அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

தேடல் உதவிக்குறிப்புகளையும் Googleளில் நீங்கள் தேடுபவற்றுக்குக் காட்டப்படும் முடிவுகள் எவ்வாறு தொடர்புடையதாக உள்ளன என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்

“இந்த முடிவு குறித்து” பேனலில் உள்ள “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவில், Googleளில் உங்கள் தேடல் குறித்த உதவிக்குறிப்புகள் கிடைக்கும். உங்கள் தேடலுக்கும் முடிவுகளுக்கும் இடையிலான சில தொடர்புகளை இந்தப் பிரிவு விளக்குகிறது.

ஒரு முடிவு குறித்த தேடல் தகவல்களைப் பார்த்தல்

  1. Googleளில் எதையேனும் தேடவும்.
  2. காட்டப்படும் தேடல் முடிவின் URLலுக்கு அடுத்துள்ள மேலும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இந்த முடிவு குறித்து” பேனலில் “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவிற்குச் செல்லவும்.
உதவிக்குறிப்பு: “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவில் Search உதவிக்குறிப்புகளைப் பார்க்க அடிக்கோடிட்ட வார்த்தைகளின் மேல் கர்சரைக் கொண்டு செல்லவும் அல்லது தட்டவும்.

உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தேடல் தகவல்களும் உதவிக்குறிப்புகளும்

உங்கள் தேடல், தேடல் அமைப்புகள், முடிவு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகளில் ஒன்றை அல்லது அதற்கும் மேற்பட்டதை “இந்த முடிவு குறித்து” பேனலில் உள்ள “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு பட்டியலிடலாம்.

தேடல் வார்த்தைகள் மற்றும் தொடர்புடைய வார்த்தைகள்

பயனுள்ள முடிவுகளை வழங்க Google Search பயன்படுத்தும் காரணிகளில் தேடல் வார்த்தைகள் அல்லது தேடல் குறிப்புகள் முக்கியமானவையாகும்.

பொதுவாக உங்கள் தேடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருந்தும் உள்ளடக்கத்தை Google Search கண்டறிய முயலும். இருப்பினும் சில சமயங்களில் மிகவும் பயனுள்ள முடிவுகள் உங்கள் தேடல் வார்த்தைகள் சிலவற்றுக்குப் பொருத்தமானதாக இருக்காது.

உதாரணமாக, நீங்கள் ஒரு மேற்கோளைத் தேட விரும்புகிறீர்கள். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் சரியாக உங்களுக்கு நினைவில்லை என வைத்துக் கொள்வோம். உங்கள் தேடல் வாா்த்தைகளோடு பொருந்தும் தேடல் முடிவுகள், சரியான மேற்கோளைக் காட்டும் முடிவுகளைக் குறைவாகக் காட்டலாம். நீங்கள் டைப் செய்த தேடல் வார்த்தைகளில் சிலவற்றை மட்டும் கொண்டுள்ள முடிவுகளை Google Search காட்டுவதற்கு இதுவே காரணம்.

பிற சமயங்களில், மிகப் பொருத்தமான முடிவில் நீங்கள் தேடிய அதே தேடல் வார்த்தைகள் இல்லாமல் போனாலும் தொடர்புடைய தேடல் வார்த்தைகள் இருக்கும். உதாரணமாக, ஜாகிங் ஷூக்கள் என்பதற்கான தேடல் முடிவுகளில் “ஜாகிங்” எனும் வார்த்தை இல்லாமல் அதற்குத் தொடர்புடைய “ரன்னிங்” என்ற வாா்த்தை இருக்கலாம்.

