Content ID உரிமைகோரலை மறுபரிசீலனை செய்யக் கோருதல்

Content ID உரிமைகோரலை நீங்கள் மறுத்துள்ளீர்கள், ஆனால் உரிமைகோரல் மறுவுறுதி செய்யப்படுகிறது எனில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கு நீங்கள் தகுதிபெறக்கூடும். Content ID உரிமைகோரலின் காரணமாக உங்கள் வீடியோ தடைசெய்யப்பட்டிருந்தால், தொடக்கநிலைப் படியான உரிமைகோரல் மறுப்புச் செயல்முறையைத் தவிர்த்துவிட்டு மறுபரிசீலனை செய்யக் கோரும் செயல்முறையை நீங்கள் தொடங்கலாம்.

Content ID உரிமைகோரலை நீங்கள் மறுபரிசீலனை செய்யக் கோரினால், உங்கள் வீடியோவை உரிமைகோரியவருக்கு (உரிமைகோருபவர்) அதுகுறித்து அறிவிக்கப்படும். அதற்குப் பதிலளிக்க அவருக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

 

மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கு முன்பு

மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கு நீங்கள் தகுதிபெறுகிறீர்களா என்பதைச் சேனல் அம்சங்கள் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் தகுதிபெறவில்லை எனில், மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கு முன்பு 'ஒருமுறை நிகழும் சரிபார்ப்பை' நீங்கள் நிறைவுசெய்ய வேண்டியிருக்கலாம்.

உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருக்கின்றன என உறுதியாக நம்பினால் மட்டுமே மறுபரிசீலனைக்குக் கோர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறுபரிசீலனைச் செயல்முறையைத் தொடர்ந்து தவறாகவோ தீங்கிழைக்கும் விதத்திலோ உபயோகிப்பது மறுபரிசீலனைக்குக் கோருவதற்கான தகுதிநிலையை நீங்கள் இழப்பதற்கோ உங்கள் வீடியோ/சேனல் மீது பிற நடவடிக்கைகளை எடுப்பதற்கோ வழிவகுக்கலாம்.

மறுவுறுதி செய்யப்பட்ட உரிமைகோரலை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டல்

 Content ID உரிமைகோரலை நீங்கள் மறுத்து அந்த மறுப்பு நிராகரிக்கப்பட்டால், உங்கள் வீடியோவின் மீதான உரிமைகோரல் மறுவுறுதி செய்யப்படும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி நீங்கள் கேட்கலாம். மறுவுறுதி செய்யப்பட்ட உரிமைகோரலை மறுபரிசீலனை செய்யும்படி கேட்க:

Android சாதனத்திற்கான YouTube Studio ஆப்ஸ்

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழ்ப்புற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தட்டவும்.
  3. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வீடியோவைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டின் மீது தட்டவும்.
    • வீடியோவை மிக எளிதாகக் கண்டறிய ஃபில்டர் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யலாம்.
  4. சிக்கல்களைச் சரிபாருங்கள் என்பதைத் தட்டவும்.
  5. தொடர்புடைய உரிமைகோரலைத் தட்டவும்.
  6. மறுபரிசீலனைக்கான காரணத்தை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல்

Content ID உரிமைகோரல் காரணமாக உங்கள் வீடியோ தடைசெய்யப்பட்டிருந்தால், தொடக்கநிலைப் படியான உரிமைகோரல் மறுப்புச் செயல்முறையைத் தவிர்த்துவிட்டு மறுபரிசீலனை செய்யக் கோரும் செயல்முறையை நீங்கள் தொடங்கலாம். இந்த விருப்பம் “நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல்” என்று அழைக்கப்படுகிறது.

மறுபரிசீலனைகளுக்குப் பதிலளிக்க உரிமைகோருபவர்களுக்கு 7 நாட்களே அவகாசம் இருப்பதால், தவறான உரிமைகோரல்கள் என நீங்கள் உறுதியாக நம்பும் 'தடைசெய்யும் உரிமைகோரல்களுக்கு' இந்த விருப்பத்தின் மூலம் ஒட்டுமொத்த மறுப்புச் செயல்முறைக்கும் விரைவாகத் தீர்வுபெறலாம். கூடிய விரைவில் உங்கள் வீடியோ YouTubeல் காட்டப்படலாம் என்பதும் இதன் அர்த்தமாகும்.

