்.
  • ஒரு மொபைல் எண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது: "இந்த மொபைல் எண் மூலம் ஏற்கெனவே அதிகபட்ச எண்ணிக்கையிலான கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்ற பிழைச் செய்தி காட்டப்பட்டால், நீங்கள் வேறு மொபைல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உதவ, ஒரு மொபைல் எண்ணை ஆண்டுக்கு 2 கணக்குகளுடன் மட்டுமே இணைக்கலாம்.
  • மெசேஜைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்: மக்கள்தொகை அதிகமான பகுதிகளிலோ உங்கள் சேவை வழங்கும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலோ தாமதம் ஏற்படலாம். சில நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தும் மெசேஜைப் பெறவில்லையெனில், குரல் அழைப்பு விருப்பத்தைப் பயன்படுத்தவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
617805240029065803
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false