அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google தன்னிரப்பிக் கணிப்புகளை நிர்வகித்தல்

தன்னிரப்பி அம்சம் மூலம் Google தேடலுக்கான சொற்களை விரைவாக டைப் செய்யலாம். தன்னிரப்பிக் கணிப்புகளை முடக்கலாம், குறிப்பிட்ட கணிப்புகளை அகற்றலாம், கணிப்புகளில் உள்ள சிக்கல்கள் குறித்துப் புகாரளிக்கலாம்.

தன்னிரப்பி அம்சம் குறித்து மேலும் அறிக.

‘தனிப்பட்ட முடிவுகள்’ அம்சத்தை முடக்குதல்

முக்கியம்: "தனிப்பட்ட முடிவுகள்" அம்சம் முடக்கப்பட்டிருந்தால் உங்களின் முந்தைய தேடல்களின் அடிப்படையில் பிரத்தியேகமான கணிப்புகளையும் பரிந்துரைகளையும் பெறமாட்டீர்கள். "இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு" இயக்கப்பட்டிருந்தால் உங்களது 'இதுவரை தேடியவை' விவரங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும். அத்துடன் பிற Google சேவைகளிலும் மிகவும் பிரத்தியேகமான அனுபவங்களை வழங்கும். உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைக் கண்டறிவதும் கட்டுப்படுத்துவதும் எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Google கணக்கில் உள்நுழைந்து ‘தனிப்பட்ட முடிவுகள்’ அம்சத்தை இயக்கியிருந்தால் பிரத்தியேகமான கணிப்புகளையும் பரிந்துரைகளையும் Google Searchசில் பெறலாம். கணிப்புகளையும் பரிந்துரைகளையும் பெற விரும்பவில்லை என்றால் தனிப்பட்ட முடிவுகள் அம்சத்தை முடக்குங்கள்.

பிரபலமான தேடல்களை முடக்குதல்

Google ஆப்ஸில் பிரபலமான தேடல்களைப் பெற விரும்பவில்லை எனில் உங்கள் அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

முக்கியம்: பிரபலமான தேடல்களை முடக்கினால் அந்தச் சாதனத்தில் இருக்கும் Google ஆப்ஸிலும் அது முடக்கப்படும். google.com தளத்தில் பிரபலமான தேடல்களை முடக்க விரும்பினால் உங்கள் மொபைல் உலாவியில் அமைப்புகளை மாற்றவும்.

பிரபலமான தேடல்களை முடக்க:

  1. iPhone அல்லது iPadல் Google ஆப்ஸை Google தேடல் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு பொது என்பதைத் தட்டவும்.
  3. பிரபலமடையும் தேடல்களைப் பயன்படுத்தித் தானாக நிரப்பு என்பதை முடக்கவும்.

மொபைல் உலாவியில் இருந்து 'பிரபலமான தேடல்களை' முடக்குதல்

  1. iPhone/iPadல், Chrome Chrome, Safari போன்ற உலாவியைத் திறக்கவும்.
  2. google.com தளத்திற்குச் செல்லவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டவும்.
  4. கூடுதல் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  5. மேலே உள்ள பிற அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  6. பிரபலமடையும் தேடல்களைப் பயன்படுத்தித் தானாக நிரப்பு என்பதை முடக்கவும்.

கணிப்பைப் புகாரளித்தல்

பொருத்தமற்ற கணிப்புகள் காட்டப்படுவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், இருப்பினும் சில சமயங்களில் அவை காட்டப்படலாம். தன்னிரப்பிக் கொள்கைகளில் ஒன்றை மீறுவதாக நீங்கள் நினைக்கும் கணிப்பு குறித்துப் புகாரளிக்கலாம்.

  1. iPhone அல்லது iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும் Google தேடல் அல்லது google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. தேடல் பட்டியில், தேடல் வார்த்தையை டைப் செய்யவும்.
  3. தேடல் பட்டியின் கீழே கணிப்புகள் காட்டப்படும். கணிப்பைப் புகாரளிக்க:
    • உலாவியில் google.com தளத்தில்: கணிப்பை நீண்ட நேரம் அழுத்தவும். இதைப் புகாரளி என்பதைத் தட்டவும்.
    • Google ஆப்ஸில்: கணிப்பை இடதுபுறம் ஸ்வைப் செய்யவும். விவரம் ஐகானை Information தட்டி அதன் பிறகு இதைப்பற்றி புகாரளி என்பதைத் தட்டவும்.

உங்கள் கருத்தை ஆய்வு செய்வோம், ஆனால் புகாரளிக்கப்பட்ட கணிப்புகளைத் தானாக அகற்றமாட்டோம்.

கணிப்பு தொடர்பாக எனக்குச் சட்டச் சிக்கல் உள்ளது

சட்டவிரோதமானது எனக் கருதும் உள்ளடக்கத்தை அகற்றக் கோருவதற்கு இந்தப் படிவத்தை நிரப்பவும்.

தொடர்புடைய தகவல்கள் 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5351213178418061524
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false