அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் மேம்பட்ட தேடலை மேற்கொள்ளுதல்

மேம்பட்ட தேடல் மூலம் சிக்கலான தேடல்களின் முடிவுகளை மாற்றியமைக்கலாம். உதாரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் ஜெர்மன் மொழியில் புதுப்பிக்கப்பட்ட தளங்களையோ கருப்பு வெள்ளையில் இருக்கும் கிளிப்-ஆர்ட் படங்களையோ கண்டறியலாம்.

உதவிக்குறிப்பு: Google தேடல் பெட்டியில், மேற்கோள்கள், மைனஸ் குறிகள், site: போன்ற தேடும் ஆப்பரேட்டர்கள் மூலம் நீங்கள் மேம்பட்ட தேடல் வடிப்பான்களைப் பயன்படுத்தலாம். தேடும் ஆப்பரேட்டர்கள் குறித்து மேலும் அறிக.

Googleளில் மேம்பட்ட தேடல் என்பதற்குச் செல்லவும்

முக்கியம்: சில வகையான முடிவுகளுக்கு மேம்பட்ட தேடல் கிடைப்பதில்லை.

  1. கம்ப்யூட்டரில் google.com தளத்திற்குச் சென்று எதையேனும் தேடவும்.
  2. தேடல் பெட்டிக்குக் கீழே உள்ள அனைத்தும், படங்கள், வீடியோக்கள், புத்தகங்கள் போன்ற நீங்கள் பெற விரும்பும் முடிவுகளின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தேடல் பெட்டிக்குக் கீழே உள்ள கருவிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கருவிகள் என்பதற்குக் கீழே உள்ள மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.

மேம்பட்ட தேடல் வினவல் புலங்களைப் பயன்படுத்துதல்

முக்கியம்: மேம்பட்ட தேடல் பக்கங்களுக்கு ஏற்ப தேடல் வினவல் புலங்கள் வேறுபடலாம்.

மேம்பட்ட தேடலில், உங்கள் முடிவுகளில் சேர்க்கவோ அகற்றவோ சொற்கள் அல்லது சொற்றொடர்களைத் தேர்வுசெய்ய முடியும். இவற்றைத் தேர்வுசெய்யலாம்:

  • “இந்தச் சொற்கள் அனைத்தும்”: நீங்கள் உள்ளிடும் சொற்கள் அனைத்தும் முடிவுகளில் இருக்கும்.
  • “இந்தச் சொல் அல்லது சொற்றொடர்”: நீங்கள் உள்ளிடும் ஒரு சொல் அல்லது சொற்றொடர் முடிவுகளில் இருக்கும்.
  • “இந்தச் சொற்களில் ஏதேனும் ஒன்று”: நீங்கள் உள்ளிடும் சொற்களில் ஒன்று முடிவுகளில் இருக்கும்.
  • “இந்தச் சொற்களைத் தவிர்”: நீங்கள் உள்ளிடும் எந்தச் சொற்களும் முடிவுகளில் இருக்காது.
  • “இந்த எண்களுக்குள்”: நீங்கள் உள்ளிடும் 2 எண்களில் ஓர் எண் முடிவுகளில் இருக்கும்.

மேம்பட்ட தேடலை மேற்கொள்ளுதல்

இணையப் பக்கங்களையும் கோப்புகளையும் தேடுதல்
  1. கம்ப்யூட்டரில் மேம்பட்ட தேடல் என்பதற்குச் செல்லவும்: google.com/advanced_search.
  2. “இவை உள்ள பக்கங்களைக் கண்டறி” என்பதன் கீழ், பின்வருவனவற்றுக்கான வினவல் புலங்களைத் தேர்வுசெய்யவும்:
    • உங்கள் முடிவுகளில் துல்லியமான சொற்களையோ பல சொற்களையோ சேர்ப்பதற்கான புலம்.
    • உங்கள் முடிவுகளிலிருந்து சொற்களை அகற்றுவதற்கான புலம்.
  3. உங்கள் முடிவுகளில் சேர்க்கவோ அகற்றவோ விரும்பும் சொற்களை உள்ளிடவும்.
    • மேற்கோள்கள், மைனஸ் குறிகள் போன்ற தேடும் ஆப்பரேட்டர்கள் இல்லாமல் சொற்களைச் சேர்க்கவும்.
  4. "இதன்மூலம் முடிவுகளைத் துல்லியப்படுத்து" என்பதன் கீழ், உங்களுக்கு விருப்பமான வடிப்பான்களைத் தேர்வுசெய்யவும்.
    • ஒன்றுக்கும் மேற்பட்ட வடிப்பான்களைச் சேர்க்கலாம்.
  5. மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்த வடிப்பான்களைப் பயன்படுத்திப் பாருங்கள்