கவனத்திற்கு: உரிமைகோருபவர் மறுபரிசீலனைக் கோரிக்கையை நிராகரித்தால், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை அவர் சமர்ப்பிக்கலாம். அகற்றுதல் கோரிக்கை சரியானது எனில் YouTubeல் இருந்து உங்கள் வீடியோ அகற்றப்படும். மேலும் உங்கள் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும். எனினும், உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருக்கிறது என இன்னமும் நீங்கள் உறுதியாக நம்பினால் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல் விருப்பத்தைத் தேர்வுசெய்ய:

Android சாதனத்திற்கான YouTube Studio ஆப்ஸ்

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழ்ப்புற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தட்டவும்.
  3. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வீடியோவைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டின் மீது தட்டவும்.
    • வீடியோவை மிக எளிதாகக் கண்டறிய ஃபில்டர் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யலாம்.
  4. சிக்கல்களைச் சரிபாருங்கள் என்பதைத் தட்டவும்.
  5. தொடர்புடைய உரிமைகோரலைத் தட்டவும்.
  6. உரிமைகோரலை மறுத்தல் என்பதைத் தட்டவும். விருப்பத்தேர்வுகள் பக்கத்தில் நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மறுபரிசீலனை செய்வதற்குக் கோரிய பிறகு

உரிமைகோரலை மறுபரிசீலனை செய்வதற்கு நீங்கள் கோரிய பிறகு, அதற்குப் பதிலளிக்க உரிமைகோருபவருக்கு 7 நாட்கள் வழங்கப்படும்.

உரிமைகோருபவர் செய்யக்கூடியவை

உங்கள் வீடியோ YouTubeல் இருந்து அகற்றப்பட்டிருந்து, உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் இன்னும் உங்களிடம் இருக்கிறது என நீங்கள் உறுதியாக நம்பினால் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

மறுபரிசீலனைக் கோரிக்கையை எப்படி ரத்துசெய்வது?

மறுபரிசீலனைக்குச் சமர்ப்பித்த பிறகு நீங்கள் மனதை மாற்றிக் கொண்டால், அதனை ரத்துசெய்யலாம். மறுபரிசீலனைக் கோரிக்கையை ரத்துசெய்ய:

Android சாதனத்திற்கான YouTube Studio ஆப்ஸ்

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழ்ப்புற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தட்டவும்.
  3. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வீடியோவைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டின் மீது தட்டவும்.
    • வீடியோவை மிக எளிதாகக் கண்டறிய ஃபில்டர் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யலாம்.
  4. சிக்கல்களைச் சரிபாருங்கள் என்பதைத் தட்டவும்.
  5. தொடர்புடைய உரிமைகோரலைத் தட்டி, அதன்பிறகு மறுபரிசீலனையை ரத்துசெய் என்பதைத் தட்டவும்.
குறிப்பு: மறுபரிசீலனைக் கோரிக்கையை ரத்துசெய்துவிட்டால், மீண்டும் மறுபரிசீலனைக்குக் கேட்க முடியாது.
இந்த வீடியோவின் "Content ID தொடர்பான மறுபரிசீலனைச் செயல்முறை" எனும் அத்தியாயத்தில் மறுபரிசீலனைச் செயல்முறை குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்:

Content ID உரிமைகோரல்கள் & மறுக்கும் செயல்பாடுகள்: Studioவில் உரிமைகோரல்களை நிர்வகித்தல் & நடவடிக்கை எடுத்தல்

 

பொதுவான கேள்விகள்

மறுப்பு, மறுபரிசீலனைக்குக் கோருதல் ஆகிய விருப்பத்தேர்வுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

தொடக்கநிலை மறுப்புப் படியில், உரிமைகோருபவர் மறுப்பிற்குப் பதிலளிக்க 30 நாட்கள் வரை அவகாசம் தரப்படலாம். உரிமைகோருபவர் உங்கள் மறுப்பை நிராகரித்தால், முடிவை எதிர்த்து மறுபரிசீலனை செய்யுமாறு கோர நீங்கள் தகுதிபெறக்கூடும். அதன் பிறகு, மறுபரிசீலனைக்குப் பதிலளிக்க உரிமைகோருபவருக்கு 7 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது.

'மறுபரிசீலனைக்குக் கோருதல்' என்ற விருப்பத்தேர்வு உங்கள் வீடியோவைத் தடைசெய்யும் Content ID உரிமைகோரல்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதைத் தேர்ந்தெடுத்தால், மறுப்புச் செயல்முறை (உரிமைகோருபவர் 30 நாட்களுக்குள் பதிலளிப்பதற்கான விருப்பத்தேர்வை இது வழங்கும்) தவிர்க்கப்பட்டு, மறுபரிசீலனைக்குக் கோரும் செயல்முறை தொடங்கும். இதற்கு உரிமைகோருபவர் 7 நாட்களில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதால் உரிமைகோரலை மறுக்கும் செயல்முறை விரைவாகத் தீர்க்கப்படும்.

உரிமைகோருபவர் உங்கள் மறுபரிசீலனையை நிராகரித்தால், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை அவர் சமர்ப்பிக்கலாம். அகற்றுதல் கோரிக்கை சரியானது எனத் தீர்மானிக்கப்பட்டால் YouTubeல் உங்கள் வீடியோ அகற்றப்படும். மேலும் உங்கள் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும். கவனத்திற்கு: அகற்றுதல் கோரிக்கை தவறானது எனக் கருதினால் நீங்கள் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல் விருப்பத்தை நான் எப்போது தேர்வுசெய்ய வேண்டும்?

