ஸ்பேஸ் நிர்வாகியாக உங்கள் பொறுப்பு குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் Google Chatடில் ஸ்பேஸை உருவாக்கும்போது தானாகவே ஸ்பேஸ் நிர்வாகியாக மாறிவிடுவீர்கள். ஸ்பேஸ் நிர்வாகியாக நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • பங்கேற்பாளர்களை அகற்றுதல் மற்றும் சேர்த்தல்.
  • பிறரை ஸ்பேஸ் நிர்வாகிகளாகத் தரம் உயர்த்துதல் அல்லது ஸ்பேஸ் நிர்வாகிகள் பட்டியலில் இருந்து அகற்றுதல்.
  • ஸ்பேஸை நீக்குதல்.
  • மெசேஜ்களை நீக்குதல்.
  • ஸ்பேஸின் பெயர், தோற்றப் படம், விளக்கம் ஆகியவற்றை மாற்றுதல்.

மெசேஜ் ஸ்ட்ரீமிலும் ஸ்பேஸின் உறுப்பினர்கள் பட்டியலிலும் ஸ்பேஸ் நிர்வாகிகளின் பெயருக்கு அடுத்து ஒரு டைமண்ட் சின்னம் இருக்கும்.

பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தும் ஸ்பேஸ் நிர்வாகிகள் ஸ்பேஸ் அணுகல், அனுமதிகள் போன்ற கூடுதல் அமைப்புகளை மாற்றலாம். ஸ்பேஸ் அணுகலையும் அனுமதிகளையும் மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

உறுப்பினர்களைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. + சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சேர்க்க விரும்பும் நபர்/குழுவின் பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யவும்.
  6. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உறுப்பினர்களை அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அகற்ற விரும்பும் நபருக்கு அருகில் உள்ள மேலும் செயல்களுக்கான மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒருவரை ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நிர்வாகியாக மாற்ற விரும்பும் நபருக்கு அருகில் உள்ள மேலும் செயல்களுக்கான மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸை நீக்கினாலோ வேறு ஒருவரை ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்றினாலோ மட்டுமே கடைசியாக இருக்கும் ஸ்பேஸ் நிர்வாகி ஸ்பேஸை விட்டு வெளியேற முடியும்.

ஸ்பேஸ் நிர்வாகியை உறுப்பினராக மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து And then உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உறுப்பினராக மாற்ற விரும்பும் நபருக்கு அருகில் உள்ள மேலும் செயல்களுக்கான மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து And then ஸ்பேஸ் நிர்வாகியில் இருந்து உறுப்பினராக மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

மெசேஜ்களை நீக்குதல்

ஸ்பேஸில் உள்ள எந்த மெசேஜையும் ஸ்பேஸ் நிர்வாகிகளால் நீக்க முடியும். ஸ்பேஸ் உறுப்பினர்களால் அவர்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே நீக்க முடியும். ஸ்பேஸ் உறுப்பினராக ஒரு மெசேஜை எப்படி நீக்குவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீக்க வேண்டிய மெசேஜின் மீது கர்சரை வைக்கவும்.
  4. மூன்று புள்ளி மெனு அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. காட்டப்படும் சாளரத்தில் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
முக்கியம்:
  • ஸ்பேஸில் இருந்து ஏதேனும் மெசேஜை நீக்கினால் அது நீக்கப்பட்டதற்கான நேரமுத்திரை காட்டப்படலாம். உங்கள் நிறுவனத்தின் தக்கவைத்தல் கொள்கையைப் பொறுத்து 30 நாட்களுக்கோ அதைவிட அதிக நாட்களுக்கோ நேரமுத்திரை காட்டப்படும்.
  • “மெசேஜ்களை நீக்குதல்” அம்சம் குறிப்பிட்ட சந்தாக்களுக்கு மட்டுமே கிடைக்கும், மேலும் அது உங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கில் கிடைக்காமல் போகலாம்.

ஸ்பேஸிற்கான விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் மாற்றுதல்

ஸ்பேஸ் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தைப் பிறர் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்பேஸ் நிர்வாகிகள் ஸ்பேஸிற்கான விளக்கத்தைச் சேர்க்கலாம் மாற்றலாம். உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கவும், பாதுகாப்பான சமூக அனுபவத்தை உருவாக்கவும் வழிகாட்டுதல்களை நீங்கள் சேர்க்கலாம் மாற்றலாம்.
  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸ் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேஸ் விவரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. காட்டப்படும் சாளரத்தில், திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. விளக்கத்தையும் வழிகாட்டுதல்களையும் சேர்க்கவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14273781358057660948
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false