இது போன்ற வாக்கியங்களின் மூலம் தேடல் வார்த்தைகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதை “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்: 

  • இந்த முடிவில் இந்தத் தேடல் வார்த்தைகள் காட்டப்படுகின்றன.
  • உங்கள் தேடலுடன் தொடர்புடைய வார்த்தைகள் இந்த முடிவில் காட்டப்படுகின்றன.
  • உங்கள் தேடல் வார்த்தைகளுடன் தொடர்புடைய படங்கள் இந்த முடிவில் உள்ளன.
உதவிக்குறிப்பு: மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகள் தொடர்பான கூடுதல் விருப்பங்களுக்கு மேம்பட்ட தேடலைப் பயன்படுத்தவும். மேற்கோள்கள், கழித்தல் குறி போன்ற தேடும் ஆப்பரேட்டர்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, இணையத் தேடல்களைத் துல்லியமாக்குவது எப்படி என அறிக.

தொடர்புடைய இணைப்புகள்

பொருத்தமான தேடல் முடிவுகளை வழங்குவதற்காக இணையத்தில் ஓர் உள்ளடக்கம் மற்றோர் உள்ளடக்கத்துடன் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதை Google Search பார்க்கும்.  ஒரு பக்கத்தில் உள்ள வார்த்தைகளைப் பொருத்துவதோடு பக்கத்தைக் குறிக்கும் இணைப்புகளில் உள்ள வார்த்தைகளையும் Search பயன்படுத்துகிறது.  உதாரணமாக, The Keywordஐப் பலரும் "google blog" என்று அழைக்கின்றனர்.  google blog என்பதைத் தேடினால் மேலே The Keyword என்பதைக் காட்டும். ஏனெனில் மற்ற இணையதளங்கள் அந்தப் பக்கத்தை இணைக்கும்போது அப்படி விவரிக்கின்றன.

உங்கள் தேடலும் முடிவுகளும் இணைய இணைப்புகளால் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கும்போது “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்: 

  • உங்கள் தேடல் சொற்களைக் கொண்ட பிற இணையதளங்கள் இந்த முடிவுடன் தொடர்புடையதாக உள்ளன.
உதவிக்குறிப்பு: தளத்தின் பெயர் நினைவில் இல்லையெனில் மற்றவர்கள் அதை விவரிக்கும் விதத்தைக் கொண்டு தேட முயலவும்.

இணையதளங்கள்

உங்கள் தேடலுக்குப் பொருத்தமான பக்கத்தைக் கண்டறிய குறிப்பிட்ட இணையதளங்களுக்குத் தொடர்புடைய தேடல் வார்த்தைகளை Google Search சரிபார்க்கும்.  

குறிப்பிட்ட இணையதளத்தைக் கண்டறிய உங்கள் தேடல் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்: 

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உங்கள் தேடல் சொற்களுடன் <domain.com> இணையதளம் பொருந்துகிறது.
உதவிக்குறிப்பு: குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து முடிவுகளைப் பெற தளம் அல்லது டொமைனுக்கு முன்னால் site: என டைப் செய்யவும். உதாரணம்: site:youtube.com. அல்லது முடிவுகளிலிருந்து ஓர் இணையதளத்தைத் தவிர்க்க கழித்தல் குறியைச் சேர்க்கவும். உதாரணம்: -site:youtube.com. இணையத் தேடல்களைத் துல்லியமாக்குவது எப்படி என அறிக.

இருப்பிடம்: நகரம் அல்லது மாநிலம்

பயனுள்ளதாக இருக்க சில தேடல்களுக்கு உள்ளூா் தகவல்களோ முடிவுகளோ தேவை. உங்கள் இருப்பிடத்தை நீங்கள் பகிர்ந்தால் Google Search அதைப் பயன்படுத்தும் அல்லது உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய முடிவுகளைக் கண்டறிய உங்கள் பொதுவான பகுதியைக் கணிக்கும். Google Search உங்கள் இருப்பிடத்தை எப்படிப் பயன்படுத்துகிறது என்பது பற்றி மேலும் அறிக.

நகரம் அல்லது மாநிலத்திற்குத் தொடர்புடையதாக முடிவுகள் இருக்கும்போது “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்: 

  • இந்த முடிவு <location> அருகில் செய்யப்படும் தேடல்களுடன் தொடர்புடையது.

