படித்தது அல்லது படிக்காதது என்று உரையாடலைக் குறித்தல்

Google Chatடில் பிறகு படிப்பதற்காக உரையாடல்களைப் ‘படிக்காதவை’ என்று நீங்கள் குறிக்கலாம். உரையாடலைத் திறக்காமலேயே 'படித்தது' என்று குறிக்கவும் முடியும்.

ஓர் உரையாடலைப் ‘படிக்காதது’ என்று குறிக்கும்போது, உங்கள் உரையாடல் பட்டியலில் அந்த உரையாடலுக்கு அருகில் ஒரு புள்ளி காட்டப்படும்.

உரையாடலைப் படித்தது அல்லது படிக்காதது என்று மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. உங்கள் உரையாடல் பட்டியலில் உரையாடலுக்கு வலதுபுறம் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
  2. படித்தது எனக் குறி அல்லது படிக்காதது எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்: உரையாடலைப் படித்ததாகவோ படிக்காததாகவோ குறிப்பதற்கான பிற வழிகளில் இவையும் அடங்கும்:

  • DM அல்லது ஸ்பேஸின் மேற்பகுதியில் இருக்கும் உரையாடலைக் கிளிக் செய்து அதன் பிறகு படித்தது எனக் குறி அல்லது படிக்காதது எனக் குறி என்பதைத் தட்டவும்.
  • உரையாடலில் உள்ள தனிப்பட்ட மெசேஜ்களுக்கு, உரையாடலின் மீது கர்சரை வைத்து அதன் பிறகு மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு படிக்காதது எனக் குறி என்பதைத் தட்டவும். உரையாடலில் உள்ள மெசேஜிற்கு மேலே “படிக்காதது” என்ற வரியை இது சேர்க்கும்.

படிக்காத உரையாடல்களைக் கண்டறிதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. இடதுபுறத்தில் உள்ள முகப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள படிக்காதவை என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10595472931836350058
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false