அறிவிப்பு

இந்த அம்சம் தற்போது Google Workspaceஸின் ஒருங்கிணைந்த அனுபவத்தில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்த, இந்தக் கட்டுரைக்குச் செல்லவும்.

Gmailலில் வீடியோ அழைப்பைத் தொடங்குதல்/அதில் சேர்தல்

Gmailலில் நேருக்கு நேர் பார்க்கும் வீடியோ அழைப்புகளைத் தொடங்கலாம் அல்லது சேரலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

முதல் வீடியோ அழைப்பைத் தொடங்குவதற்கு முன்

  1. சிஸ்டம் தேவைகளைச் சரிபார்க்கவும்.
  2. உங்கள் கம்ப்யூட்டரின் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அமைப்புகளில் உங்கள் கேமராவுக்கும் மைக்ரோஃபோனுக்கும் அனுமதிகளை இயக்க வேண்டியிருக்கலாம்.

Google Workspace பயனர்கள் (பணி/பள்ளிக் கணக்கில் Gmail பயன்படுத்துவோர்)

Google Workspace நிர்வாகிகளுக்கான உதவிக்குறிப்பு: Gmailலில் Meetடைப் பயன்படுத்த, நிர்வாகி கன்சோலில் Google Meet சேவை இயக்கப்பட்டிருக்க வேண்டும். EDU பயனர்களுக்கு புதிய வீடியோ மீட்டிங்குகளை உருவாக்குவதற்கான அனுமதி இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

வீடியோ அழைப்பைத் தொடங்குதல்

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. Meet பிரிவில், புதிய மீட்டிங் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இணைப்பு/மின்னஞ்சல் மூலம் மீட்டிங் அழைப்பை அனுப்ப, அழைப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். 
    • மீட்டிங் அழைப்பு விவரங்களை நகலெடுக்க, மீட்டிங் அழைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மின்னஞ்சல் வழி அழைப்பை அனுப்ப, மின்னஞ்சல் மூலம் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மீட்டிங்கில் சேரத் தயாரானவுடன் இப்போது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. முதல் மீட்டிங்கில் சேர்வதற்கு முன் மைக்ரோஃபோன் & கேமராவுக்கான அனுமதிகளை வழங்கவும். அனுமதி வழங்கிய பின்: 
    • மைக்ரோஃபோனை ஆன்/ஆஃப் செய்ய, மைக்ரோஃபோன் Microphone என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கேமராவை ஆன்/ஆஃப் செய்ய, கேமரா வீடியோ அழைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. அழைப்பில் சேர இப்போது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. அழைப்பை முடிக்க, அழைப்பிலிருந்து வெளியேறு Call end icon என்பதைக் கிளிக் செய்யவும்.

வீடியோ அழைப்பில் சேர்தல்

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. உங்கள் கேலெண்டரில் வரவிருக்கும் வீடியோ அழைப்பில் சேர, கீழ் இடது மூலையில் எனது மீட்டிங்குகள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “எனது மீட்டிங்குகள்” என்பதற்குக் கீழ், நீங்கள் சேர விரும்புகிற வரவிருக்கும் மீட்டிங் மீது நகர்த்தி அதன் பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்புகள்:
    • Google Calendarரில் திட்டமிடப்படும் மீட்டிங்குகள் மட்டுமே “எனது மீட்டிங்குகள்” என்பதற்குக் கீழ் காட்டப்படும்.
    • வரவிருக்கும் ஏதேனும் மீட்டிங்குகள் மீது கிளிக் செய்து அழைப்பின் விவரங்களைக் காணலாம் அல்லது மாற்றங்களைச் செய்யலாம்.
    • வரவிருக்கும் மீட்டிங் உங்கள் கேலெண்டரில் இல்லை எனில் மீட்டிங்கில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். மீட்டிங் குறியீடு/புனைப்பெயரை உள்ளிட்டு அதன் பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. முதல் மீட்டிங்கில் சேர்வதற்கு முன், மைக்ரோஃபோன் மற்றும் கேமராவுக்கான அனுமதிகளை வழங்கவும். அனுமதி வழங்கிய பின்,  
    • மைக்ரோஃபோனை ஆன்/ஆஃப் செய்ய, மைக்ரோஃபோன் Microphone என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கேமராவை ஆன்/ஆஃப் செய்ய, கேமரா வீடியோ அழைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. அழைப்பில் சேர, இப்போது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. அழைப்பிலிருந்து வெளியேற, அழைப்பிலிருந்து வெளியேறு Call end icon என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Workspace for Education பயனர்கள்

உங்களிடம் G Suite for Education கணக்கு இருந்து, உங்கள் பள்ளியானது ஆரம்பப் பள்ளி/மேல்நிலைப் பள்ளியாக இருந்தால் (K-12) தனிப்பட்ட Google கணக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட Google Meet வீடியோ அழைப்புகளில் சேர உங்களுக்கு அனுமதி இருக்காது.

அடையாளமற்ற பயனர்களும் Google கணக்கில் உள்நுழையாத பயனர்களும் Google Workspace for Education பயனர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மீட்டிங்குகளில் சேர முடியாது. இருப்பினும், அவர்கள் ஃபோன் மூலம் மீட்டிங்கில் சேர முடியும்.