உதவிக்குறிப்பு: குறிப்பிட்ட இடம் சார்ந்த தேடல் முடிவுகளைப் பெற இடத்தின் பெயர்களைத் தேடலில் சேர்க்கவும். உதாரணமாக, கார் டீலர்ஷிப் எனத் தேடுவதற்குப் பதில் கார் டீலர்ஷிப் சென்னை எனத் தேடவும். 

நாடு/பிராந்தியம் மற்றும் மொழி

பொதுவாக, பயனுள்ள முடிவுகள் Search அமைப்புகளில் உள்ள மொழி மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்தது. இருப்பினும் சில சமயங்களில் பிற மொழிகள் அல்லது பிராந்தியங்களில் இருந்து பயனுள்ள முடிவுகளை Search கண்டறியக்கூடும். இதற்கான உதாரணங்கள் இதோ:

  • உங்கள் மொழி தமிழ் என அமைக்கப்பட்டிருந்து நீங்கள் ஆங்கிலத்தில் தேடினால் மிகப் பயனுள்ள முடிவுகள் ஆங்கிலத்தில் இருக்கலாம்.
  • நீங்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியச் செய்திகளைத் தேடினால் மிகப் பயனுள்ள முடிவுகள் இந்தியாவில் இருந்து கிடைத்ததாய் இருக்கலாம்.  

முடிவின் மொழியையும் பிராந்தியத்தையும் “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்:

  • முடிவின் மொழி: <language>.
  • <language> மொழியில் இல்லையென்றாலும் இந்த முடிவு பொருத்தமானதாகத் தெரிகிறது.
  • <region> பிராந்தியத்தி்ல் இருந்து செய்யும் தேடல்களுக்கு இந்த முடிவு தொடர்புடையதாகத் தெரிகிறது.
  • <region> உட்பட பல பிராந்தியங்களில் இருந்து செய்யும் தேடல்களுக்கு இந்த முடிவு தொடர்புடையதாகத் தெரிகிறது.
  • பொதுவாக <region> பிராந்தியத்திற்கு வெளியே செய்யும் தேடல்கள் போல் தெரிந்தாலும் இந்தத் தேடலுக்கு இந்த முடிவு தொடர்புடையதாகத் தெரிகிறது.

உதவிக்குறிப்பு: மற்ற மொழிகளில் முடிவுகளைப் பெற மேம்பட்ட தேடலைப் பயன்படுத்திப் பாருங்கள். Search அமைப்புகளில் உங்கள் மொழி, பிராந்தியம் ஆகியவற்றையும் மாற்றலாம். உங்கள் மொழியை மாற்றுவது எப்படி என்பதையும் வேறு நாட்டிற்கான முடிவுகளைக் கண்டறிவது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

வெளியீட்டுத் தேதி

பிரபலமான அல்லது சமீபத்திய தகவல்களைக் கொண்டுள்ள தலைப்பைத் தேடும்போது மிகப் பொருத்தமான மற்றும் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட முடிவுகளை வழங்குவதற்காக வெளியீட்டுத் தேதியை Google Search பயன்படுத்தக்கூடும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட முடிவாக இருந்தால் “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்: 

  • இந்த முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உதவிக்குறிப்பு: குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளைக் கண்டறிய மேம்பட்ட தேடலைப் பயன்படுத்தவும் அல்லது தேடல் கருவிகளில் உள்ள வடிப்பான்களைப் பயன்படுத்தவும். வடிப்பான்கள் மூலம் தேடல் முடிவுகளை வடிகட்டுவது எப்படி என அறிக

உள்ளடக்க வகை

படங்கள், வீடியோக்கள், வரைபடங்கள் அல்லது பிற குறிப்பிட்ட வகையான உள்ளடக்கங்களில் இருந்து சில தேடல்களுக்கு ஏற்ற முடிவுகள் கிடைக்கலாம்.  

