பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை என்பது "வீடியோ அகற்றுதல் அறிக்கை" அல்லது "நீக்கம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது பதிப்புரிமை மீறல் காரணமாக YouTubeல் இருந்து வீடியோக்களை அகற்றுவதற்கான சட்டப்பூர்வக் கோரிக்கையாகும்.

Content ID தொடர்பான உரிமைகோரல்களில் இருந்து பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள் வேறுபட்டவை என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

செயல்முறை மேற்கொள்ளப்படும் விதம்

தங்களுடைய பதிப்புரிமை பெற்ற வீடியோ YouTubeல் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பதிப்புரிமையாளர் கண்டறிந்தால் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை அவர் சமர்ப்பிக்கலாம்.

அகற்றுதல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு

அகற்றுதல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, YouTube அதை மதிப்பாய்வு செய்து பொருந்தக்கூடிய பதிப்புரிமைச் சட்டத்தின்படி தேவையான தகவல்கள் அதில் உள்ளதையும் தவறான பயன்பாட்டிற்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் உறுதிசெய்யும். மதிப்பாய்வில் அகற்றுதல் கோரிக்கை சரியானதுதான் எனத் தீர்மானிக்கப்பட்டால், மீறல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் வீடியோவைப் பொருந்தக்கூடிய பதிப்புரிமைச் சட்டத்தின்படி YouTube அகற்றும்.

உங்கள் அகற்றுதல் கோரிக்கையில் ஏதேனும் தகவல்கள் விடுபட்டாலோ எங்களுக்குக் கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டாலோ, உரிமைகோருபவரை (அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தவர்) மேலும் தகவல்களுக்காக YouTube தொடர்புகொள்ளும். உதாரணமாக, இவற்றை வழங்குமாறு உரிமைகோருபவரிடம் கேட்கப்படலாம்:

  • பதிப்புரிமை பெற்ற படைப்பின் தலைப்பை இன்னும் துல்லியமாக வழங்குமாறு கேட்கப்படலாம்
  • பொருந்தினால், பதிப்புரிமையாளரின் சார்பாகச் செயல்பட அங்கீகரிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படலாம்
  • நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகள் பொருந்துமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையான தகவல்களை நாங்கள் பெறும் வரை கேள்விக்குரிய வீடியோ YouTubeல் இருக்கும்.

வீடியோ நீக்கப்பட்டால்

அகற்றுதல் கோரிக்கை செயலாக்கப்பட்டால் YouTubeல் இருந்து வீடியோ அகற்றப்படும், பதிவேற்றியவரின் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும். பதிப்புரிமை எதிர்ப்பைத் தீர்க்க பதிவேற்றியவருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன.

பொதுவான கேள்விகள்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளை YouTube எப்படி மதிப்பாய்வு செய்கிறது?

தானியங்கு சிஸ்டங்களையும் மதிப்பாய்வாளர்களையும் கொண்டு பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளைச் செயலாக்க எங்கள் தானியங்கு சிஸ்டம் மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்தும். மதிப்பாய்வாளர்களால் எடுக்கப்பட்ட முந்தைய முடிவுகளின் அடிப்படையில் சிஸ்டங்களைத் தொடர்ந்து பயிற்றுவித்து வருகிறோம். கோரிக்கையில் சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் தகவல்கள் அனைத்தும் இருப்பது குறித்து அதிகபட்ச நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அகற்றுதல் கோரிக்கைகள் செயல்படுத்தப்படும். தவறான கோரிக்கைகள் என்பவை ஒரு நபர் தன்னைப் பதிப்புரிமையாளர் என்று தவறாக உறுதிசெய்தல் போன்ற செயல்கள் மூலம் வேண்டுமென்றோ தீங்கிழைக்கும் நோக்கிலோ YouTubeல் இருந்து வீடியோவை அகற்ற முயல்வதாகும்.

வீடியோவை அகற்றுவதற்கான கோரிக்கை சரியானதுதான் (தேவையான சட்டப்பூர்வத் தேவை அனைத்தும் இருத்தல் மற்றும் அவை தவறானவையாக இல்லாமல் இருத்தல்) என்று எங்களின் தானியங்கு சிஸ்டங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு மதிப்பாய்வாளர் கோரிக்கையை மதிப்பீடு செய்வார். கோரிக்கையை மதிப்பாய்வு செய்வதற்குக் கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், மதிப்பாய்வாளர் உரிமைகோருபவரிடம் மின்னஞ்சல் மூலம் அந்தத் தகவல்களைக் கேட்பார். உதாரணமாக, இவற்றை வழங்குமாறு உரிமைகோருபவரிடம் கேட்கப்படலாம்:

  • பதிப்புரிமை பெற்ற படைப்பின் தலைப்பை இன்னும் துல்லியமாக வழங்குமாறு கேட்கப்படலாம்
  • அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பதிப்புரிமையாளரின் சார்பாகச் செயல்பட அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படலாம்
  • சம்பந்தப்பட்ட வீடியோவிற்குப் பதிப்புரிமை விதிவிலக்குகள் (நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்றவை) பொருந்துகின்றனவா என்பதை நீங்கள் சரிபார்த்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

உரிமைகோருபவர் அந்த மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கவில்லை என்றாலோ தேவையான தகவல்களை வழங்கவில்லை என்றாலோ கேள்விக்குரிய வீடியோ YouTubeல் தொடர்ந்து இருக்கும்.

