அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

நீங்கள் நிர்வகிக்கும் கணக்குகள், சாதனங்கள், நெட்வொர்க்குகள் ஆகியவற்றில் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை லாக் செய்தல்

கணக்குகள், சாதனங்கள், நெட்வொர்க்குகள் ஆகியவற்றை நீங்கள் நிர்வகித்தால் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் மூலம் Google தேடல் முடிவுகளில் வெளிப்படையான உள்ளடக்கம் காட்டப்படுவதை வடிகட்டலாம். ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை இயக்கத்திலேயே வைத்திருப்பதற்கும் அமைப்பைப் பயனர்கள் மாற்றுவதைத் தடுப்பதற்கும் நீங்கள் இந்த அம்சத்தை லாக் செய்யலாம்.

முக்கியம்: இந்தக் கட்டுரை ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்புகளைப் பிறருக்காக நிர்வகிப்பவர்களுக்கானது. தனிப்பட்ட கணக்கிற்கான ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்புகளை மாற்ற, ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தைப் பயன்படுத்தி வெளிப்படையான முடிவுகளை வடிகட்டுவதற்கான அல்லது மங்கலாக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.

‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை இவற்றில் லாக் செய்யலாம்

  • பெற்றோர், காப்பாளர் & பள்ளி நிர்வாகியாக நீங்கள் நிர்வகிக்கும் கணக்குகள்
  • Chromebookகுகள், Windows, Mac, Linux உள்ளிட்ட நீங்கள் நிர்வகிக்கும் சாதனங்கள்
  • பள்ளி, பணியிடம், வீடு போன்ற இடங்களில் நீங்கள் நிர்வகிக்கும் நெட்வொர்க்குகள்

‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை நீங்கள் நிர்வகிக்கும் சாதனங்களில் லாக் செய்தல்

Family Link மூலம் உங்கள் பிள்ளையின் சாதனத்தைக் கண்காணித்தால்
பிள்ளையின் Google குடும்பக் குழுவில் நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் பிள்ளையின் கணக்கில் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் இயக்கத்திலேயே இருக்கும் வகையில் அமைக்க முடியும். Search, பிள்ளையின் Google கணக்கு ஆகியவை குறித்து மேலும் அறிக.
Google Workspace for Education மூலம் சாதனங்களை நிர்வகித்தால் Chromebookகை நிர்வகித்தால்
Google நிர்வாகிக் கன்சோல் மூலம் Chrome கொள்கைகளை நிர்வகிக்கும் நிர்வாகி எனில் சாதனத்திலேயே ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்திற்கான விருப்பத்தேர்வுகளை நீங்கள் அமைக்கலாம். பயனர்களுக்கும் உலாவிகளுக்கும் Chrome கொள்கைகளை அமைப்பது எப்படி என அறிக.
Mac, Windows, Linux போன்ற சாதனங்களை நிர்வகித்தால்

PC, Macbook போன்ற நீங்கள் நிர்வகிக்கும் பிற சாதனத்தில் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை லாக் செய்ய விரும்பினால் forcesafesearch.google.com தளத்துடன் Google டொமைன்களை மேப் செய்யலாம்.

தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமென்றால் இந்த விருப்பத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

Google டொமைன்களை forcesafesearch.google.com தளத்துடன் மேப் செய்தல்

HTTPS மூலம் பாதுகாப்பான இணைப்பை அனுமதிக்கும் அதேவேளையில் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள எல்லாப் பயனர்களையும் Google Searchசில் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தைக் கட்டாயமாகப் பயன்படுத்த ‘பாதுகாப்பான தேடல் VIPயை’ இந்த முறை பயன்படுத்துகிறது. 'பாதுகாப்பான தேடல் VIP' என்பதில் உள்ள 'VIP' என்பது விர்ச்சுவல் IPயைக் குறிக்கிறது. இது பல Google சேவையகங்களை உள்ளமைந்த முறையில் இணைக்கும் IP முகவரியாகும். இந்த VIPயில் பெறும் எல்லாக் கோரிக்கைகளுக்கும் பாதுகாப்பான தேடல் முடிவுகளை வழங்குவோம். இவற்றில் அடங்குபவை:

  • Google Search
  • படத் தேடல்
  • வீடியோ தேடல்

சாதனத்தில் உள்ள எல்லா உலாவிகளிலும் இது வேலை செய்யும். சாதனத்தில் நிர்வாகியாக இருக்கும் பயனர்கள் இந்த மாற்றத்தைச் செயல்தவிர்க்க முடியும். இந்த மாற்றத்தைச் செய்ய இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

Windowsஸில்

ஹோஸ்ட்டுகள் ஃபைலைத் திறத்தல்

  1. Windowsஸில், 'Windows' பட்டனைக் கிளிக் செய்யவும்.
  2. Notepad என டைப் செய்யவும்.
  3. Notepadல் அதன் பிறகு வலது கிளிக் செய்து Run as Administrator என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மாற்றங்கள் செய்ய விரும்புகிறீர்களா என Windows கேட்கும்போது ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. Notepadல் உங்கள் ஹோஸ்ட்டுகள் ஃபைலைத் திறக்கவும்.
    • பெரும்பாலான Windows நிறுவல்களில் இது பின்வரும் இடத்தில் அமைந்திருக்கும்: C:\Windows\System32\drivers\etc\hosts

ஹோஸ்ட்டுகள் ஃபைலைச் சேமித்தல்

  1. Command Promptடைத் திறக்க, தொடக்க மெனுவைக் கிளிக் செய்யவும்.
  2. cmd என டைப் செய்யவும்.
  3. Enter பட்டனை அழுத்தவும்.
  4. ping forcesafesearch.google.com என்ற கட்டளையை டைப் செய்யவும்.
    • IP முகவரியைக் குறித்துக்கொள்ளவும்.
    • IP முகவரிக்கான உதாரணம்: 216.239.38.120.
  5. ஹோஸ்ட்டுகள் ஃபைலின் இறுதியில், நீங்கள் பெற்ற IP முகவரியுடன் உள்ளீட்டை உருவாக்கவும். உதாரணம்: 216.239.38.120 www.google.com #forcesafesearch.
    • www.google.co.uk போன்ற உங்கள் பயனர்கள் பயன்படுத்தக்கூடிய பிற நாடு அல்லது பிராந்தியத்தின் Google டொமைன்களுக்கு இந்த வரியை நகலெடுக்கவும்.
  6. ஹோஸ்ட்டுகள் ஃபைலைச் சேமிக்கவும்.

‘பாதுகாப்பான தேடல் வடிகட்டல்’ அம்சம் இயக்கத்தில் இருப்பதை உறுதிசெய்துகொள்ள google.com/safesearch தளத்திற்குச் செல்லவும். இயல்பாகவே 'பாதுகாப்பான தேடல் வடிகட்டல்' இயக்கத்தில் உள்ளதையும் அதை முடக்க முடியாது என்பதையும் சரிபார்க்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் PCயில் வேறொரு இடத்தில் Windows நிறுவப்பட்டிருந்தால் Command Promptடில் பின்வரும் கட்டளையை டைப் செய்வதன் மூலம் ஹோஸ்ட்டுகள் ஃபைலைக் கண்டறியலாம்: cd /d %systemroot%\system32\drivers\etc.

