நீங்கள் Google Chatடில் ஸ்பேஸை உருவாக்கும்போது தானாகவே ஸ்பேஸ் நிர்வாகியாக மாறிவிடுவீர்கள். ஸ்பேஸ் நிர்வாகியாக நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
- பங்கேற்பாளர்களை அகற்றுதல் மற்றும் சேர்த்தல்.
- பிறரை ஸ்பேஸ் நிர்வாகிகளாகத் தரம் உயர்த்துதல் அல்லது ஸ்பேஸ் நிர்வாகிகள் பட்டியலில் இருந்து அகற்றுதல்.
- ஸ்பேஸை நீக்குதல்.
- மெசேஜ்களை நீக்குதல்.
- ஸ்பேஸின் பெயர், தோற்றப் படம், விளக்கம் ஆகியவற்றை மாற்றுதல்.
மெசேஜ் ஸ்ட்ரீமிலும் ஸ்பேஸின் உறுப்பினர்கள் பட்டியலிலும் ஸ்பேஸ் நிர்வாகிகளின் பெயருக்கு அடுத்து ஒரு டைமண்ட் சின்னம் இருக்கும்.
பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தும் ஸ்பேஸ் நிர்வாகிகள் ஸ்பேஸ் அணுகல், அனுமதிகள் போன்ற கூடுதல் அமைப்புகளை மாற்றலாம். ஸ்பேஸ் அணுகலையும் அனுமதிகளையும் மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
உறுப்பினர்களைச் சேர்த்தல்
- iPhone/iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
- ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸின் பெயரைத் தட்டி உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
- நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்/குழுவின் பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள முடிந்தது என்பதைத் தட்டவும்.
உறுப்பினர்களை அகற்றுதல்
- iPhone/iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
- ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸின் பெயரைத் தட்டி உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
- "உறுப்பினர்கள்" என்பதற்குக் கீழ், நீங்கள் அகற்ற விரும்புபவரின் பெயருக்கு அடுத்துள்ள மேலும் விருப்பங்களுக்கான மூன்று புள்ளி மெனுவை தட்டி ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைத் தட்டவும்.
ஒருவரை ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்றுதல்
- iPhone/iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
- ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸின் பெயரைத் தட்டி உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
- "உறுப்பினர்கள்" என்பதற்குக் கீழ், நீங்கள் நிர்வாகியாக மாற்ற விரும்புபவரின் பெயருக்கு அடுத்துள்ள மேலும் விருப்பங்களுக்கான மூன்று புள்ளி மெனுவை தட்டி ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்று என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: ஸ்பேஸை நீக்கினாலோ வேறு ஒருவரை ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்றினாலோ மட்டுமே கடைசியாக இருக்கும் ஸ்பேஸ் நிர்வாகி ஸ்பேஸை விட்டு வெளியேற முடியும்.
ஸ்பேஸ் நிர்வாகியை உறுப்பினராக மாற்றுதல்
- iPhone/iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
- ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸின் பெயரைத் தட்டி உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
- "உறுப்பினர்கள்" என்பதற்குக் கீழ், நீங்கள் உறுப்பினராக மாற்ற விரும்புபவரின் பெயருக்கு அடுத்துள்ள மேலும் விருப்பங்களுக்கான மூன்று புள்ளி மெனுவை தட்டி ஸ்பேஸ் நிர்வாகியில் இருந்து உறுப்பினராக மாற்று என்பதைத் தட்டவும்.
மெசேஜ்களை நீக்குதல்
ஸ்பேஸ் நிர்வாகிகளால் அனைத்து மெசேஜ்களையும் ஸ்பேஸில் இருந்து நீக்க முடியும். ஸ்பேஸ் உறுப்பினர்களால் அவர்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே நீக்க முடியும். ஸ்பேஸ் உறுப்பினராக ஒரு மெசேஜை எப்படி நீக்குவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- iPhone/iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
- ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- மெசேஜை நீக்க அதைத் தட்டிப் பிடிக்கவும்.
- காட்டப்படும் சாளரத்தில் நீக்கு என்பதைத் தட்டவும்.
முக்கியம்:
- ஸ்பேஸில் இருந்து ஏதேனும் மெசேஜை நீக்கினால் அது நீக்கப்பட்டதற்கான நேரமுத்திரை காட்டப்படலாம். உங்கள் நிறுவனத்தின் தக்கவைத்தல் கொள்கையைப் பொறுத்து 30 நாட்களுக்கோ அதைவிட அதிக நாட்களுக்கோ நேரமுத்திரை காட்டப்படும்.
- “மெசேஜ்களை நீக்குதல்” அம்சம் குறிப்பிட்ட சந்தாக்களுக்கு மட்டுமே கிடைக்கும், மேலும் அது உங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கில் கிடைக்காமல் போகலாம்.
ஸ்பேஸிற்கான விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் மாற்றுதல்
ஸ்பேஸ் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தைப் பிறர் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்பேஸ் நிர்வாகிகள் ஸ்பேஸிற்கான விளக்கத்தைச் சேர்க்கலாம் மாற்றலாம். உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கவும், பாதுகாப்பான சமூக அனுபவத்தை உருவாக்கவும் வழிகாட்டுதல்களை நீங்கள் சேர்க்கலாம் மாற்றலாம்.
- iPhone/iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
- ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸின் பெயரைத் தட்டவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள ஸ்பேஸ் விவரங்களைத் திருத்துவதற்கான ஐகானை தட்டவும்.
- விளக்கத்தையும் வழிகாட்டுதல்களையும் சேர்க்கவும்.
- சேமி என்பதைத் தட்டவும்.