பல இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள ஃபைல்களுக்கும் ஃபோல்டர்களுக்கும் பதிலாக ஷார்ட்கட்களை எப்படிப் பயன்படுத்துவது என்று அறிக

பல இடங்களில் இருக்கும் ஃபைல்கள் & ஃபோல்டர்களுக்குப் பதிலாக ஷார்ட்கட்களைச் சேர்த்து உங்கள் ஃபைல் & ஃபோல்டர் கட்டமைப்புகளை Google Drive எளிதாக்குகிறது.

முன்பு, எனது Driveவில் பல இடங்களில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் நீங்கள் சேர்த்திருக்கலாம். ஃபைல் மற்றும் ஃபோல்டர் கட்டமைப்புகளை எளிமையாக்கவும் அவற்றில் உள்ளவற்றை எளிதாக அணுகவும் ஷார்ட்கட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷார்ட்கட்கள் மூலம் ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களின் அசல் பதிப்பை ஓர் இடத்தில் வைத்துக்கொண்டே பல Google Driveகளில் அவற்றை எளிதாகக் கண்டறியலாம் ஒழுங்கமைக்கலாம். ஷார்ட்கட்கள் மூலம் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் கண்டறிவது எப்படி என மேலும் அறிக.

இந்த மாற்றச் செயல்முறை எப்படி வேலைசெய்யும்?

  • இந்த மாற்றச் செயல்முறை 2022ல் தொடங்கும். இந்த மாற்றச் செயல்முறை தொடங்கும் சில வாரங்களுக்கு முன்பு Google Driveவில் அது குறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள்.
  • இந்த மாற்றச் செயல்முறையில் தற்போது பல்வேறு இடங்களில் இருக்கும் ஃபைல்களும் ஃபோல்டர்களும் இனி ஓர் இடத்தில் மட்டுமே இருக்கும். பிற இடங்களில் அவற்றுக்குப் பதிலாக ஷார்ட்கட்கள் சேர்க்கப்படும்.
  • அசல் ஃபைல் மற்றும் ஃபோல்டருக்கான உரிமையின் அடிப்படையில் இந்த மாற்றச் செயல்முறை இருக்கும். கூட்டுப்பணி செய்வதில் இடையூறுகளைக் குறைத்திடும் வகையில் பிற ஃபோல்டர்கள் அனைத்திற்குமான அணுகலும் செயல்பாடுகளும் கருத்தில் கொள்ளப்படும்.
  • இந்த மாற்றச் செயல்முறையின்போது பகிர்தல் அமைப்புகள், ஃபைல் மற்றும் ஃபோல்டர் உரிமை ஆகியவை மாறாது.
  • இது தானாக நிகழும், நீங்களோ உங்கள் Workspace நிர்வாகியோ எதுவும் செய்யவேண்டியதில்லை.
  • இதை வேண்டாம் எனத் தேர்வுசெய்ய முடியாது.

முக்கியம்: இந்த மாற்றச் செயல்முறைக்குப் பிறகு ஷார்ட்கட்டை உருவாக்கும்போது அசல் ஃபைலுக்கான அனுமதிகள் தானாக மாற்றப்படாது. அசல் ஃபைலுக்கான அணுகலைப் புதிய நபருக்கு வழங்க மறக்காதீர்கள். பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Google Driveவைப் பயன்படுத்தினால் ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களுக்கான அணுகலைப் பகிரும்போது மேம்பட்ட கட்டுப்பாட்டையும் பாதுகாப்பையும் பெற Google Groupsஸைப் பயன்படுத்தலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பல இடங்களில் சேமித்துள்ள ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் Drive ஏன் ஷார்ட்கட்களாக மாற்றுகிறது?

ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பல இடங்களில் வைத்திருப்பதற்குப் பதிலாக அவற்றுக்குப் பாயிண்டர்களை உருவாக்குவதன் மூலம் Driveவில் ஃபைல் & ஃபோல்டருக்கான கட்டமைப்புகளை ஷார்ட்கட்கள் எளிமையாக்குகின்றன. ஃபைல்களும் ஃபோல்டர்களும் எவ்வாறு உரிமையாக்கப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன என்பது குறித்த குழப்பங்களைக் குறைத்து ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் எளிதாக அணுக இது உதவுகிறது. இந்த மாற்றச் செயல்முறையின்போது பகிர்தல் அமைப்புகள், ஃபைல் மற்றும் ஃபோல்டர் உரிமை ஆகியவை மாறாது.

எந்த ஃபைல்களும் ஃபோல்டர்களும் மாற்றப்படும்?

தற்போது பல்வேறு இடங்களில் இருக்கும் ஃபைல்களும் ஃபோல்டர்களும் இனி ஓர் இடத்தில் மட்டுமே இருக்கும். பிற இடங்களில் அவற்றுக்குப் பதிலாக ஷார்ட்கட்கள் சேர்க்கப்படும்.

எனது ஃபைல்களும் ஃபோல்டர்களும் மாற்றப்பட்டுள்ளதா என்பதை நான் எப்படி அறிவது?

மாற்றச் செயல்முறை முடிந்ததும் Google Driveவில் அது குறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள். ஷார்ட்கட்களைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த கூடுதல் தகவல்களையும் பெறுவீர்கள்.

மாற்றப்பட்ட ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் கண்டறிவது எப்படி?