  • மொழி: குறிப்பிட்ட மொழியிலுள்ள வீடியோக்களைக் கண்டறியலாம்.
  • பிராந்தியம்: குறிப்பிட்ட பிராந்தியத்தில் வெளியிடப்பட்ட பக்கங்களைக் கண்டறியலாம்.
  • கடைசியாகப் புதுப்பித்தது: நீங்கள் தேர்ந்தெடுத்த நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்ட பக்கங்களைக் கண்டறியலாம்.
  • தளம் அல்லது டொமைன்: wikipedia.org போன்ற ஒரு தளத்தைத் தேடலாம். அல்லது .edu, .org, .gov போன்ற டொமைனுக்கான முடிவுகளை மட்டும் காட்டும்படி அமைக்கலாம்.
  • தோன்றும் வார்த்தைகள்: பக்கத்தின் குறிப்பிட்ட பகுதியான தலைப்பு, உரை, URL போன்றவை உங்கள் தேடல் வார்த்தைகளில் இருக்கும் வகையில் பக்கங்களைக் கண்டறியலாம்.
  • பாதுகாப்பான தேடல்: வெளிப்படையான முடிவுகளை அகற்றலாம். பாதுகாப்பான தேடல் குறித்து மேலும் அறிக.
  • கோப்பு வகை: .pdf, .ps, .dwf, .kml, .kmz, .xls, .ppt, .doc, .rtf, .swf போன்ற குறிப்பிட்ட வடிவமைப்பில் இருக்கும் கோப்புகளைக் கண்டறியலாம்.
  • பயன்பாட்டிற்கான உரிமை: உரிமம் தொடர்பான தகவலைக் கொண்ட பக்கங்களைக் கண்டறியலாம்.
படங்களைத் தேடுதல்
முக்கியம்: படங்கள் பதிப்புரிமைக்கு உட்பட்டவையாக இருக்கலாம். மீண்டும் பயன்படுத்துவதற்கான படங்களை எப்படிக் கண்டறிவது என அறிக.
  1. கம்ப்யூட்டரில் மேம்பட்ட படத் தேடல் என்பதற்குச் செல்லவும்: google.com/advanced_image_search.
  2. “இவை உள்ள படங்களைக் கண்டறி” என்பதன் கீழ், பின்வருவனவற்றுக்கான வினவல் புலங்களைத் தேர்வுசெய்யவும்:
    • உங்கள் முடிவுகளில் துல்லியமான சொற்களையோ பல சொற்களையோ சேர்ப்பதற்கான புலம்.
    • உங்கள் முடிவுகளிலிருந்து சொற்களை அகற்றுவதற்கான புலம்.
  3. உங்கள் முடிவுகளில் சேர்க்கவோ அகற்றவோ விரும்பும் சொற்களை உள்ளிடவும்.
    • மேற்கோள்கள், மைனஸ் குறிகள் போன்ற தேடும் ஆப்பரேட்டர்கள் இல்லாமல் சொற்களைச் சேர்க்கவும்.
  4. "இதன்மூலம் முடிவுகளைத் துல்லியப்படுத்து" என்பதன் கீழ், உங்களுக்கு விருப்பமான வடிப்பான்களைத் தேர்வுசெய்யவும்.
    • ஒன்றுக்கும் மேற்பட்ட வடிப்பான்களைப் பயன்படுத்தலாம்.
  5. மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்த வடிப்பான்களைப் பயன்படுத்திப் பாருங்கள்

