வருகையாளர்களுடன் ஆவணங்களைப் பகிர்தல்

உங்கள் நிறுவனம் அனுமதித்தால் Google கணக்கு இல்லாதவர்களை உங்கள் Drive ஃபைல்களிலும் ஃபோல்டர்களிலும் கூட்டுப்பணி செய்ய 'வருகையாளர்களாக' அழைக்கலாம். பகிர்வதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம் அல்லது வருகையாளர்கள் உங்கள் ஃபைலைக் கண்டறிய வேண்டுமா, திருத்த வேண்டுமா அல்லது கருத்திட வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

வருகையாளர்களுடன் பகிர்தல்

வருகையாளருடன் பகிர்தல் அம்சம் உங்கள் நிறுவனத்திற்கு இயக்கப்பட்ட பிறகு Google அல்லாத கணக்குகளுடனும் நீங்கள் ஆவணங்களைப் பகிரலாம். வருகையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்த பிறகு, அவர்களால் 7 நாட்களுக்கு உங்கள் ஆவணத்தைத் திருத்த, பார்க்க அல்லது அதில் கருத்து தெரிவிக்க முடியும். இன்னும் அதிக நாட்கள் அவர்கள் நிச்சயமாகக் கூட்டுப்பணி செய்ய வேண்டும் என்றால் முதலில் வந்த பகிர்வு மின்னஞ்சலில் இருக்கும் இணைப்பின் மூலம் தங்களின் அடையாளத்தை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும். எந்தெந்தக் கணக்குகளுக்குப் பகிரலாம் என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

  1. கம்ப்யூட்டரில் உங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கில் உள்நுழையவும்.
  2. Google Drive, Docs, Sheets அல்லது Slidesஸுக்குச் செல்லவும்.
  3. பகிர வேண்டிய ஃபைலைக் கிளிக் செய்து அதன் பிறகு பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "நபர்களுடனும் குழுக்களுடனும் பகிர்தல்" என்பதன் கீழ், நீங்கள் ஃபைலைப் பகிர விரும்பும் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும்.
  5. உங்கள் ஆவணத்தில் பிறர் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை மாற்ற, வலதுபுறத்தில் உள்ள கீழ்த்தோன்றல் அம்புக்குறி Dropdown அதன் பிறகு பார்வையாளர், கருத்து தெரிவிப்பவர் அல்லது திருத்தக்கூடியவர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

Google அல்லாத டொமைனுடன் பகிரக்கூடிய கோப்பு வகைகள்
  • Google Docs, Sheets, Slides, Sites, Images, PDFகள் & Office ஃபைல்கள்
  • பகிர்ந்த இயக்ககத்தில் உள்ள ஃபோல்டர்கள் அல்லது துணை ஃபோல்டர்கள்
Google அல்லாத டொமைன் பயனரை அகற்றுதல்

பார்வையாளரின் அணுகலை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நீக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் உங்கள் பணி/பள்ளிக் கணக்கில் உள்நுழையவும்.
  2. Google Drive, Docs, Sheets அல்லது Slidesஸுக்குச் செல்லவும்.
  3. பார்வையாளருடன் பகிரப்பட்ட கோப்பைக் கிளிக் செய்யவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள பகிர் அதன் பிறகு மேம்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பார்வையாளருக்கு அடுத்துள்ள அகற்றுஅகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. மாற்றங்களைச் சேமி அதன் பிறகு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

வருகையாளராக Drive ஃபைல்களில் கூட்டுப்பணி செய்தல்

Google ஃபைலில் கூட்டுப்பணி செய்வதற்கான அழைப்பைப் பெற்றால் பின் (PIN) மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும். அதன் பிறகு, பகிர்ந்த ஃபைல் அல்லது ஃபோல்டரில் 7 நாட்களுக்கு நீங்கள் கூட்டுப்பணி செய்யலாம். இன்னும் அதிக நாட்கள் கூட்டுப்பணி செய்ய வேண்டும் என்றால் முதலில் வந்த பகிர்வு மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம் உங்கள் அடையாளத்தை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும்.

வருகையாளராக நீங்கள்:

  • பகிர்ந்த ஆவணங்களைப் பார்க்கலாம், அவற்றில் திருத்தங்களைப் பரிந்துரைக்கலாம், கருத்து தெரிவிக்கலாம்.
  • Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றின் மூலம், பகிர்ந்த இயக்ககத்தில் உள்ள ஃபோல்டர்களிலோ துணை ஃபோல்டர்களிலோ ஃபைல்களை உருவாக்கலாம்.