வீடியோவை மதிப்பாய்வு செய்ய தானியங்கு சிஸ்டங்கள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?

அதிக எண்ணிக்கையிலான அகற்றுதல் கோரிக்கைகளுக்கு விரைவான/திறமையான பதில்களை வழங்க தானியங்கு சிஸ்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றின் மூலம் அதிகபட்சத் துல்லியத்தன்மையும் பெறப்படுகிறது.

உதாரணமாக, 2022ல் 1.6 கோடி வீடியோக்களுக்கான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளை YouTube பெற்றது. அகற்றுதல் கோரிக்கைகள் அதிகமாக இருந்தாலும், சரியானதாக இருக்கக்கூடிய அகற்றுதல் கோரிக்கைகளைச் செயலாக்க தானியங்கு சிஸ்டங்களைப் பயன்படுத்தினால் விரைவாகவே அவை குறித்த முடிவுகளை எடுக்க முடிகிறது, இதனால் துல்லியத்தன்மையும் பாதிக்கப்படுவதில்லை. உண்மையில், மதிப்பாய்வாளர்களால் செயலாக்கப்படும் அகற்றுதல்களைக் காட்டிலும் தானியங்கு சிஸ்டங்களால் செயலாக்கப்படும் அகற்றுதல்கள் குறைந்தளவிலேயே மறுபரிசீலனை செய்யும்படி கேட்கப்படுகின்றன.

YouTube சிஸ்டங்கள் வீடியோக்களை எப்படி மதிப்பாய்வு செய்கின்றன என்பது குறித்து மேலும் அறிக.  

வீடியோக்களுக்கான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நான் எப்படிச் சமர்ப்பிப்பது?
வீடியோக்களுக்கான அகற்றுதல் கோரிக்கையை சமர்ப்பிக்க, இங்கே உள்ள படிகளைப் பின்பற்றவும்.
வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கு நான் எப்படிப் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பது?
சேனல் ஐகான், படங்கள் போன்ற வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கு அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க இங்கே உள்ள படிகளைப் பின்பற்றவும். வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கான அகற்றுதல் கோரிக்கைகளை எங்கள் இணையப் படிவம் மூலம் சமர்ப்பிக்க முடியாது. 
முழு சேனலையோ பிளேலிஸ்ட்டையோ அகற்றுமாறு நான் கோரிக்கை சமர்ப்பிக்கலாமா?
இல்லை. உங்களால் அப்படிச் செய்ய முடியாது. பதிப்புரிமையை மீறுவதாகக் கூறும் வீடியோ எதையும் அதன் URL மூலம் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

வீடியோ URLலைப் பெறுவதற்கான வழிமுறை இதோ:

  1. சம்பந்தப்பட்ட வீடியோவை YouTubeல் கண்டறியவும்.
  2. மேலேயுள்ள முகவரிப் பட்டியில் இதுபோன்றதொரு வீடியோ URL இருக்கும்: www.youtube.com/watch?v=xxxxxxxxxxx

பதிப்புரிமைக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க, இங்கே உள்ள படிகளைப் பின்பற்றவும். 

பதிப்புரிமை சார்ந்த புதிய அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு முறையும் நான் ஏன் அனைத்துத் தகவல்களையும் வழங்க வேண்டும்?

பொருந்தக்கூடிய பதிப்புரிமைச் சட்டத்தின்படி, பதிப்புரிமை மீறல் தொடர்பான ஒவ்வொரு புகாருக்கும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் தனித்தனியாக அனுப்ப வேண்டும்.

YouTubeல் உள்நுழைந்து எங்கள் இணையப் படிவத்தின் மூலம் மற்றொரு அகற்றுதல் கோரிக்கையை எளிதில் சமர்ப்பிக்கலாம்.

