அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

உங்கள் செயல்பாட்டுத் தரவைப் பயன்படுத்தி Search எவ்வாறு செயல்படுகிறது?

Googleளில் தேடும்போது உங்களுக்கு மிகவும் பயனுள்ள அனுபவத்தை வழங்குவதற்காக, நீங்கள் முன்பு தேடியவற்றையும் பிற தகவல்களையும் சில நேரங்களில் பயன்படுத்துவோம்.

உதாரணத்திற்கு, பிரியாணி என்று தேடிய பிறகு “எப்படிச் செய்வது” என மீண்டும் தேடினால் “சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?” எனத் தேடுகிறீர்கள் என Google பெரும்பாலும் கணிக்கக்கூடும். சிறந்த முடிவுகளை வழங்குவதற்கும் நீங்கள் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவதற்குமே இந்தக் கணிப்புகள் உங்கள் முந்தைய தேடல்களின் அடிப்படையில் காட்டப்படுகின்றன.

நிகழ்வுகள், பார்ப்பதற்கான திரைப்படங்கள் & ஷோக்கள், Discover ஊட்டத்தில் உள்ள இணையப் பக்கங்கள், மேலும் பலவற்றுக்கான பிரத்தியேகப் பரிந்துரைகளையும் பெறலாம். செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமைப்புகளைப் பொறுத்து, உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படுகின்ற பின்வரும் செயல்பாட்டின் அடிப்படையில் இந்தப் பரிந்துரைகள் காட்டப்படும்:

  • Googleளில் உள்ள உங்கள் Search தேடல் விவரங்கள்
  • Searchசில் நீங்கள் கிளிக் செய்த முடிவுகள்/விளம்பரங்கள்
  • விருப்பம் அல்லது விருப்பமில்லை என நீங்கள் தெரிவித்த Discover உள்ளடக்கம்
தேடல் முடிவுகள் எவ்வாறு செயல்படுகிறது?

பெரும்பாலான தேடல்களுக்கு, நீங்கள் இருக்கும் பகுதியில் இருந்து இதே வினவலைத் தேடுபவர்களுக்குக் காட்டப்படும் முடிவுகள்தான் உங்களுக்கும் காட்டப்படும்.

Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருந்தால் தொடர்புடைய உள்ளடக்கத்தை Google Searchசில் உள்ள சில அம்சங்கள் காட்டலாம். இதற்கான சில உதாரணங்கள்:

தொடர்புடைய இந்த உள்ளடக்கம் Search தேடல் விவரங்கள் உள்ளிட்ட உங்கள் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பின் அடிப்படையில் காட்டப்படலாம். செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் என்பதற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பை முடக்கலாம்.

உங்களின் சமீபத்திய தேடல்களுடன் தொடர்புடைய தன்னிரப்பிக் கணிப்புகள் போன்ற சில அம்சங்கள் நீங்கள் வெளியேறி இருந்தாலும் வேலை செய்யும். தன்னிரப்பிக் கணிப்புகள் செயல்படும் விதத்தை அறிக.

உங்கள் தரவை Google எவ்வாறு பாதுகாக்கிறது?
  • ஸ்பேம், மால்வேர், வைரஸ்கள், ஹேக்கர்கள் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்கும் விதமாக உள்ளமைந்த பாதுகாப்பு அம்சங்கள் உங்கள் Google கணக்கில் உள்ளன.
  • தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்க்ரிப்ஷன் செயல்முறையின் மூலம் உங்கள் செயல்பாடு பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு Google கணக்கிற்கும் அதற்கெனப் பிரத்தியேகச் செயல்பாடுகள் இருக்கும். உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால் ஒவ்வொரு கணக்கின் செயல்பாடுகளும் தனித்தனியாக வைக்கப்படும்.
  • உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்கமாட்டோம்.
  • தேடல் சொற்களையும் பிற விவரங்களையும் அடிப்படையாகக் கொண்டு விளம்பரதாரர்கள் ஏலம் கேட்கும்பட்சத்தில், பயனர்களுக்கு விளம்பரங்களை Google காட்டும், ஆனால் விளம்பரங்களைப் பார்க்கும் பயனர்கள் யார் என்ற தகவலை விளம்பரதாரர்களுக்கு வழங்காது. நீங்கள் தேடிய வார்த்தை, உங்கள் ஆர்வங்கள் போன்ற தகவல்களை Google அறிந்துள்ளதால்தான் இது சாத்தியமாகிறது என்றாலும், பயனர்களை விளம்பரங்கள் சென்றடைந்தன என்பது மட்டுமே விளம்பரதாரர்களுக்குத் தெரியும். யார் அந்தப் பயனர்கள் என்ற விவரம் அவர்களுக்குத் தெரியாது.

🔍

Search தேடல் விவரங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள Search தேடல் விவரங்களைக் கட்டுப்படுத்துதல் & நிர்வகித்தல்

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது Googleளில் தேடினால் Search தேடல் விவரங்கள் போன்ற செயல்பாட்டுத் தரவை உங்கள் Google கணக்கில் Google சேமிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள Search தேடல் விவரங்களை எனது செயல்பாடு பக்கத்திற்குச் சென்று கட்டுப்படுத்தலாம் நிர்வகிக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள்:

  • Search தேடல் விவரங்கள் அனைத்தையுமோ சிலவற்றையோ நீக்கலாம்
  • குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு (எடுத்துக்காட்டாக, 3 அல்லது 18 மாதங்கள்) Search தேடல் விவரங்கள் தானாக நீக்கப்படுமாறு அமைக்கலாம்
  • Search தேடல் விவரங்கள் சேமிக்கப்படுவதை இடைநிறுத்தலாம்
  • செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் பக்கத்திற்குச் சென்று Google கணக்கில் எந்தெந்தத் தரவெல்லாம் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்

Search தேடல் விவரங்களைக் கட்டுப்படுத்துவது & நிர்வகிப்பது எப்படி என அறிக.

சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள Search தேடல் விவரங்களை நிர்வகித்தல்

Search தேடல் விவரங்கள் உங்கள் சாதனத்திலும் சேமிக்கப்படக்கூடும். அதில் பின்வரும் தகவல்கள் இருக்கலாம்:

  • உலாவி சேமித்துள்ள விவரங்கள்
  • Google கணக்கில் இருந்து நீங்கள் வெளியேறியிருந்தபோது சேமிக்கப்பட்ட Google ஆப்ஸ் தேடல்கள்
  • Google தேடல் பட்டியில் சமீபத்தில் டைப் செய்து தேடியவை
  • Google ஆப்ஸில் சமீபத்தில் தேடியவை

Search தேடல் விவரங்களைக் கட்டுப்படுத்துவது & நிர்வகிப்பது எப்படி என அறிக.

உதவிக்குறிப்பு: Chrome, Google ஆப்ஸ் ஆகியவற்றில் மறைநிலைப் பயன்முறையிலும் தேடலாம் அல்லது பிற உலாவிகளில் மறைநிலை உலாவல் பயன்முறைகளையும் பயன்படுத்தலாம். உலாவல் விவரங்களை Chrome மறைநிலை எவ்வாறு தனிப்பட்டதாக வைத்திருக்கிறது என அறிக.

Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள Search தேடல் விவரங்களைப் பதிவிறக்குதல்

எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google தரவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். ‘எனது செயல்பாடு’ தரவின் பகுதியாக இருக்கும் Search தேடல் விவரங்களும் இதில் அடங்கும். உங்கள் Google தரவைப் பதிவிறக்குவது எப்படி என அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3605595423518103369
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false