பங்களிப்பாளர் அணுகல் உள்ள வருகையாளர்கள், பகிர்ந்த இயக்கக ஃபோல்டர்களிலோ துணை ஃபோல்டர்களிலோ ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பதிவேற்றவும் பதிவிறக்கவும் முடியும்.

முக்கியம்:

  • வருகையாளர்கள் தரவின் உரிமையாளராக முடியாது. பகிர்ந்த இயக்ககத்தின் உறுப்பினர்களாக அவர்களை அடிப்படை நிலையில் சேர்க்க முடியாது.
  • எனது Driveவில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் வருகையாளர்கள் பதிவேற்றவோ உருவாக்கவோ முடியாது.

Web visitor sharing

வருகையாளராகக் கூட்டுப்பணி செய்தல்

  1. உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில், உங்கள் தொடர்பில் இருந்து வந்த அழைப்பு மின்னஞ்சலைத் திறக்கவும்.
  2. திற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில், Googleளிடம் இருந்து வந்த சரிபார்ப்புக் குறியீட்டு மின்னஞ்சலைத் திறக்கவும்.
  4. சரிபார்ப்புக் குறியீட்டை நகலெடுக்கவும்.
  5. “உறுதிப்படுத்தல்” உலாவிப் பக்கத்திற்குத் திரும்பவும்.
  6. வழங்கப்பட்டுள்ள பெட்டியில் சரிபார்ப்புக் குறியீட்டை டைப் செய்யவும்.
  7. அடுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பகிரப்பட்ட Google ஃபைல் அல்லது ஃபோல்டரில் இப்போது நீங்கள் கூட்டுப்பணி செய்யலாம்.கருத்துகளைச் சேர்த்தல், திருத்துதல், நீக்குதல், அவற்றுக்குப் பதிலளித்தல் ஆகியவற்றை எப்படிச் செய்வது என அறிக.

உதவிக்குறிப்பு: ஆவணத்தை மீண்டும் கண்டறிய, Googleளில் இருந்து வந்த மின்னஞ்சலைத் திறக்கவும்.

வருகையாளர் அமர்வை நீக்குதல்

உங்கள் வருகையாளர் அமர்வை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். உங்கள் வருகையாளர் அமர்வை நீக்கும்போது உங்கள் பெயர் அகற்றப்படும். உங்கள் கருத்துகள், மாற்றங்கள் ஆகியவற்றின் அங்கீகாரம் அறியாத பயனர் என்று மாற்றப்படும். 

முக்கியம்: உங்கள் வருகையாளர் அமர்வை நீக்கினால் உங்களுடன் பகிரப்பட்ட கோப்புகளுக்கான அணுகலை இழப்பீர்கள். அணுகலை மீண்டும் பெறுவதற்கு அந்தக் கோப்புகள் உங்களுடன் மீண்டும் பகிரப்பட வேண்டும்.

  1. உங்கள் தொடர்பில் இருந்து வந்த அழைப்பு மின்னஞ்சல் மூலம் வருகையாளர் அமர்வில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் பெயரின் முதல் எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வருகையாளர் அமர்வை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுத்து and then அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் சரிபார்ப்புக் குறியீட்டு மின்னஞ்சலைத் திறக்கவும்.
  5. சரிபார்ப்புக் குறியீட்டை நகலெடுக்கவும்.
  6. “உறுதிப்படுத்தல்” உலாவிப் பக்கத்திற்குத் திரும்பவும்.
  7. வழங்கப்பட்டுள்ள பெட்டியில் சரிபார்ப்புக் குறியீட்டை டைப் செய்யவும்.
  8. அடுத்து என்பதைத் தேர்ந்தெடுத்து and then and then நீக்கு செக்பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

Google கணக்கை உருவாக்குதல்

அதே மின்னஞ்சல் முகவரி மூலம் வருகையாளர் அமர்விலிருந்து Google கணக்கிற்கு மாற நீங்கள் முதலில் வருகையாளர்களுடன் ஆவணங்களைப் பகிர வேண்டும். அதன் பிறகு Google கணக்கை உருவாக்கலாம் அல்லது Google Workspaceஸுக்குப் பதிவு செய்யலாம். உங்கள் வருகையாளர் அமர்வை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கவனத்திற்கு. உங்களால் வருகையாளர் அமர்வில் இருந்து Google குழுவிற்கு மாற முடியாது. மின்னஞ்சல் முகவரியை ஒரு குழுவிற்குப் பயன்படுத்த, உங்கள் வருகையாளர் அமர்வை நீங்கள் நீக்க வேண்டும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14662451322618972094
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false