உங்களது பிற மின்னஞ்சல் கணக்குகளுக்கு Gmail அம்சங்களைப் பெறுதல்

Yahoo, AOL, Outlook, Hotmail அல்லது Gmail அல்லாத குறிப்பிட்ட கணக்குகளை நீங்கள் பயன்படுத்தினால் Gmailலின் அம்சங்கள் பலவற்றையும் அந்த முகவரியின் மூலம் பெற Gmailify அம்சத்தைப் பயன்படுத்தவும்.

இதைச் செய்ய உங்கள் கணக்கை Gmail உடன் இணைக்கவும். உங்கள் கணக்கை இணைத்தபிறகு உங்கள் மெசேஜ்கள் Gmail இன்பாக்ஸில் காட்டப்படுவதோடு இந்த அம்சங்களும் கிடைக்கும்:

முக்கியம்: ஏற்கெனவே உள்ள Gmail கணக்குடன் வேறொரு கணக்கை இணைத்தால் நீங்கள் சேமிப்பக வரம்பை அடையக்கூடும். உங்கள் Google சேமிப்பகத்தை அழிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Gmail உடன் வரும் சேமிப்பகம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

மின்னஞ்சல் முகவரியை Gmailலுடன் இணைத்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை அமைப்புகள் கிளிக் செய்து அதன் பிறகு எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கணக்குகள் மற்றும் பதிவிறக்கம் அல்லது கணக்குகள் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. "பிற கணக்குகளில் உள்ள அஞ்சலைப் பார்க்கவும்" பிரிவில் மின்னஞ்சல் கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. இணைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து அதன் பிறகு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. Gmail (Gmailify) உடன் கணக்கை இணை அதன் பிறகு என்பதைத் தேர்ந்தெடுத்து அடுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. திரையில் காட்டப்படும் படிகளைப் பின்பற்றி அதன் பிறகு அடுத்து அல்லது உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.

கணக்கை இணைத்தபிறகு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்து "Gmailify" என்று காட்டப்படும். Gmailலைத் திறக்கும்போது, Gmailலில் செய்வது போலவே உங்கள் மூன்றாம் தரப்புக் கணக்கில் இருந்து வரும் மெசேஜ்களைப் படிக்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம், ஒழுங்கமைக்கலாம்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியின் இணைப்பை நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை அமைப்புகள் கிளிக் செய்து அதன் பிறகு எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கணக்குகள் மற்றும் பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "பிற கணக்குகளில் உள்ள அஞ்சலைப் பார்க்கவும்" பிரிவில் இணைப்புநீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Gmailலில் இருந்து மூன்றாம் தரப்புக் கணக்கின் இணைப்பை நீக்கியபிறகும், அந்தக் கணக்கில் ஏற்கெனவே உள்ள மெசேஜ்களின் நகல்களை Gmail இன்பாக்ஸில் வைத்துக்கொள்ளவோ நீக்கவோ நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  • Gmailலில் இருந்து நகல்களை நீக்கினாலும் மூன்றாம் தரப்புச் சேவையின் (உதாரணம்: Yahoo, Hotmail) இன்பாக்ஸில் உங்கள் மெசேஜ்களைத் தொடர்ந்து படிக்க முடியும்.
  • Gmailலில் நகல்களை வைத்துக்கொண்டால் உங்கள் Gmail கணக்கில் அவை தொடர்ந்து இருக்கும். இருப்பினும், Gmailலில் இருந்து அவற்றை நகர்த்தினாலோ நீக்கினாலோ இந்தச் செயல்கள் உங்கள் மூன்றாம் தரப்புக் கணக்கில் பிரதிபலிக்காது.

உங்களுடைய வேறு கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை Gmailலில் பார்க்கலாம்

பிற மின்னஞ்சல் சேவைகளில் இருந்து வரும் மெசேஜ்களை Gmail வித்தியாசமாக ஒழுங்கமைக்கலாம்.

நிரந்தரமாக நீக்கப்படுவதற்கான வரம்பு

"நீக்கியவை" ஃபோல்டரில் உள்ள உங்கள் மெசேஜ்கள் Gmailலின் 30 நாள் வரம்பின்படி நீக்கப்படாது. அதற்குப் பதிலாக, உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சேவையின் “நீக்கியவை ஃபோல்டரைக் காலிசெய்யும்” வரம்பின் அடிப்படையிலேயே அவை நீக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சேவையின்படி 60 நாட்களுக்குப் பிறகு “நீக்கியவை” ஃபோல்டரில் இருந்து மெசேஜ் நிரந்தரமாக நீக்கப்படும் என்றால் Gmailலின் ”நீக்கியவை” ஃபோல்டரிலும் அந்த மெசேஜ் 60 நாட்களுக்கு இருக்கும்.

காப்பிடப்பட்ட மின்னஞ்சல்கள்

Gmailலில் ஒரு மின்னஞ்சலை நீங்கள் காப்பிடும்போது உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் சேவையில், புதிய “காப்பகம்” ஃபோல்டரில் அது சேமிக்கப்படும்.

உங்கள் மூன்றாம் தரப்புக் கணக்கில் உள்ள காப்பிடப்பட்ட மெசேஜ்களைக் கண்டறிய "காப்பகம்" ஃபோல்டரைப் பார்க்கவும்.

மின்னஞ்சலைக் காப்பிடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

லேபிள்கள் மற்றும் ஃபோல்டர்கள்

மெசேஜிற்கு லேபிளைச் சேர்க்கும்போது, உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் கணக்கில் அந்த லேபிள் பெயருடன் இருக்கும் ஃபோல்டரில் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக, Gmailலில் உள்ள ஒரு மெசேஜில் "பணி" என்ற லேபிளைச் சேர்த்தால், உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் கணக்கில் அந்த மெசேஜ் “பணி” என்ற ஃபோல்டரில் காட்டப்படும்.

ஒரு மெசேஜிற்குப் பல லேபிள்களைச் சேர்த்தால், உங்கள் மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் கணக்கில் ஒவ்வொரு லேபிளுக்கும் ஒவ்வொரு ஃபோல்டர் உருவாக்கப்பட்டு அவற்றில் அந்த மெசேஜின் நகல் சேர்க்கப்படும்.

உதவிக்குறிப்பு: Gmail அல்லாத உங்கள் கணக்கில் சேமிப்பிடம் குறைவாக இருந்தால் Gmailலில் உள்ள மெசேஜ்களுக்குப் பல லேபிள்களைச் சேர்க்க வேண்டாம்.

லேபிள்களைச் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6612373215224336989
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false