அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் காட்டப்படும் தகவல்களை மதிப்பீடு செய்தல்

ஆன்லைனில் ஏராளமான தகவல்கள் இருப்பதால், உங்களுக்குக் காட்டப்படும் தகவல்களை மதிப்பாய்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆன்லைனில் உங்களுக்குக் காட்டப்படும் உள்ளடக்கம் குறித்து மேலும் அறிய, இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.

மூலத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

ஆன்லைனில் தகவல்களைப் பார்க்கும்போது அவற்றின் மூலத்தைப் பற்றி மேலும் அறிய Googleளைப் பயன்படுத்தலாம். நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:

  • தகவலுக்கான மூலம் என்ன?
  • தலைப்பைப் பற்றி விரிவான விவரங்களைக் கொண்டுள்ளதா?
  • அந்தத் தகவல்களை இது எதற்காக வழங்குகிறது?

மூலத்தை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது குறித்து மேலும் அறிய, இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும். 

மூலத்தைப் பற்றிய பிறரின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளுதல்

தகவல்களைத் தேடும்போது, உங்களுக்குத் தெரியாத அல்லது நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்பும் முடிவுகளின் மூலத்தைப் பார்க்கவும். "இந்த முடிவைப் பற்றி" அம்சத்தைப் பயன்படுத்தலாம் அல்லது -site எனும் ஆபரேட்டரைப் பயன்படுத்தித் தேடலாம்.

முக்கியம்: “இந்த முடிவைப் பற்றி” அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

“இந்த முடிவைப் பற்றி” போன்ற அம்சங்கள் இவற்றை மதிப்பிட உதவும்:

  • மூலத்தைப் பற்றி ஆன்லைனில் இருக்கும் உயர்தரக் கலைக்களஞ்சியங்களில் உள்ள விவரங்கள்
  • தகவல் மூலம் என்னவென்று விவரிக்கப்படுகின்றது?
  • தகவல் மூலத்தைப் பற்றிப் பிற தளங்கள் என்ன கூறுகின்றன?

“இந்த முடிவைப் பற்றி” அம்சத்தைப் பயன்படுத்தி மூலத்தைப் பற்றி மேலும் அறிக.

நீங்கள் -site எனும் ஆபரேட்டரைப் பயன்படுத்தியும் தேடலாம். மூலத்தின் தளத்தில் உள்ள பக்கங்களை உங்கள் தேடல் முடிவுகளில் இருந்து இந்தத் தேடல் விருப்பம் அகற்றுகிறது. உதாரணத்திற்கு, பிற மூலங்களில் இருந்து உலக சுகாதார நிறுவனம் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, உலக சுகாதார நிறுவனம் -site:who.int எனத் தேடவும்.

உதவிக்குறிப்பு: மூலத்தைப் பற்றித் தேடும்போது பெரும்பாலும் குறைந்தளவு முடிவுகளே காட்டப்படும். அதாவது மூலம் புதிதாக இருக்கலாம், நன்கு அறியப்படாததாக இருக்கலாம் அல்லது அதுகுறித்து அதிகமாக எழுதப்படாமல் இருக்கலாம்.

ஆசிரியரைப் பற்றித் தேடுதல்

உள்ளடக்கத்தின் மூலத்தைப் பற்றி மேலும் அறிய, அதன் ஆசிரியர் குறித்தோ அதற்குத் தொடர்புடைய நிறுவனம் குறித்தோ Googleளில் தேடுங்கள். அவர்கள் எழுதிய பிற உள்ளடக்கங்கள் அல்லது அதைப் பற்றிய பிறரின் கருத்துகளை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். தேடலின்போது இவற்றைச் செய்யலாம்:

  • ஆசிரியர் மற்றும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை அல்லது நிபுணத்துவத்தை மதிப்பிடலாம்.
  • மேலும் அறிந்துகொள்ளவும் கூடுதல் தகவல் மூலங்களைக் கண்டறியவும் ஆன்லைனில் இருக்கும் உயர்தரக் கலைக்களஞ்சியங்கள் போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்.
  • அவர்கள் என்ன இடுகையிடுகின்றனர் என்பது குறித்து அறிய சமூக வலைதளக் கணக்குகளைப் பார்க்கலாம்.
வெளியீட்டுத் தேதியின் அடிப்படையில் அறிந்துகொள்ளுதல்

உள்ளடக்கம் வெளியிடப்பட்ட தேதி இருந்தால் அதன் அடிப்படையில் உள்ளடக்கத்தின் தொடர்பு குறித்து மதிப்பீடு செய்யலாம். நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:

  • காலப்போக்கில் மாறக்கூடிய தலைப்புகளுக்கு, அவற்றின் பழைய தகவல்கள் தற்போது தொடர்பில்லாமல் இருக்கக்கூடும். 
  • சில சமயங்களில், இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் தரம் காலப்போக்கில் மேம்படும். சமீபத்திய நிகழ்வுகள், தலைப்புகள் (எ.கா. நோய்கள், சிகிச்சை போன்றவை) ஆகியவற்றைப் பற்றிய நம்பகமான தகவல்களை வெளியிட செய்தி நிறுவனங்களுக்குச் சிறிது காலம் தேவைப்படலாம்.

நீங்கள் தேடும்போது சில முடிவுகளுக்கு அருகே உத்தேசமான புதுப்பிப்பு அல்லது வெளியீட்டுத் தேதியை Google காட்டக்கூடும். “இந்த முடிவைப் பற்றி” அம்சத்தில் இருக்கும் "இந்தப் பக்கத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள்" இணைப்பில், Google முதன் முதலில் தளத்தை இன்டெக்ஸ் செய்த தேதியும் இருக்கும். உள்ளடக்கத்தின் தொடர்பையும் நம்பகத்தன்மையையும் மதிப்பிட இந்தத் தேதிகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

மூலத்தைப் பற்றிய தகவல் பேனல்களைக் கண்டறிதல்

சில தேடல் முடிவுகளுக்கு அருகில் தகவல் பேனல்கள் காட்டப்படும், அந்த முடிவுகள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை இவை காட்டும்.

  • உடல்நலம் தொடர்பான தலைப்புகள் போன்ற சில தலைப்புகளில் இந்த உள்ளடக்கம் எங்கிருந்து காட்டப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் வகையில், மூலத்தைப் பற்றிய சூழலுடன் கூடிய தகவல் பேனல்கள் காட்டப்படும்.
  • உள்ளடக்கத்திற்கான நிதியுதவி எங்கிருந்து (அரசு அல்லது பொது நிதியுதவி) கிடைக்கிறது என்பது குறித்துத் தகவல் பேனல்கள் விவரிக்கலாம்.

படத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுதல்

பக்கத்தில் உள்ள படங்கள் குறித்த தகவல்கள் "படத்தைப் பற்றி" பிரிவில் இருக்கும். ஒரு படத்தை Google முதலில் எப்போது பார்த்தது என்பதையும் படத்தைப் பற்றிய பக்கத்திற்கான இணைப்பையும் இது காட்டும். படத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு தலைப்பைப் பற்றிய பிறரின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளுதல்

உள்ளடக்கத்தின் மூலத்தை மதிப்பீடு செய்தபிறகு, அந்தத் தகவல் எவ்வளவு நம்பகமானது என்பதைத் தீர்மானிக்க அந்தத் தலைப்பு குறித்துப் பிற மூலங்களில் என்ன உள்ளது என்பதையும் மதிப்பீடு செய்யலாம். உதாரணத்திற்கு, சில தளங்கள் தகவல்களை நகலெடுத்து அவற்றைச் சரிபார்க்காமல் பகிரலாம், அவை பொய்யான அல்லது தவறான தகவல்களாக இருக்கக்கூடும். ஒரு தலைப்பை எப்படி மதிப்பீடு செய்வது என்பது குறித்து மேலும் அறிய, இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