  • பட அளவு: அளவு அல்லது பரிமாணத்தின்படி படங்களைக் கண்டறியலாம்.
  • தோற்ற விகிதம்: உயரம், சதுரம், அகலம், பனோரமா போன்ற குறிப்பிட்ட வடிவத்தில் இருக்கும் படங்களைக் கண்டறியலாம்.
  • படத்திலுள்ள வண்ணங்கள்: முழு வண்ணம், கருப்பு வெள்ளை, தெளிவாகத் தெரியும் படங்கள் போன்றவற்றின்படி கண்டறியலாம். அல்லது குறிப்பிட்ட வண்ணத்தில் இருக்கும் படங்களைத் தேடலாம்.
  • பட வகை: படங்கள், கிளிப்-ஆர்ட், கோட்டோவியங்கள் போன்ற குறிப்பிட்ட வகையிலான படத்தைக் கண்டறியலாம். அல்லது முகத்தையோ அனிமேஷன் படங்களையோ தேடலாம்.
  • பிராந்தியம்: குறிப்பிட்ட பிராந்தியத்தில் வெளியிடப்பட்ட படங்களைக் கண்டறியலாம்.
  • தளம் அல்லது டொமைன்: sfmoma.org போன்ற ஒரு தளத்தைத் தேடலாம். அல்லது .edu, .org, .gov போன்ற டொமைனுக்கான முடிவுகளை மட்டும் காட்டும்படி அமைக்கலாம்.
  • பாதுகாப்பான தேடல்: வெளிப்படையான முடிவுகளை அகற்றலாம். பாதுகாப்பான தேடல் குறித்து மேலும் அறிக.
  • கோப்பு வகை: JPG, GIF, PNG, BMP, SVG, WEBP, ICO, RAW போன்ற குறிப்பிட்ட வடிவமைப்பில் படங்களைக் கண்டறியலாம்.
  • பயன்பாட்டிற்கான உரிமை: உரிமம் தொடர்பான தகவலைக் கொண்ட படங்களைக் கண்டறியலாம். படங்களில் பயன்பாட்டிற்கான உரிமை குறித்து மேலும் அறிக.
வீடியோக்களைத் தேடுதல்
  1. கம்ப்யூட்டரில் மேம்பட்ட வீடியோ தேடல் என்பதற்குச் செல்லவும்: google.com/advanced_video_search.
  2. “இவை உள்ள வீடியோக்களைக் கண்டறி” என்பதன் கீழ், பின்வருவனவற்றுக்கான வினவல் புலங்களைத் தேர்வுசெய்யவும்:
    • உங்கள் முடிவுகளில் துல்லியமான சொற்களையோ பல சொற்களையோ சேர்ப்பதற்கான புலம்.
    • உங்கள் முடிவுகளிலிருந்து சொற்களை அகற்றுவதற்கான புலம்.
  3. உங்கள் முடிவுகளில் சேர்க்கவோ அகற்றவோ விரும்பும் சொற்களை உள்ளிடவும்.
    • மேற்கோள்கள், மைனஸ் குறிகள் போன்ற தேடும் ஆப்பரேட்டர்கள் இல்லாமல் சொற்களைச் சேர்க்கவும்.
  4. "இதன்மூலம் முடிவுகளைத் துல்லியப்படுத்து" என்பதன் கீழ், உங்களுக்கு விருப்பமான வடிப்பான்களைத் தேர்வுசெய்யவும்.
    • ஒன்றுக்கும் மேற்பட்ட வடிப்பான்களைப் பயன்படுத்தலாம்.
  5. மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்த வடிப்பான்களைப் பயன்படுத்திப் பாருங்கள்

