ஸ்க்ரீன் ரீடரைப் பயன்படுத்தி Google Driveவில் செல்லுதல்

ஸ்க்ரீன் ரீடரைப் பயன்படுத்திச் செல்ல Drive இணைய இடைமுகத்தின் இந்தப் பகுதிகளைப் பயன்படுத்தவும்.

வழிசெலுத்துதல் பேனல்: Google Drive பார்வையையோ உங்கள் கோப்புறைகளில் ஒன்றையோ திறக்கவும். எனது இயக்ககம், என்னுடன் பகிர்ந்தவை, Google Photos, சமீபத்தியவை, நட்சத்திரமிட்டவை, நீக்கியவை ஆகியவை Google Drive பார்வைகள் ஆகும். 

  • வழிசெலுத்துதல் பேனலுக்குச் செல்ல g அதன்பிறகு n விசையை அழுத்தவும்.
  • வழிசெலுத்துதல் பேனல் வழியாக நகர்த்த கீழ் அல்லது மேல் அம்புக்குறியை அழுத்தவும்.
  • துணைக் கோப்புறையைத் திறக்க வலது அம்புக்குறியை அழுத்தவும்.
  • கோப்புறையைத் தேர்ந்தெடுக்க Enter விசையை அழுத்தவும்

முதன்மை உள்ளடக்கப் பகுதி: ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பட்டியல் அல்லது கட்டக் காட்சியில் பார்க்கலாம். Driveவில் ஃபைல்களும் ஃபோல்டர்களும் இயல்பாகவே பட்டியல் காட்சியில் காட்டப்படும்.

  • முதன்மைப் பகுதிக்குச் செல்ல g அதன்பிறகு l விசையை அழுத்தவும்.
  • பட்டியல் அல்லது கட்டம் வழியாகச் செல்ல அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.
  • ஆவணத்தைத் திறக்க o அல்லது Enter விசையை அழுத்தவும்.
  • கட்டம் அல்லது பட்டியல் காட்சிக்கு இடையில் மாற்ற v விசையை அழுத்தவும்.

விவரங்கள்: கோப்பு அல்லது கோப்புறையின் உரிமையாளர், அளவு, கடைசியாக மாற்றப்பட்டது போன்ற தகவல்களைக் கண்டறியவும்.

  • தகவல் பெட்டிக்குச் செல்ல g அதன்பிறகு d விசையை அழுத்தவும்.
  • தகவல் பெட்டியில் உள்ள இரண்டு தாவல்கள்: விவரங்கள் மற்றும் செயல்பாடு.
  • விவரங்கள் அல்லது செயல்பாட்டுத் தாவலைப் பார்க்க விர்ச்சுவல் கர்சர் அல்லது உலாவிப் பயன்முறையை இயக்கவும்.

Google பட்டி: Google Drive பட்டன்கள் மற்றும் மெனுக்களுக்கு மேலே, இடைமுகத்தின் உச்சியில் Google பட்டி இருக்கும். பிற Google ஆப்ஸுக்கான இணைப்புகளுடன் கூடிய ஆப்ஸ் பாப்-அப் மெனு, Google அறிவிப்புகள் பட்டன், பிற விருப்பங்கள் ஆகியவை இந்தப் பகுதியில் இருக்கும்.

கீபோர்ட் ஷார்ட்கட்

Drive வழியாக விரைவாக நகர்த்த நீங்கள் Drive கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம்.

Driveவில் ஷார்ட்கட்களின் பட்டியலைத் திறக்க Windows அல்லது Chrome OSஸில் Ctrl + / (முன்னோக்குச் சாய்வுக்கோடு) அல்லது Macகில் ⌘ + / (முன்னோக்குச் சாய்வுக்கோடு) விசைகளை அழுத்தவும்.

கோப்புகளைத் தேடுதல்

Driveவில் தேட:

  1. தேடல் பெட்டிக்குச் செல்ல / (முன்னோக்குச் சாய்வுக்கோடு) விசையை அழுத்தவும்.
  2. தேடல் வார்த்தைகளை உள்ளிட்டு பின்னர் Enter விசையை அழுத்தவும். தேடல் வார்த்தையுடன் பொருந்தும் கோப்புகளும் கோப்புறைகளும் பட்டியலிடப்படும்.
  3. தேடல் முடிவுகளில் உலாவ அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும்.

மேம்பட்ட தேடலை மேற்கொள்ள:

  1. தேடல் பெட்டிக்குச் செல்ல / (முன்னோக்குச் சாய்வுக்கோடு) விசையை அழுத்தவும்.
  2. தேடல் விருப்பங்கள் மெனுவுக்குச் செல்ல தாவல் அதன்பிறகு Enter. விசையை அழுத்தவும்
  3. உங்கள் தேடலை வரையறுக்க தேடல் விருப்பங்களில் உள்ள மெனுக்களையும் உரைப் புலங்களையும் பயன்படுத்தவும்.
  4. தேடல் பட்டனுக்குச் சென்று பிறகு Enter விசையை அழுத்தவும். தேடல் வார்த்தையுடன் பொருந்தும் கோப்புகளும் கோப்புறைகளும் பட்டியலிடப்படும்.
  5. தேடல் முடிவுகளில் உலாவ அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும்.

Driveவில் உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் உதவிக்குறிப்புக்கு உங்கள் கோப்புகளைத் தேடுக என்பதைப் பார்க்கவும். நீக்கிய கோப்பை மீட்டமைக்க அல்லது கண்டறிய கோப்பை எப்படிக் கண்டறிவது அல்லது மீட்டெடுப்பது என்பது குறித்து அறிக.

கோப்புகளை வரிசைப்படுத்துதல்

உங்கள் ஃபைல்களை வரிசைப்படுத்த:

  1. வரிசைப்படுத்துதல் மெனுவைத் திறக்க r அழுத்தவும்.
  2. மெனுவில் நகர கீழ்நோக்கிய அல்லது மேல்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தவும். "பெயர்", "மாற்றியது" போன்ற வரிசைப்படுத்துதல் விருப்பங்களுக்குச் செல்லும்போது அவை தேர்வுசெய்யப்பட்டுள்ளனவா இல்லையா என்பதைக் கவனிக்கவும்.
  3. வரிசைப்படுத்துதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க Enter பட்டனை அழுத்தவும். அப்போது ஃபோகஸ் மீண்டும் ஃபைல்கள், ஃபோல்டர்கள் பட்டியலுக்கு மாறும்.

உதவி & கருத்துத் தெரிவித்தல்

உதவி தொடர்பான ஆவணங்களைப் படிக்கவோ கருத்தை அனுப்பவோ:

  1. Google Drive அமைப்புகள் மெனுவைத் திறக்க t விசையை அழுத்தவும்.
  2. மெனுவில் உதவி என்பதற்குச் செல்லவும்.
  3. Googleளிடம் உங்கள் கருத்தை அனுப்ப உதவிக் கட்டுரைகளைத் தேடவும் அல்லது கருத்தை அனுப்பு என்பதைப் பயன்படுத்தவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6396042112535799629
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false