உள்ளடக்கத்தின் வகை பயனுள்ளதாக இருக்கும்பட்சத்தில் “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்: 

  • வீடியோக்கள் உங்கள் தேடலுக்கு உதவக்கூடும்.
  • வரைபடம், தொடர்புத் தகவல் போன்ற உள்ளூர் தகவல்கள் இந்தத் தேடலுக்கு உதவியாக இருக்கலாம்.
  • பணியின் தலைப்பு, இருப்பிடம் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்கள் உங்கள் தேடலுக்கு உதவக்கூடும்.
உதவிக்குறிப்பு: படங்கள், வீடியோக்கள் போன்ற குறிப்பிட்ட உள்ளடக்க வகைகளைத் தேட அந்த வார்த்தைகளை உங்கள் தேடலில் டைப் செய்யவும். வடிப்பான்கள் மூலம் தேடல் முடிவுகளை வடிகட்டுவது எப்படி என அறிக.

வெளிப்படையான முடிவுகள்

உங்கள் தேடலுக்கு மிகப் பொருத்தமான முடிவுகளை Google Search வழங்குகிறது. பாதுகாப்பான தேடல் அம்சம் முடக்கப்பட்டிருந்தால் முடிவுகளில் வெளிப்படையான உள்ளடக்கம் காட்டப்படலாம்.

வெளிப்படையான உள்ளடக்கமாக முடிவு இருக்கும்பட்சத்தில் “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவு இப்படி அதைத் தனிப்படுத்திக் காட்டும்: 

  • பாதுகாப்பான தேடல் அம்சம் முடக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்புடைய வெளிப்படையான முடிவுகள் காட்டப்படலாம்.
உதவிக்குறிப்பு: உங்கள் தேடல் முடிவுகளில் வெளிப்படையான உள்ளடக்கங்களைப் பெற விரும்பவில்லையெனில் பாதுகாப்பான தேடல் அம்சத்தை இயக்கவும். பாதுகாப்பான தேடல் குறித்து மேலும் அறிக.

தேடலுக்கும் முடிவுக்கும் இடையேயான தொடர்புகள் தெளிவில்லாதது போல் இருப்பது ஏன்?

அவ்வப்போது “உங்கள் தேடலும் இந்த முடிவும்” பிரிவில் உள்ள வாக்கியங்கள் சரியாக இல்லாதது போல் தோன்றும். இதற்கான காரணங்களில் சில: 

  • இணையப் பக்கங்கள் அடிக்கடி மாறும். தேடலுக்கும் முடிவுக்கும் இடையேயான தொடர்புகள் Google Search அந்த உள்ளடக்கத்தைக் கடைசியாக அணுகியதை அடிப்படையாகக் கொண்டது. அதற்குப் பிறகு அந்தப் பக்கம் மாறியிருக்கலாம்.  
  • இணையப் பக்கத்தின் மொழி என்ன என்பதை (குறிப்பாகப் பல்வேறு மொழிகளைப் பயன்படுத்தும்போது) Search துல்லியமாகக் கணிக்க முடியாதபோது.
  • தொடர்புடைய ஒரு வார்த்தை உங்கள் குறிப்பிட்ட தேடலின் உள்ளடக்கத்தில் தொடர்பில்லாததாக இருக்கும்போது.

“இந்த முடிவு குறித்து” தொடர்பாகக் கருத்து வழங்குதல்

எது உதவியாக இருந்தது என எங்களுக்குத் தெரிவிக்கலாம், சிக்கலைப் புகாரளிக்கலாம். அனைவருக்காகவும் Google Searchசை மேம்படுத்த இது உதவும்.

“இந்த முடிவு குறித்து” பேனலின் கீழ்ப்புறத்தில் உள்ள இந்தத் தகவல் குறித்த கருத்தை அனுப்புக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்புடைய தகவல்கள் 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7367615043348584875
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false