MacOSஸில்
  1. Terminalலைத் திறக்கவும்.
  2. ping forcesafesearch.google.com என்ற கட்டளையை டைப் செய்யவும்.
    • IP முகவரியைக் குறித்துக்கொள்ளவும்.
    • IP முகவரிக்கான உதாரணம்: 216.239.38.120.
  3. sudo nano /private/etc/hosts என்ற கட்டளையை டைப் செய்யவும்.
  4. ஹோஸ்ட்டுகள் ஃபைலின் இறுதியில், நீங்கள் பெற்ற IP முகவரியைப் பயன்படுத்தி உள்ளீடு ஒன்றை உருவாக்கவும். உதாரணம்: 216.239.38.120 www.google.com #forcesafesearch.
    • www.google.co.uk போன்ற உங்கள் பயனர்கள் பயன்படுத்தக்கூடிய பிற நாடு அல்லது பிராந்தியத்தின் Google டொமைன்களுக்கு இந்த வரியை நகலெடுக்கவும்.
  5. ஹோஸ்ட்டுகள் ஃபைலைச் சேமிக்கவும்.

‘பாதுகாப்பான தேடல் வடிகட்டல்’ இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ள google.com தளத்திற்குச் சென்று இயல்பாகவே 'பாதுகாப்பான தேடல் வடிகட்டல்' இயக்கத்தில் உள்ளதையும் அதை முடக்க முடியாது என்பதையும் சரிபார்க்கவும்.

Linuxஸில்
  1. Terminalலைத் திறக்கவும்.
  2. ping forcesafesearch.google.com என்ற கட்டளையை டைப் செய்யவும்.

    • IP முகவரியைக் குறித்துக்கொள்ளவும்.
    • IP முகவரிக்கான உதாரணம்: 216.239.38.120.
  3. sudo nano /etc/hosts என்ற கட்டளையை டைப் செய்யவும்.
  4. ஹோஸ்ட்டுகள் ஃபைலின் இறுதியில், நீங்கள் பெற்ற IP முகவரியைப் பயன்படுத்தி உள்ளீடு ஒன்றை உருவாக்கவும். உதாரணம்: 216.239.38.120 www.google.com #forcesafesearch.
    • www.google.co.uk போன்ற உங்கள் பயனர்கள் பயன்படுத்தக்கூடிய பிற நாடு அல்லது பிராந்தியத்தின் Google டொமைன்களுக்கு இந்த வரியை நகலெடுக்கவும்.
  5. ஹோஸ்ட்டுகள் ஃபைலைச் சேமிக்கவும்.

‘பாதுகாப்பான தேடல் வடிகட்டல்’ இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ள google.com தளத்திற்குச் சென்று இயல்பாகவே 'பாதுகாப்பான தேடல் வடிகட்டல்' இயக்கத்தில் உள்ளதையும் அதை முடக்க முடியாது என்பதையும் சரிபார்க்கவும்.

பள்ளி, பணியிடம், வீட்டு நெட்வொர்க் போன்ற இடங்களில் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தை லாக் செய்தல்

பள்ளி, பணியிடம், வீட்டு நெட்வொர்க் போன்றவற்றை நீங்கள் நிர்வகித்தால் உங்கள் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ‘பாதுகாப்பான தேடல் வடிகட்டல்’ அம்சத்தை எல்லா உலாவிகளிலும் சாதனங்களிலும் அமைக்க முடியும். உள்ளமைவில் நீங்கள் சேர்க்கும் எல்லா Google டொமைன்களுக்கும் ‘பாதுகாப்பான தேடல்’ அம்சத்தின் விர்ச்சுவல் IP முகவரியை இது பயன்படுத்தும். இதை உலாவியில் இருந்து செயல்தவிர்க்க முடியாது.

உங்கள் நெட்வொர்க்கில் ‘பாதுகாப்பான தேடல் வடிகட்டல்’ அம்சத்தைக் கட்டாயமாக இயக்க:

வெளிப்படையான உள்ளடக்கத்தைப் புகாரளித்தல்

‘பாதுகாப்பான தேடல்’ அம்சம் இயக்கப்பட்டிருந்தும் வெளிப்படையான உள்ளடக்கம் காட்டப்பட்டால் அது குறித்துப் புகாரளிக்கலாம்.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6873922847030121479
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false