Google Workspace பயனர் அல்லாதவர்கள் (தனிப்பட்ட கணக்கின் மூலம் Gmail பயன்படுத்துவோர்)

வீடியோ அழைப்பைத் தொடங்குதல்

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. Meet பிரிவில், புதிய மீட்டிங் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இணைப்பு/மின்னஞ்சல் மூலம் மீட்டிங் அழைப்பை அனுப்ப, அழைப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். 
    • மீட்டிங் அழைப்பு விவரங்களை நகலெடுக்க, மீட்டிங் அழைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மின்னஞ்சல் வழியாக அழைப்பை அனுப்ப மின்னஞ்சல் மூலம் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மீட்டிங்கில் சேரத் தயாரானதும் இப்போதே தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும். மீட்டிங்கில் நேரடியாக நுழைவீர்கள். 
  5. முதல் மீட்டிங்கில் சேர்வதற்கு முன், தவறாமல் மைக்ரோஃபோன் & கேமராவுக்கான அனுமதிகளை வழங்கவும். அனுமதி வழங்கிய பின், 
    • மைக்ரோஃபோனை ஆன்/ஆஃப் செய்ய, மைக்ரோஃபோன் Microphone என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கேமராவை ஆன்/ஆஃப் செய்ய, கேமரா வீடியோ அழைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. அழைப்பில் சேர, இப்போது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. அழைப்பை முடிக்க, அழைப்பிலிருந்து வெளியேறு Call end icon என்பதைக் கிளிக் செய்யவும்.

வீடியோ அழைப்பில் சேர்தல்

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மீட்டிங்கில் சேர் ஐகானை Input கிளிக் செய்யவும்.
  3. மீட்டிங் ஏற்பாட்டாளர் வழங்கிய 10-இலக்க மீட்டிங் குறியீட்டை உள்ளிடவும்.
  4. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மீட்டிங்கில் சேரும் முன் உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் ஆன்/ஆஃப் செய்யலாம்.
  5. அழைப்பில் சேர, இப்போது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. மீட்டிங் முடித்ததும், அழைப்பை முடி ஐகானை Call end icon கிளிக் செய்யவும்.

Google Meet ஆப்ஸில் இருந்தும் Calendar நிகழ்விலிருந்தும் கூட மீட்டிங்கில் சேரலாம். மீட்டிங்கைத் தொடங்குவதற்கான அல்லது சேர்வதற்கான மற்ற வழிகள் பற்றி அறிக.  

Chat அல்லது Gmailலில் இருந்து நேரடியாக ஒருவரை அழைத்தல்

கவனத்திற்கு: Chrome உலாவியில் Chat, Gmail போன்றவற்றில் இருந்து நேரடியாக நீங்கள் ஒருவரை அழைக்கலாம். Chrome உலாவியைப் பயன்படுத்தாத ஒருவரை அழைத்தால் அவரால் அழைப்பைப் பெறவும் சேரவும் முடியும். ஆனால் அழைப்பில் சேருவதற்கான ஒலியைக் கேட்க முடியாது.

Chat, Gmail போன்றவற்றில் இருந்து குரல் அல்லது வீடியோ மீட்டிங்கைத் தொடங்கலாம். எதிர் முனையில் இருப்பவர் அழைப்பைப் பெறும்போது அவருக்கு ரிங்டோன் ஒலி கேட்கும்.

  1. Chatடில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள, வீடியோ அழைப்பைத் தொடங்குவதற்கான ஐகானை கிளிக் செய்யவும். ஒரு சிறிய சாளரத்தில் அழைப்பு திறக்கப்படும்.
  3. அழைப்பை முடிக்க, அழைப்பை முடிப்பதற்கான ஐகானை Call end icon கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: அழைப்புச் சாளரத்தைச் சரிசெய்ய வேண்டும் எனில்:

  • புதிய உலாவிப் பக்கத்திற்கு அழைப்பை நகர்த்த, ஓர் உலாவிப் பக்கத்திற்குச் செல் New window என்பதைக் கிளிக் செய்யவும்.
  • புதிய உலாவிப் பக்கத்திற்குச் செல்ல, சாளரத்தைக் கிளிக் செய்து பிடித்திருக்கவும்.

Gmailலில் Google Meetடைக் காட்டுதல்/மறைத்தல் (அனைத்துப் பயனர்களுக்கும்)

  1. Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், அமைப்புகள் ஐகான் Settings அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே, Chat & Meetடைத் தேர்வுசெய்யவும்.
  4. "Meet" பிரிவில், தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
  5. கீழ்ப்பகுதியில் மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்: நிர்வாகி கன்சோலில் வீடியோ அழைப்புச் சேவையை Google Workspace நிர்வாகிகள் முடக்கியிருந்தால் Google Workspace பயனர்களின் Gmail கணக்கில் இந்த அமைப்பு இல்லாமல் போகலாம்.

உதவிக்குறிப்பு: உதவிக்குறிப்பு: காலாவதியான குறியீட்டுடன் மீட்டிங்கில் இணைய முயல்வதைத் தவிர்ப்பதற்கும் எதிர்கால மீட்டிங்குகளைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும் மீட்டிங் குறியீடுகள் எப்போது காலாவதி ஆகின்றன என்பதைச் சரிபாருங்கள். Google Meet மீட்டிங் குறியீடுகள் குறித்து அறிக.

தொடர்புடைய தலைப்புகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12007285735269493499
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false