Box, Dropbox, Egnyte போன்றவற்றில் Google Docs, Sheets, Slides ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்

Google Drive, Box, Dropbox, Egnyte போன்ற கிளவுட் சேமிப்பக வழங்குநர்களில் Google Docs, Sheets மற்றும் Slidesஸை நீங்கள் பயன்படுத்த முடியும்.

Box, Dropbox, Egnyte போன்றவற்றை உங்கள் கிளவுட் சேமிப்பக வழங்குநராகப் பயன்படுத்தச் செய்யவேண்டியவை:

  • Google மற்றும் Box, Dropbox அல்லது Egnyteல் உங்களுக்குக் கணக்கு இருக்க வேண்டும்.
  • Googleளிற்கும் கிளவுட் சேமிப்பக வழங்குநருக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
  • Box, Dropbox, Egnyte போன்றவற்றில் உங்கள் Google கோப்புகளை உருவாக்குவது, திருத்துவது, சேமிப்பது ஆகியவற்றுக்கான வழிமுறையை அறிக.

கவனத்தில் கொள்க: Box, Dropbox அல்லது Egnyte கணக்கிற்கு நீங்கள் பணம் செலுத்தி இருந்தால் இந்த அம்சம் பணியில் அல்லது பள்ளி மூலம் பயன்படுத்தும் G Suite கணக்கு இருந்தால் மட்டும் செயல்படும்.

பணியில் அல்லது பள்ளியில் Box, Dropbox அல்லது Egnyteடைப் பயன்படுத்துதல்

  • Google மற்றும் Box, Dropbox, Egnyteடில் உங்கள் பணி அல்லது பள்ளி நிர்வாகிக்குக் கணக்கு இருக்க வேண்டும்.
  • மூன்றாம் தரப்பு சேமிப்பக வழங்குநர்களை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை உங்கள் நிர்வாகி தீர்மானிக்கிறார். தேவையான ஒன்றை உங்களால் பயன்படுத்த முடியவில்லை எனில் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
  • உங்கள் பணி/பள்ளிக் கணக்கில் Google Driveவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை உங்கள் நிர்வாகி தீர்மானிக்கிறார். Google Drive அணுகலைப் பெற, உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
  • பிற கிளவுட் சேமிப்பக வழங்குநர்களில் சேமிக்கப்பட்ட Google ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள் ஆகியவை அந்தச் சேமிப்பக வழங்குநரின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
  • கோப்பு அணுகல் கட்டுப்பாடு உள்ளிட்ட கோப்பு நிர்வாகம், நீக்கம், ஏற்றுமதிகள் ஆகியவற்றை கிளவுட் சேமிப்பக வழங்குநர் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். பிற கிளவுட் சேமிப்பக வழங்குநர்களில் சேமிக்கப்பட்டுள்ள Google ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள் ஆகியவற்றுக்கு அணுகல் கட்டுப்பாடு, தரவு இருப்பிட கமிட்மெண்ட்டுகள், தரவு இழப்புத் தடுப்பு (Data Loss Prevention - DLP), வால்ட் தக்கவைத்தல் கொள்கைகள், Drive API அணுகல் ஆகியவை உள்ளிட்ட Google Drive கோப்பு நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கான அணுகல் கிடைக்காது.
  • Box, Dropbox, Egnyte போன்றவற்றில் Google Docs, Sheets, Slides ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்துவது என அறிக.

உங்கள் Drive கோப்புகளை வேறொரு கிளவுட் சேமிப்பக வழங்குநருக்கு நகர்த்துதல்

நீங்கள் Google Drive கோப்புகளை Box, Dropbox, Egnyte போன்ற வேறொரு கிளவுட் சேமிப்பக வழங்குநருக்கு நகர்த்தலாம். இருப்பினும் நகர்த்திய கோப்புகளை Google Docs, Sheets, Slides ஆகியவற்றின் மூலம் திருத்தலாம்.

Box, Dropbox, Egnyte போன்றவற்றுக்குக் கோப்புகளை எப்படி நகர்த்துவது என அறிக.

முக்கியமானது: ஆதரிக்கப்படாத உள்ளடக்கத்தைக் கோப்புடன் சேர்த்து நகர்த்த முடியாது. அசல் கோப்பினை நீக்கினால் நகர்த்திய கோப்பினில் உள்ள ஆதரிக்கப்படாத உள்ளடக்கத்தை உங்களால் மீட்டெடுக்க முடியாமல் போகக்கூடும்.

பிற கிளவுட் சேமிப்பக வழங்குநர்களில் உள்ள ஆதரிக்கப்படாத அம்சங்கள்

Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் பயனர்கள் விரும்பக்கூடிய பெரும்பாலான செயல்பாடுகளை Google Workspaceடிற்கான பிற கிளவுட் சேமிப்பக வழங்குநர்கள் (எ.கா. Box, Dropbox, Egnyte) வழங்குகின்றன. இவற்றில் சில அம்சங்கள் தற்போது ஆதரிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, 30 நாட்களுக்குள் திறக்கப்படாத பதிப்பு வரலாறு எங்கள் அகற்றுதல் கொள்கையின் அடிப்படையில் அகற்றப்படும். Google Workspace சேவை விதிமுறைகள் குறித்து மேலும் அறிக

இந்த அம்சங்கள் ஆதரிக்கப்படவில்லை:

  • Google Forms
  • Google Sites
  • மொபைலைப் பயன்படுத்தி Google Docs, Sheets, Slides போன்றவற்றை Android & iOS ஆப்ஸில் திருத்துவது
  • வேறு Google Doc, Sheet, Slide ஆகியவற்றிலிருந்து இணைக்கப்பட்ட உள்ளடக்கத்தைச் செருகுவது
  • Sheetsஸின் தரவு இணைப்பான்களும் மேக்ரோக்களும்
  • Sheetsஸின் வரம்பை இறக்குதல் செயல்பாடு: IMPORTRANGE
  • Sheetsஸின் பாதுகாக்கப்பட்ட வரம்புகள்: பட்டியலில் உள்ள பயனர்களால் மட்டுமே இவற்றை மாற்ற முடியும்
  • Google Drive உள்ளடக்கம் (எ.கா. வரைபடங்கள், படங்கள், வீடியோக்கள், ஆடியோ போன்றவை)
  • Docs, Sheets, Slides ஆகியவற்றின் APIகளும் ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டுகளும்
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15693675678120685146
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false