  • மொழி: குறிப்பிட்ட மொழியிலுள்ள வீடியோக்களைக் கண்டறியலாம்.
  • கால அளவு: 0–4 நிமிடங்கள், 4–20 நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்களுக்கு மேலுள்ள வீடியோக்களைக் கண்டறியலாம்.
  • வெளியிட்ட தேதி: கடந்த ஒரு மணிநேரம், நாள், வாரம், மாதம், ஆண்டு போன்ற குறிப்பிட்ட கால அளவிற்குள் வெளியிட்ட அல்லது புதுப்பித்த வீடியோக்களைக் கண்டறியலாம்.
  • தரம்: HD வீடியோக்களை மட்டும் காட்டப்படும்படி அமைக்கலாம்.
  • தளம் அல்லது டொமைன்: youtube.com போன்ற ஒரு தளத்தைத் தேடலாம். அல்லது .edu, .org, .gov போன்ற டொமைனுக்கான முடிவுகளை மட்டும் காட்டப்படும்படி அமைக்கலாம்.
  • வசனங்கள்: வசனங்களுடன் இருக்கும் வீடியோக்களைக் கண்டறியலாம்.
  • பாதுகாப்பான தேடல்: வெளிப்படையான முடிவுகளை அகற்றலாம். பாதுகாப்பான தேடல் குறித்து மேலும் அறிக.
புத்தகங்களைத் தேடுதல்
முக்கியம்: தேடல் சொல், தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டாளர், பொருள், ISBN, ISSN ஆகியவற்றில் ஒன்று உங்கள் தேடலில் இருக்க வேண்டும்.
  1. கம்ப்யூட்டரில் மேம்பட்ட புத்தகத் தேடல் என்பதற்குச் செல்லவும்: google.com/advanced_book_search.
  2. “முடிவுகளைக் கண்டறி” என்பதன் கீழ், பின்வருவனவற்றுக்கான வினவல் புலங்களைத் தேர்வுசெய்யவும்:
    • உங்கள் முடிவுகளில் துல்லியமான சொற்களையோ பல சொற்களையோ சேர்ப்பதற்கான புலம்.
    • உங்கள் முடிவுகளிலிருந்து சொற்களை அகற்றுவதற்கான புலம்.
  3. உங்கள் முடிவுகளில் சேர்க்கவோ அகற்றவோ விரும்பும் சொற்களை உள்ளிடவும்.
    • மேற்கோள்கள், மைனஸ் குறிகள் போன்ற தேடும் ஆப்பரேட்டர்கள் இல்லாமல் சொற்களைச் சேர்க்கவும்.
  4. அடுத்த பிரிவில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் வடிப்பான்களைத் தேர்வுசெய்யவும்.
  5. மேல் வலதுபுறத்தில் Google Search என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்த வடிப்பான்களைப் பயன்படுத்திப் பாருங்கள்

  • தேடல்: உங்கள் தேடலில் என்ன இருக்க வேண்டுமென்பதைத் தேர்வுசெய்யவும், எடுத்துக்காட்டாக:
    • மாதிரிப் பக்கங்களுடனோ முழுக் காட்சியுடனோ கிடைக்கும் புத்தகங்கள்.
    • முழுக் காட்சியுடன் மட்டும் கிடைக்கும் புத்தகங்கள்.
  • Google மின்புத்தகங்கள் மட்டும்.
  • உள்ளடக்கம்: புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் போன்ற குறிப்பிட்ட வகையான முடிவுகளை மட்டும் காட்டப்படும்படி அமைக்கலாம்.
  • மொழி: குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைக் கண்டறியலாம்.
  • தலைப்பு: புத்தகத்தின் தலைப்பை உள்ளிடலாம்.
  • நூலாசிரியர்: குறிப்பிட்ட ஆசிரியர் எழுதிய புத்தகங்களைக் கண்டறியலாம்.
  • வெளியீட்டாளர்: குறிப்பிட்ட வெளியீட்டாளர் தொடர்பான முடிவுகளை மட்டும் காட்டப்படும்படி அமைக்கலாம்.
  • பொருள்: குறிப்பிட்ட தலைப்புடன் தொடர்புடைய புத்தகங்களைக் கண்டறியலாம்.
  • வெளியீட்டுத் தேதி: குறிப்பிட்ட தேதிகளுக்கு இடையே வெளியான புத்தகங்களுக்கான முடிவுகளை மட்டும் காட்டப்படும்படி அமைக்கலாம்.
  • ISBN: சர்வதேச நிலையான புத்தக எண் (International Standard Book Number - ISBN) அடிப்படையில் புத்தகத்தைக் கண்டறியலாம்.
  • ISSN: சர்வதேச நிலையான தொடர் எண் (International Standard Serial Number - ISSN) அடிப்படையில் தொடரைக் கண்டறியலாம்.

தொடர்புடைய தகவல் மூலங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17858720832347264319
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false