நீங்கள் வைத்திருக்கும் மற்ற கணக்குகளில் உள்ள மின்னஞ்சல்களைப் பார்த்தல்

உங்களிடம் பல மின்னஞ்சல் கணக்குகள் இருந்தால் அவற்றை Gmailலில் பார்க்கலாம். Gmail ஆப்ஸில் மற்றொரு மின்னஞ்சல் கணக்கைச் சேர்ப்பது எப்படி என அறிக.

முக்கியமானது: நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு மின்னஞ்சல் கணக்கு பாதுகாப்பான இணைப்புகளை ஆதரிக்கவில்லை என்றால் உங்களால் அதை இணைக்க முடியாது.

அனைத்து மெசேஜ்களையும் பெறுதல் 

நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு மின்னஞ்சல் கணக்கில் இருந்து பழைய, புதிய ஆகிய இரண்டு மெசேஜ்களையும் இறக்க முடியும். 

கவனத்திற்கு: நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு கணக்கில் இருந்து மெசேஜ்களை மட்டுமே நகர்த்த முடியும். கோப்புறைகளையோ லேபிள்களையோ நகர்த்த முடியாது.

படி 1: நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு கணக்கில் உள்ள அமைப்புகளை மாற்றுதல்

Yahoo, Outlook, அல்லது பிற மின்னஞ்சல் சேவை

நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு கணக்கிற்கு POP அணுகல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். பின்னர் உங்கள் Gmail அமைப்புகளை மாற்றவும்.

நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு Gmail கணக்கு

  1. கம்ப்யூட்டரில் எந்த Gmail கணக்கிலிருந்து மின்னஞ்சல்களை இறக்க விரும்புகிறீர்களோ அந்தக் கணக்கில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. முன்னனுப்புதல் மற்றும் POP/IMAP தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. "POP பதிவிறக்கம்" பிரிவில் அனைத்து அஞ்சல்களுக்கும் POPபை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பரிந்துரைக்கப்படுவது: "POP மூலம் மெசேஜ்களை அணுகும்போது:" என்பதற்கு அடுத்துள்ள Gmailலின் நகலை இன்பாக்ஸில் வைத்திரு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. கீழே மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2: உங்கள் Gmail அமைப்புகளை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் எந்த Gmail கணக்கிற்கு மின்னஞ்சல்களை இறக்க விரும்புகிறீர்களோ அந்தக் கணக்கில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கணக்குகள் மற்றும் இறக்குதல் தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. "நீங்கள் வைத்திருக்கும் மற்ற கணக்குகளில் இருந்து மின்னஞ்சலைப் பெறுதல்" பிரிவில் மின்னஞ்சல் கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு கணக்கின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்ட பின்னர் அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  8. பரிந்துரைக்கப்படுவது: பின்வரும் விருப்பங்களுக்கு அடுத்துள்ள பெட்டிகளைத் தேர்வுசெய்யவும்:
    • "மின்னஞ்சலை மீட்டெடுக்கும்போது எப்போதும் ஒரு பாதுகாப்பான இணைப்பை (SSL) பயன்படுத்து"
    • "வரும் மெசேஜ்களுக்கு லேபிளிடு"
    • மற்ற பெட்டிகளைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிடவும்.
  9. கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

"POP3 அணுகலைச் சேவையகம் நிராகரித்தது"

  • இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் புதிய ஆப்ஸ் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • பணியிட அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் "POP சேவையகம்" பிரிவில் mail.domain.comமை உள்ளிட்ட பின்னர் போர்ட் 110 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் பணியிட அல்லது பள்ளிக் கணக்குடன் Google MX பதிவுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் "POP சேவையகம்" பிரிவில் pop.gmail.comமை உள்ளிட்ட பின்னர் போர்ட் 995 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இதற்குப் பின்னரும் உள்நுழைய முடியவில்லை என்றால் பாதுகாப்பு குறைவான ஆப்ஸுக்கான அணுகலை இயக்கிப் பாருங்கள். இத்துடன் நீங்கள் பாதுகாப்புக் குறியீட்டையோ உருக்குலைந்த உரையையோ முடக்க வேண்டியிருக்கலாம்.

மற்ற பிழைகளைத் திருத்த, அஞ்சல் கொணர்வான் மூலம் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துவது எப்படி என அறிக.