ஒரு தலைப்பைப் பற்றிய பிறரின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளுதல்

ஒரு தலைப்பு குறித்து மேலும் அறிய, Searchசில் கருவிகளும் அம்சங்களும் உள்ளன. உதாரணத்திற்கு, “இந்த முடிவைப் பற்றி” அம்சத்தின் மூலம் நீங்கள்:

  • ஒரு தலைப்பைப் பற்றிப் பிற மூலங்களில் என்ன உள்ளது என அறியலாம்
  • தொடர்புடைய செய்திகளைக் கண்டறியலாம்

"இந்த முடிவைப் பற்றி” அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு தலைப்பு குறித்து மேலும் அறிக.

தலைப்பைப் பற்றி வேறு வழிகளில் தேடுதல்

உங்களுக்குத் தேவையான தகவல்கள் காட்டப்படவில்லை எனில் உதவிகரமான தகவல்களை அதிகளவில் பெறுவதற்கு, வெவ்வேறு வழிகளில் அந்தத் தலைப்பு குறித்துத் தேடவும். நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:

  • முதலில் பொதுவான தேடலையும் பிறகு மிகவும் குறிப்பிட்ட தேடலையும் மேற்கொள்ளவும்.
  • பொதுவான வார்த்தைகளைப் பயன்படுத்தவும். உதாரணத்திற்கு, பூனைகள் சிறந்த செல்லப்பிராணிகளா? என்பதற்குப் பதிலாக, செல்லப்பிராணிகளாக இருக்கும் பூனைகள் என்று தேடவும்.
  • ஒவ்வொரு முடிவிலும் உங்கள் தேடல் வார்த்தைகளில் எவையெல்லாம் காட்டப்படுகின்றன (உதாரணத்திற்கு, “பூனைகள்” மற்றும் “சிறந்த” & “பூனைகள்” மற்றும் “மோசமான”) என்பதைப் பார்க்க, “இந்த முடிவைப் பற்றி” அம்சத்தைப் பயன்படுத்தவும்.
  • வெவ்வேறு தேடல் வார்த்தைகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
  • ஒரு தலைப்பு குறித்து பல்வேறு தேடல்களை மேற்கொண்டும் தொடர்புடைய முடிவுகள் போதிய அளவில் காட்டப்படவில்லை எனில் அந்தத் தலைப்பு புதிதாக இருக்கக்கூடும் அல்லது அதுகுறித்து அதிகமாக எழுதப்படாமல் இருக்கக்கூடும். காத்திருந்து பின்னர் மீண்டும் தேட வேண்டியிருக்கலாம்.
  • சிறந்த முடிவுகளை மட்டும் பார்க்காமல் பல்வேறு மூலங்களில் இருந்து கிடைக்கும் முடிவுகளையும் ஆராயவும்.
சமீபத்திய தகவல்களைக் கண்டறிய, செய்தி நிறுவனங்களைப் பார்த்தல்

ஒரு தலைப்பு குறித்துச் செய்தி நிறுவனங்கள் வழங்கும் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் செய்தி முடிவுகளை உடனுக்குடன் Google முன்னுரிமைப்படுத்தும். இதன் மூலம் உதவிகரமான முடிவுகளை மிக விரைவாகக் கண்டறியலாம். ஒரு தலைப்பைப் பற்றிய தகவல்களைச் சரிபார்க்க செய்தி மூலங்களைப் பயன்படுத்தலாம். இந்த உதவிக்குறிப்புகளின்படி செய்து பார்க்கவும்:

  • ஒரு தலைப்பு தொடர்பான செய்திக் கட்டுரைகளைக் கண்டறிய, Google தேடலில் இருக்கும் தேடல் பட்டியின் கீழே உள்ள செய்திகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கூடுதல் செய்தி நிறுவனங்களிடம் இருந்து உள்ளடக்கத்தையும் அவற்றின் பின்னணியையும் பார்க்க, Google Newsஸில் முழுக் கவரேஜ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஒரு செய்தி தொடர்பாக ஆசிரியரின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் கருத்துச் செய்திக் கட்டுரைகளையும் நீங்கள் பார்க்கலாம். கருத்துச் செய்திக் கட்டுரை எனில் அதில் “கருத்து” என்று பெரும்பாலும் லேபிளிடப்பட்டிருக்கும்.
  • Google Searchசில் “முக்கியச் செய்திகள்” பிரிவைப் பயன்படுத்தவும். செய்திகளுடன் தொடர்புடைய ஒரு தேடல் வினவலை Google கண்டறியும்போது அதற்குத் தொடர்புடைய, தரமான செய்தி உள்ளடக்கத்தைக் காட்டும் வகையில் அதைப் பொருத்திப் பார்க்கும்.
உண்மைச் சரிபார்ப்புகளைப் பயன்படுத்துங்கள்

தனித்துச் செயல்படும் நிறுவனங்கள் வழங்கும் உண்மைச் சரிபார்ப்பு விவரங்கள் சில தலைப்புகளுக்குக் காட்டப்படும். ஒரு தலைப்பு தொடர்பாக உண்மைச் சரிபார்ப்பாளர்கள் வழங்கிய செய்திக் கட்டுரைகளாக இருந்தால் அவற்றை உண்மைச் சரிபார்ப்புத் துணுக்குகளாகவோ தகவல் பேனல்களாகவோ Google தயாரிப்புகளில் நீங்கள் பார்க்கலாம். நம்பகமான தகவல்களைக் கண்டறிய, உண்மைச் சரிபார்ப்பாளர்கள் வழங்கும் உள்ளடக்கத்தையும் நீங்கள் தேடலாம்.

Google உண்மைச் சரிபார்ப்பு எக்ஸ்ப்ளோரர் குறித்து மேலும் அறிக.

ஒரு தலைப்பைப் பற்றிய தகவல் பேனல்களைக் கண்டறிதல்

சில Google தயாரிப்புகளில், ஒரு தலைப்பு குறித்துக் கூடுதலாக விவரிக்கும் தகவல் பேனல்களை நீங்கள் பார்க்கலாம். தகவல் பேனல் இவற்றைக் காட்டலாம்:

  • தொடர்ந்து உருவாக்கத்தில் இருக்கும் தலைப்புகள்.
  • தனித்துச் செயல்படும் நிறுவனங்கள் மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பு விவரங்களுக்கான இணைப்புகள்.
  • குறிப்பு செய்திக் கட்டுரைகளுக்கான இணைப்புகள்.

இந்தச் செய்திக் கட்டுரையில் இருக்கும் தகவல்களைப் பற்றி

இந்த உதவிக்குறிப்புகள் இவற்றைத் தழுவி எழுதப்பட்டவை:

  • ஸ்டான்ஃபோர்டு ஹிஸ்ட்ரி எஜுகேஷன் குரூப் உருவாக்கிய தி சிவிக் ஆன்லைன் ரீசனிங் (COR) பாடத்திட்டம்
  • மைக் கால்ஃபீல்டு உருவாக்கிய SIFT கட்டமைப்பு
  • டேனா தாம்சன் உருவாக்கிய டிஜிட்டல் இமேஜ் கைடு (Digital Image Guide - DIG) கட்டமைப்பு

நம்பகமான மூலங்களைக் கண்டறிவது, தவறான தகவல்களைக் கண்டறிவது, ஆன்லைனில் கூறப்படும் விஷயங்களை நிராகரிக்க அல்லது ஆதரிக்கத் தேவையான ஆதாரங்களைப் பெறுவது போன்றவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான உத்திகளை இவை வழங்குகின்றன. இந்தப் பக்கத்தில் உள்ள வழிகாட்டலை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் உலகம் முழுவதிலும் உள்ள நிபுணர்களின் கருத்துகளை Google தொடர்ந்து ஆய்வுசெய்து, அவர்களுடன் ஆலோசனையும் நடத்துகிறது.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8285710893778560168
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false