வீடியோவைத் தடைசெய்யும் Content ID உரிமைகோரலை உங்கள் வீடியோ பெற்றிருந்தால் 'நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல்' விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம். உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நம்பினால் மற்றும் உரிமைகோரல் மறுப்புச் செயல்முறைக்கு விரைவான தீர்வைப் பெற விரும்பினால், ‘நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல்’ விருப்பம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 

ஆனால் உரிமைகோருபவர் மறுபரிசீலனைக் கோரிக்கையை நிராகரித்தால், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அகற்றுதல் கோரிக்கை சரியானது எனில் YouTubeல் இருந்து உங்கள் வீடியோ அகற்றப்படும். மேலும் உங்கள் சேனல் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும். எனினும், உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருக்கிறது என இன்னமும் நீங்கள் உறுதியாக நம்பினால் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

நேரடி மறுபரிசீலனைக்கு எப்போது அனுப்ப வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். என்ன செய்வது எனத் தெரியவில்லையெனில் சட்ட ஆலோசனையைப் பெறலாம்.

எனது வீடியோவைத் தடைசெய்யும் Content ID உரிமைகோரல்களுக்கு மட்டுமே ‘நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல்’ விருப்பம் கிடைக்கிறது, ஏன்?

தடைசெய்யும் உரிமைகோரல்களைப் பெறும் வீடியோக்களை உலகளவிலோ குறிப்பிட்ட சில நாடுகள்/பிராந்தியங்களிலோ (உரிமைகோருபவரின் கொள்கையைப் பொறுத்து) YouTubeல் பார்க்க முடியாது. தடைசெய்யும் உரிமைகோரல்கள் தவறானவை என நீங்கள் உறுதியாக நம்பினால், 'நேரடி மறுபரிசீலனைக்கு அனுப்புதல்' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து விரைவான தீர்வைப் பெறலாம். கூடிய விரைவில் உங்கள் வீடியோ YouTubeல் காட்டப்படலாம் என்பதே இதன் அர்த்தமாகும்.

Content ID உரிமைகோரல் இருந்தாலும், பிற உரிமைகோரல் வகைகளைப் பொறுத்தவரை (வருமானம் ஈட்டுதல் & கண்காணித்தல்) உங்கள் வீடியோ தொடர்ந்து YouTubeல் காட்டப்படும். கவனத்திற்கு: வருமானம் ஈட்டுதல் தொடர்பான உரிமைகோரல்களில், உரிமைகோரப்பட்ட வீடியோ மூலம் நீங்களும் உரிமைகோருபவரும் வருமானம் ஈட்ட முயன்றால் உரிமைகோரல் மறுப்புச் செயல்முறையின்போதும் வீடியோ தொடர்ந்து வருமானம் ஈட்டும். சிக்கல் தீர்க்கப்பட்ட பிறகு, சரியான உரிமையாளருக்கு வருவாய் வழங்கப்படும். Content ID உரிமைகோரலுக்கான மறுப்புச் செயல்முறையின்போது வருமானம் ஈட்டுதல் எவ்வாறு செயல்படும் என்பது பற்றி மேலும் அறிக.
மறுபரிசீலனைக் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு அதை ரத்துசெய்ய முடியுமா?
ஆம். மறுபரிசீலனைக் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு இந்தப் படிகளைப் பின்பற்றி அதை ரத்துசெய்யலாம். ரத்துசெய்த பிறகு, உரிமைகோரலை மறுபரிசீலனை செய்வதற்கு மீண்டும் கோர முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
எனது மறுபரிசீலனைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எனது வீடியோ அகற்றப்பட்டால் என்ன செய்வது?

உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கை தவறுதலாகவோ உங்கள் வீடியோ தவறாக அடையாளம் காணப்பட்டதாலோ நிராகரிக்கப்பட்டிருக்கலாம் (நியாயமாகப் பயன்படுத்தியிருக்கும் சூழ்நிலைகளிலும்கூட) என நீங்கள் உறுதியாக நம்பினால் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம். எதிர் அறிவிப்பு என்பது பதிப்புரிமை மீறல் காரணமாக அகற்றப்பட்ட வீடியோவை YouTubeல் மீண்டும் காட்டுவதற்கான ஒரு சட்டப்பூர்வக் கோரிக்கை ஆகும்.

இதிலடங்கும் பிற விருப்பங்கள்:

ஒரு வீடியோவில் உள்ள பல உரிமைகோரல்களை ஒரே நேரத்தில் மறுபரிசீலனை செய்வதற்குக் கோருவது பல பதிப்புரிமை எதிர்ப்புகளைப் பெறுவதற்கு வழிவகுக்குமா?
ஒரு வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட Content ID உரிமைகோரல்களையோ அகற்றுதல் கோரிக்கைகளையோ பெறலாம். ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பதிப்புரிமை எதிர்ப்பை மட்டுமே பெறும்.
 

கூடுதல் தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12702220973832986545
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false