வேறொரு பிழையைக் காட்டுகிறது

பிழை விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்த பின்னர் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:

  • POP முடக்கப்பட்டிருந்தால் நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு மின்னஞ்சல் கணக்கின் அமைப்புகள் பக்கத்திற்குச் சென்று POPபை இயக்குவதற்கான வழியைக் கண்டறியவும்.
  • POP இல்லை என்றால் உங்கள் மின்னஞ்சல் வழங்குநர் அதை ஆதரிக்காமல் இருக்கக்கூடும். இதற்குப் பதிலாக, பழைய மெசேஜ்களை இறக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும். பின்னர் புதியவற்றை தானாக முன்னனுப்பும்படி அமைக்கவும்.

மற்ற பிழைகளைத் திருத்த, அஞ்சல் கொணர்வான் மூலம் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துவது எப்படி என அறிக.

பழைய மெசேஜ்களை மட்டும் பெறுதல்

சமீபத்தில் Gmailலுக்கு மாறியிருந்தால் நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு கணக்கில் உள்ள பழைய மின்னஞ்சல்களை நீங்கள் இடமாற்றிக் கொள்ளலாம்.

முக்கியமானது: உங்கள் பணியிட அல்லது பள்ளிக் கணக்குடன் Gmailலைப் பயன்படுத்தும்போது, மின்னஞ்சலை இறக்குவதற்கான விருப்பம் தோன்றவில்லை என்றால் இந்த அம்சத்தை உங்கள் நிர்வாகி முடக்கியிருக்கக்கூடும்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கணக்குகள் மற்றும் இறக்குதல் அல்லது கணக்குகள் தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. இரண்டாம் பிரிவில் தொடர்புகள் மற்றும் மின்னஞ்சலை இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  6. இறக்குவதைத் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் புதிய Gmail முகவரியைப் பற்றி நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்கான நேரத்தை வழங்கும் வகையில், அடுத்த 30 நாட்களுக்கு நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு கணக்கிற்கு அனுப்பப்படுகிற மெசேஜ்களை முன்னனுப்புவோம். உங்களது புதிய Gmail முகவரியை 60 நாட்கள் வரை காட்டுவோம் அல்லது நீங்கள் நினைவூட்டலை நீக்கும்வரை காட்டுவோம்.

மின்னஞ்சல்கள் இறக்குவதை நிறுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் எந்த Gmail கணக்கிற்கு மின்னஞ்சல்களை இறக்கிக்கொண்டிருந்தீர்களோ அந்தக் கணக்கைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கணக்குகள் மற்றும் இறக்குதல் தாவலைக் கிளிக் செய்யவும்.
  4. "நீங்கள் வைத்திருக்கும் மற்ற கணக்குகளில் உள்ள அஞ்சலைப் பார்த்தல்" பிரிவில் எந்தக் கணக்கில் இருந்து வரும் மின்னஞ்சல்களை நீங்கள் நிறுத்த விரும்புகிறீர்களோ அதற்கு அடுத்துள்ள நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: இதற்குப் பின்னரும் மின்னஞ்சல்களைப் பெறுகிறீர்கள் என்றால் நீங்கள் வைத்திருக்கும் மற்றொரு கணக்கில் தானாக முன்னனுப்பும் அம்சம் இயக்கத்தில் உள்ளதா என்பதைப் பார்க்கவும். பின்னர் அந்தக் கணக்கில் அதை எப்படி முடக்குவது என்பது குறித்து தேடிப் பார்க்கவும். ஏற்கெனவே இறக்கப்பட்ட மின்னஞ்சல்களை நீக்க விரும்பினால் அவற்றை நீக்குவது எப்படி என அறிக. 

புதிய மெசேஜ்களை மட்டும் முன்னனுப்புதல்

வேறொரு Gmail முகவரியில் இருந்து வரும் மெசெஜ்களை முன்னனுப்ப, தானாக முன்னனுப்புதல் அம்சத்தை அமைக்கவும்.

Yahoo, Outlook அல்லது வேறொரு மின்னஞ்சல் சேவையில் இருந்து வரும் மெசேஜ்களை முன்னனுப்ப, அந்தச் சேவையில் இருந்து வரும் மின்னஞ்சல்களைத் தானாக முன்னனுப்புவது எப்படி எனத் தேடிப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11441728842566655508
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false