எதிர் அறிவிப்புக்குப் பதிலளித்தல்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையின் காரணமாக உள்ளடக்கம் அகற்றப்படும்போது அதைப் பதிவேற்றியவரோ அவரின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியோ பதிப்புரிமை மீறல் தொடர்பான எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம். இது தவறுதலான குற்றச்சாட்டினாலோ தவறுதலாக அடையாளம் காணப்பட்டதாலோ அகற்றப்பட்ட வீடியோவை மீட்டெடுப்பதற்கான ஒரு சட்டப்பூர்வக் கோரிக்கை ஆகும்.

பின்வருபவை பூர்த்திசெய்யப்படும் பட்சத்தில் உரிமைகோருபவரின் (அசல் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தவர்) பதிலுக்காக எதிர் அறிவிப்புகள் அவருக்கு அனுப்பப்படும்:

  • அனைத்துச் சட்டப்பூர்வத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டிருக்க வேண்டும்
  • பதிவேற்றியவர் அந்த வீடியோவைப் பயன்படுத்த அவருக்கு உள்ள உரிமையைத் தெளிவாக விவரித்திருக்க வேண்டும்
விவாதத்திற்குட்பட்ட வீடியோ YouTubeல் மீட்டெடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதற்கான ஆதாரத்துடன் பதிலளிக்க, உரிமைகோருபவர்களுக்கு 10 அமெரிக்க வணிக நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

சட்ட நடவடிக்கைக்கான ஆதாரத்தைப் பெறுதல்

எதிர் அறிவிப்புக்குப் பதிலளிக்க, பின்வரும் சட்ட நடவடிக்கைகளில் ஏதேனுமொன்றை மேற்கொண்டதற்கான ஆதாரத்தை உரிமைகோருபவர்கள் சேர்க்க வேண்டும்:

  • மீறல் குற்றம் சாட்டப்பட்ட செயல்பாட்டைத் தடுப்பதற்காக, பதிவேற்றியவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவைக் கோரும் நடவடிக்கை (சேதங்களுக்கான உரிமைகோரல் மட்டுமல்ல).
  • பதிவேற்றியவருக்கு (அவர் அமெரிக்காவில் வசித்தால்) எதிராக அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகத்தின் பதிப்புரிமைக் கோரல்கள் வாரியத்தில் (CCB - Copyright Claims Board) தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மீறலுக்கான உரிமைகோரல் (பொருந்தும் பட்சத்தில்).

பதிவேற்றியவரின் பெயரும் விவாதத்திற்குட்பட்ட குறிப்பிட்ட வீடியோவும் உரிமைகோருபவரின் நடவடிக்கை அல்லது உரிமைகோரலில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் (YouTube வீடியோ URLகள் போன்றவை). ஏற்கக்கூடிய ஆதாரமாக இவற்றில் ஏதேனுமொன்றின் நகலைச் சமர்ப்பிக்கலாம்:

  • நீதிமன்ற வழக்கு
  • நீதிமன்ற உத்தரவு
  • CCB உரிமைகோரல்
  • CCBயில் மீறல் உறுதிப்படுத்தப்பட்டதற்கான தீர்மானம்

பதிப்புரிமை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகாரமுடைய நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அமெரிக்காவில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளைப் பொறுத்தவரை, அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுபவற்றை மட்டுமே நாங்கள் ஏற்கிறோம்.

பொய்யான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். எங்கள் செயல்முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவது (மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது போன்றவை) உங்கள் கணக்கை இடைநீக்குவதற்கோ பிற சட்டப்பூர்வ விளைவுகளுக்கோ வழிவகுக்கக்கூடும்.

மின்னஞ்சல் மூலம் பதிலளித்தல்

ஓர் எதிர் அறிவிப்புக்குப் பதிலளிக்க:

  1. மேலே விவரித்துள்ளபடி, சட்ட நடவடிக்கைக்கான ஆதாரத்தின் நகலைப் பெறவும்.
    • கிளவுடில் சேமிக்கப்பட்டுள்ள ஃபைல்களுக்கான இணைப்புகள் ஏற்கப்படாது (Google Drive இணைப்புகள் போன்றவை).
  2. YouTubeல் இருந்து முன்னனுப்பப்பட்ட எதிர் அறிவிப்பு மின்னஞ்சலுக்குச் செல்லவும்.
    • அசல் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிக்கு எதிர் அறிவிப்புகள் அனுப்பப்படும். 
  3. ஆதாரத்தின் நகலுடன் அந்த மின்னஞ்சலுக்கு நேரடியாகப் பதிலளிக்கவும்.
    • உங்கள் பதிலைப் புதிய மின்னஞ்சலாக YouTubeக்கு அனுப்ப வேண்டாம்.

பொதுவான கேள்விகள்

எதிர் அறிவிப்புக்குப் பதிலளிக்க எவ்வளவு கால அவகாசம் வழங்கப்படும்?
சட்ட நடவடிக்கைக்கான தேவையான ஆதாரத்துடன் எதிர் அறிவிப்பு மின்னஞ்சலுக்குப் பதிலளிக்க உரிமைகோருபவர்களுக்கு 10 அமெரிக்க வணிக நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
சட்ட நடவடிக்கைக்கான ஆதாரத்தை நான் சமர்ப்பித்த பிறகு என்ன நடக்கும்?
சட்ட நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, விவாதத்திற்குட்பட்ட வீடியோ YouTubeல் மீட்டெடுக்கப்படாது. அத்துடன், சட்ட நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது பதிப்புரிமை மீறலுக்கான உரிமைகோரலும் எதிர் அறிவிப்பும் தீர்க்கப்படாதவையாகக் கருதப்படும்.
எதிர் அறிவிப்புக்கு நான் பதிலளிக்கவில்லை எனில் என்ன நடக்கும்?
உரிமைகோருபவர் எதிர் அறிவிப்புக்குப் பதிலளிக்கவில்லை என்றாலோ ஆதாரம் போதுமானதாக இல்லை அல்லது விடுபட்டிருந்தாலோ விவாதத்திற்குட்பட்ட வீடியோ YouTubeல் மீட்டெடுக்கப்படலாம்.

கூடுதல் தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6693470658124923760
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false