அவ்வப்போது ஏற்படும் பதிப்புரிமை நிர்வாகத் தேவைகளைக் கொண்ட பதிப்புரிமையாளர்களுக்குக் கூடுதல் பதிப்புரிமை நிர்வாகக் கருவிகளை நாங்கள் வழங்குகிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
எனது பதிப்புரிமையை மீறிய வீடியோ குறித்து நான் YouTubeக்குத் தெரிவித்தவுடன் அது அகற்றப்பட்டது. அந்த வீடியோ தளத்தில் மீட்டெடுக்கப்பட்டிருக்கக்கூடும் எனும் மின்னஞ்சல் எனக்கு ஏன் வந்துள்ளது?
உங்கள் அகற்றுதல் கோரிக்கையை மறுக்கும் வகையில், உள்ளடக்கத்தைப் பதிவேற்றியவரிடமிருந்து எதிர் அறிவிப்பை நாங்கள் பெற்றுள்ளோம். மீறல் செயல்பாட்டைத் தடுப்பதற்காகப் பயனருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை நீங்கள் எடுத்துள்ளதை நிரூபிக்காவிட்டால் வீடியோ மீட்டெடுக்கப்படும். உங்களிடமிருந்து 10 நாட்களுக்குள் அந்த அறிவிப்பை நாங்கள் பெறவில்லையெனில், YouTubeல் அந்த வீடியோவை நாங்கள் மீட்டெடுக்கக்கூடும். எதிர் அறிவிப்புக்குப் பதிலளிப்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
என்னுடைய பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அங்கீகாரமின்றிப் பயன்படுத்த அனுமதிக்கும் கடவுச்சொற்களையோ கம்ப்யூட்டர் புரோகிராம்களையோ வழங்கும் வீடியோக்கள் பற்றி நான் எப்படிப் புகாரளிப்பது?
கடவுச்சொற்கள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது க்ராக்குகளைப் பயன்படுத்தி உங்கள் மென்பொருளுக்கான கட்டுப்பாடுகளை எப்படித் தவிர்ப்பது என்பதை விவரிக்கும் வீடியோ குறித்து எங்களின் பிற சட்டச் சிக்கல்கள் படிவம் மூலம் தெரியப்படுத்துங்கள்.
வேறொரு பிளாட்ஃபார்மில் இருக்கும் எனது வீடியோவின் நகலை எப்படி அகற்றுவது?

உங்களின் YouTube வீடியோ வேறொரு பிளாட்ஃபார்மில் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தால், அதை அகற்றுமாறு கேட்பதற்கு அவர்களின் செயல்முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களுக்காக YouTube அதை அகற்றுமாறு கேட்க முடியாது.

வீடியோக்களைப் பதிவேற்ற கிரியேட்டர்களை அனுமதிக்கும் பெரும்பாலான தளங்கள் Digital Millennium Copyright Actடின் (DMCA) Safe Harbor பிரிவைச் சார்ந்துள்ளன. பதிப்புரிமையாளரிடமிருந்து முழுமையான மற்றும் சரியான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைப் பெற்றால், அவர்கள் வீடியோவை அகற்ற வேண்டும். நியாயமான பயன்பாடு அல்லது நியாயமாகக் கையாளுவது போன்ற சில பதிப்புரிமை விதிவிலக்குகள் இருந்தாலும், உங்கள் படைப்பின் நகல் அந்த விதிவிலக்குக்குத் தகுதிபெறவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் அதை அகற்றுமாறு நீங்கள் கேட்கலாம்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையில் எவற்றையெல்லாம் சேர்க்க வேண்டுமென அறிந்துகொள்ள, DMCA வீடியோ அகற்றுதல் அறிக்கைக்கான தேவைகளைப் படிக்கவும்.

பெரும்பாலான தளங்கள் குறிப்பிட்ட வீடியோவுக்கான URLலைக் கேட்கும். உங்களால் URLலைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், வீடியோவை வலது கிளிக் செய்தோ வீடியோவின் நேரமுத்திரையைக் கிளிக் செய்தோ அதைப் பெற முயலலாம்.

DMCAவைச் சார்ந்துள்ள தளங்கள் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள DMCA ஏஜென்ட்டின் தொடர்புத் தகவல்களை அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகத்திலும் அவர்களின் இணையதளத்திலும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்தத் தளங்கள் ஏதேனும் ஒன்றில் அனுமதியின்றி உங்கள் வீடியோ வெளியிடப்பட்டிருப்பதைப் பார்த்தால், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைக் கீழேயுள்ள தகுந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் அனுப்பலாம். நீங்கள் தேடும் தளம் கீழே பட்டியலிடப்படவில்லை எனில் அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகத்தின் DMCA ஏஜென்ட்டின் தரவுத்தளத்தையும் பார்க்கலாம்.

Dailymotion: notifications@dailymotion.com

Instagram: ip@instagram.com

Facebook: ip@fb.com

TikTok: copyright@tiktok.com

Twitter: copyright@twitter.com

Vimeo: dmca@vimeo.com 

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17448691539726144048
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false