மாற்றப்பட்ட ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் மேம்பட்ட தேடல் மூலம் கண்டறியலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Driveவைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தேடல் பட்டியில் is:replaced என டைப் செய்யவும்.
  3. கீபோர்டில் Enter பட்டனை அழுத்தவும்.
இந்த மாற்றச் செயல்முறைக்குப் பிறகு அசல் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் நகர்த்த முடியுமா?

ஆம். அசல் ஃபைல்களும் ஃபோல்டர்களும் வேறொரு இடத்தில் இருக்க வேண்டுமென விரும்பினால் உங்கள் ஃபைல்களை Google Driveவில் நகர்த்திக்கொள்ளலாம். புதிய ஷார்ட்கட்டையும் உருவாக்கலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளைக் கொண்ட ஃபைல்களும் ஃபோல்டர்களும் என்னவாகும?

உங்களுக்குச் சொந்தமான 'பகிர்ந்த ஃபைல்கள் அல்லது ஃபோல்டர்கள்' பகிர்ந்த ஃபோல்டரில் இருந்தால் அவை அனைவருக்கும் காட்டப்படாமல் போகலாம். Drive அவற்றை ஷார்ட்கட்களாக மாற்றும். இவற்றுக்கான அணுகல் பிறருக்கு இருக்காது. ஆனால் அணுகல் இருக்கும் அனைவருக்கும் இவற்றின் பெயர்கள் காட்டப்படும்.

நீங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Google Driveவைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சிலர் அல்லது குழுக்களுடன் மட்டும் பகிர்ந்துள்ள ஃபைல்களுக்கும் ஃபோல்டர்களுக்கும் ஷார்ட்கட்களை உருவாக்க வேண்டுமா வேண்டாமா என்பதை உங்கள் நிர்வாகி தீர்மானிப்பார். குறிப்பிட்ட ஃபைல்கள் & ஃபோல்டர்கள் தொடர்பாகச் சிக்கல்கள் இருந்தால் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் Google கணக்கைத் தனிப்பட்ட உபயோகத்திற்காகப் பயன்படுத்தினால் (எ.கா. @gmail.com) பகிர்ந்த ஃபோல்டர்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் காட்டப்படாமல் இருக்கும் ஆவணங்களுக்கு ஷார்ட்கட்களை உருவாக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Driveவைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "ஆவணங்களை ஷார்ட்கட்களாக மாற்றுவதற்கான விருப்பங்கள்" என்பதற்கு அடுத்துள்ள ஷார்ட்கட்களாக மாற்று அல்லது ஷார்ட்கட்களாக மாற்ற வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஃபைல்/ஃபோல்டருக்கு என்ன நிகழ்ந்தது என ‘செயல்பாடு’ ஊட்டத்தில் அறியலாம்
  1. கம்ப்யூட்டரில் Google Driveவுக்குச் செல்லவும்.
  2. ஃபைல் அல்லது மூல ஃபோல்டரைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள 'விவரங்களைக் காட்டு' View details அதன் பிறகு செயல்பாடு என்பதைக் கிளிக் செய்யவும்.
Drive for desktop ஆப்ஸில் ஃபோல்டருக்குப் பதிலாக ஷார்ட்கட் எப்படி மாற்றப்படுகிறது என்று அறிக

ஃபோல்டரின் ஆஃப்லைன் பதிப்பையும் அதில் உள்ளவற்றையும் Drive for desktop ஆப்ஸ் 'நீக்கியவை' ஃபோல்டருக்கு நகர்த்தும்.

முக்கியம்: ஷார்ட்கட்களை ஃபோல்டர்களுடன் இணைத்து Windows ஃபைல்கள் எக்ஸ்ப்ளோரர் வரிசைப்படுத்தாது. ஃபைல் உலாவியில் புதிய ஷார்ட்கட்கள் வேறொரு தொடர்புடைய வரிசைப்படுத்தலில் காண்பிக்கப்படலாம்.

முக்கியம்: நீக்கியவையில் இருந்து ஒரு ஃபோல்டரை மீட்டெடுத்தால் Drive for desktop ஆப்ஸில் அது ஒத்திசைக்கப்பட்டிருக்காது.

  • Drive for desktop ஆப்ஸ் உங்கள் ஃபைல் பட்டியலில் ஃபோல்டரை ஷார்ட்கட்டாகத் தொடர்ந்து காண்பிக்கும்.
  • Drive for Desktop ஆப்ஸில் ஃபோல்டரின் அசல் தடம் மாறும். அது ”ஐடி-மூலம் இலக்கிடப்பட்ட-ஷார்ட்கட்கள்” ஃபோல்டருக்கு நகர்த்தப்படும். Windowsஸிற்கு .lnk, Macக்கிற்கு Alias, Macக்கிற்கு Symlink போன்ற முந்தைய முதல்நிலை டைரக்டரியைப் புதிய இருப்பிடத்திற்கான அக ஃபைல் சிஸ்டம் ஷார்ட்கட் மாற்றும்.
    • Drive உடன் வெளிப்புற ஆப்ஸைப் பயன்படுத்தும்போது அவை உங்கள் ஃபோல்டரை அணுகுவதற்கான சரியான தடத்தைப் பின்பற்றுகின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஃபோல்டர் தானாக ஆஃப்லைனில் கிடைக்காது.
    • ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்கிறீர்கள், ஃபோல்டரும் அதில் உள்ளவையும் ஆஃப்லைனில் கிடைக்க வேண்டுமென விரும்பினால் உங்கள் விருப்பத்தேர்வுகளை மாற்ற ஃபோல்டரை வலது கிளிக் செய்யவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4226127455812692285
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false