உங்களது பிற மின்னஞ்சல் கணக்குகளுக்கு Gmail அம்சங்களைப் பெறுதல்

Yahoo, AOL, Outlook, Hotmail அல்லது Gmail அல்லாத குறிப்பிட்ட கணக்குகளை நீங்கள் பயன்படுத்தினால் Gmailலின் அம்சங்கள் பலவற்றையும் அந்த முகவரியின் மூலம் பெற Gmailify அம்சத்தைப் பயன்படுத்தவும்.

இதைச் செய்ய உங்கள் கணக்கை Gmail உடன் இணைக்கவும். உங்கள் கணக்கை இணைத்தபிறகு உங்கள் மெசேஜ்கள் Gmail இன்பாக்ஸில் காட்டப்படுவதோடு இந்த அம்சங்களும் கிடைக்கும்:

முக்கியம்: ஏற்கெனவே உள்ள Gmail கணக்குடன் வேறொரு கணக்கை இணைத்தால் நீங்கள் சேமிப்பக வரம்பை அடையக்கூடும். உங்கள் Google சேமிப்பகத்தை அழிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Gmail உடன் வரும் சேமிப்பகம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

மின்னஞ்சல் முகவரியை Gmailலுடன் இணைத்தல்

முக்கியம்: Gmailலில் மின்னஞ்சல்களைப் படிக்க Yahoo, AOL, Outlook, Hotmail அல்லது பிற சேவையில் இருந்து வேறொரு கணக்கை ஏற்கெனவே சேர்த்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். Gmail ஆப்ஸில் கணக்கைச் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு ஐகானை மெனு தட்டவும்.
  3. கீழே சென்று அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் இணைக்க விரும்பும் Gmail அல்லாத கணக்கைத் தட்டவும்.
  5. கணக்கை இணை என்பதைத் தட்டவும். இந்த இணைப்பு இல்லை என்றால், உங்கள் Gmail ஆப்ஸைப் புதுப்பித்து முயலவும்.
  6. திரையில் காட்டப்படும் வழிமுறையைப் பின்பற்றவும்.

உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் முகவரியை Gmail உடன் இணைத்தபிறகு அதற்கு வரும் மெசேஜ்கள் Gmail ஆப்ஸிலும் இணையத்தில் mail.google.com தளத்திலும் காட்டப்படும். Gmailலில் செய்வதைப் போலவே அந்த மெசேஜ்களைப் படிக்கலாம், ஒழுங்கமைக்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியின் இணைப்பை நீக்குதல்

முக்கியம்: உங்கள் கணக்குகளின் இணைப்பை நீக்கியபிறகு அந்தக் கணக்குகளில் இருந்து வரும் புதிய மெசேஜ்களை Gmail காட்டாது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு ஐகானை மெனு தட்டவும்.
  3. கீழே நகர்த்தி, அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்களது பிற கணக்கில் இருந்து இணைப்பு நீக்க விரும்பும் Gmail கணக்கைத் தட்டவும்.
  5. "இணைக்கப்பட்ட கணக்கு" பகுதியில் கணக்கின் இணைப்பை நீக்கு என்பதைத் தட்டவும்.
  6. கணக்கில் இருந்து மின்னஞ்சல்களின் நகல்களை வைத்துக் கொள்ள வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
  7. இணைப்புநீக்கு என்பதைத் தட்டவும்.

Gmailலில் இருந்து மூன்றாம் தரப்புக் கணக்கின் இணைப்பை நீக்கியபிறகும், அந்தக் கணக்கில் ஏற்கெனவே உள்ள மெசேஜ்களின் நகல்களை Gmail இன்பாக்ஸில் வைத்துக்கொள்ளவோ நீக்கவோ நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  • Gmailலில் இருந்து நகல்களை நீக்கினாலும் மூன்றாம் தரப்புச் சேவையின் (உதாரணம்: Yahoo, Hotmail) இன்பாக்ஸில் உங்கள் மெசேஜ்களைத் தொடர்ந்து படிக்க முடியும்.
  • Gmailலில் நகல்களை வைத்துக்கொண்டால் உங்கள் Gmail கணக்கில் அவை தொடர்ந்து இருக்கும். இருப்பினும், Gmailலில் இருந்து அவற்றை நகர்த்தினாலோ நீக்கினாலோ இந்தச் செயல்கள் உங்கள் மூன்றாம் தரப்புக் கணக்கில் பிரதிபலிக்காது.

உங்களுடைய வேறு கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை Gmailலில் பார்க்கலாம்

பிற மின்னஞ்சல் சேவைகளில் இருந்து வரும் மெசேஜ்களை Gmail வித்தியாசமாக ஒழுங்கமைக்கலாம்.

நிரந்தரமாக நீக்கப்படுவதற்கான வரம்பு

"நீக்கியவை" ஃபோல்டரில் உள்ள உங்கள் மெசேஜ்கள் Gmailலின் 30 நாள் வரம்பின்படி நீக்கப்படாது. அதற்குப் பதிலாக, உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சேவையின் “நீக்கியவை ஃபோல்டரைக் காலிசெய்யும்” வரம்பின் அடிப்படையிலேயே அவை நீக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சேவையின்படி 60 நாட்களுக்குப் பிறகு “நீக்கியவை” ஃபோல்டரில் இருந்து மெசேஜ் நிரந்தரமாக நீக்கப்படும் என்றால் Gmailலின் ”நீக்கியவை” ஃபோல்டரிலும் அந்த மெசேஜ் 60 நாட்களுக்கு இருக்கும்.

காப்பிடப்பட்ட மின்னஞ்சல்கள்

Gmailலில் ஒரு மின்னஞ்சலை நீங்கள் காப்பிடும்போது உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சேவையில், புதிய “காப்பகம்” ஃபோல்டரில் அது சேமிக்கப்படும்.

உங்கள் மூன்றாம் தரப்புக் கணக்கில் உள்ள காப்பிடப்பட்ட மெசேஜ்களைக் கண்டறிய "காப்பகம்" ஃபோல்டரைப் பார்க்கவும்.

மின்னஞ்சலைக் காப்பிடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

லேபிள்கள் மற்றும் ஃபோல்டர்கள்

மெசேஜிற்கு லேபிளைச் சேர்க்கும்போது, உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் கணக்கில் அந்த லேபிள் பெயருடன் இருக்கும் ஃபோல்டரில் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக, Gmailலில் உள்ள ஒரு மெசேஜில் "பணி" என்ற லேபிளைச் சேர்த்தால், உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் கணக்கில் அந்த மெசேஜ் “பணி” என்ற ஃபோல்டரில் காட்டப்படும்.

ஒரு மெசேஜிற்குப் பல லேபிள்களைச் சேர்த்தால், உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் கணக்கில் ஒவ்வொரு லேபிளுக்கும் ஒவ்வொரு ஃபோல்டர் உருவாக்கப்பட்டு அவற்றில் அந்த மெசேஜின் நகல் சேர்க்கப்படும்.

உதவிக்குறிப்பு: Gmail அல்லாத உங்கள் கணக்கில் சேமிப்பிடம் குறைவாக இருந்தால் Gmailலில் உள்ள மெசேஜ்களுக்குப் பல லேபிள்களைச் சேர்க்க வேண்டாம்.

லேபிள்களைச் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10837613842295615557
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false