Google Driveவில் கோப்புகளை நீக்குதல் அல்லது மீட்டெடுத்தல்

உங்கள் Google Drive கோப்புகளை நீக்க, அவற்றை ’நீக்கியவை’க்கு நகர்த்தவும். ’நீக்கியவை’யில் உள்ள கோப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும். ’நீக்கியவை’யிலிருந்து 30 நாட்களுக்குள் அந்தக் கோப்புகளை மீட்டெடுக்கலாம். ’நீக்கியவை’யைக் காலியாக்க, அவற்றை நிரந்தரமாகவும் நீக்கலாம். ஒரே நேரத்தில் பல கோப்புகள்/கோப்புறைகளை நீக்கினாலோ மீட்டெடுத்தாலோ நிரந்தரமாக நீக்கினாலோ மாற்றங்களைப் பார்ப்பதற்குச் சிறிது நேரம் ஆகலாம். 

கோப்பை நீக்கப்பட்டவைக்கு நகர்த்துதல்

Driveவிலிருந்து கோப்பினை அகற்ற, அதை ’நீக்கியவை’க்கு நகர்த்தலாம். கோப்பு 30 நாட்களுக்கு ’நீக்கியவை’யில் இருக்கும், பிறகு தானாக நீக்கப்படும்.

நீங்கள் கோப்பின் உரிமையாளர் எனில், அதை நிரந்தரமாக நீக்கும் வரை பிறர் பார்க்க முடியும். கோப்பின் உரிமையாளர் நீங்கள் இல்லையெனில் நீக்கியவையை நீங்கள் காலியாக்கினாலும் மற்றவர்களால் கோப்பைப் பார்க்க முடியும்.

  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீக்க விரும்பும் கோப்பிற்கு அடுத்துள்ள மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  3. கீழே அகற்று என்பதைத் தட்டவும்.

நீக்கியவையைக் காலியாக்குதல்

தனிப்பட்ட கோப்பை மட்டும் நிரந்தரமாக நீக்கலாம் அல்லது நீக்கியவையை முழுவதுமாகக் காலியாக்கலாம். கோப்பை நீக்கியபிறகு அதை யாருடன் பகிர்ந்தீர்களோ அவர் அதற்கான அணுகலை இழப்பார். இருப்பினும் கோப்பைப் பிறர் பார்க்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் அதற்கான உரிமையை பிறருக்கு வழங்க முடியும்.

  1. மேல் இடதுபக்கத்தில் மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  2. நீக்கியவை என்பதைத் தட்டவும்.
  3. நீக்க விரும்பும் கோப்பிற்கு அடுத்து, மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  4. நிரந்தரமாக நீக்கு என்பதைத் தட்டவும்.

நீக்கியவையை ஒட்டுமொத்தமாகக் காலியாக்குதல்

  1. மேல் இடதுபக்கத்தில் மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  2. நீக்கியவை என்பதைத் தட்டவும்.
  3. பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் கோப்புகள் எதுவும் அதில் இல்லாமலிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  4. மேல் வலதுபக்கத்தில் மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  5. நீக்கியவையைக் காலியாக்கு என்பதைத் தட்டவும்.

நீக்கியவையிலிருந்து கோப்பை மீட்டெடுத்தல்

கோப்பை நீக்கியவைக்கு நகர்த்தியிருந்து அதை மீண்டும் வைத்திருக்க விரும்பினால் Driveவில் மீண்டும் அதைச் சேர்க்க முடியும்.

  1. மேல் இடதுபக்கத்தில் மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  2. நீக்கியவை என்பதைத் தட்டவும்.
  3. சேமிக்க விரும்பும் கோப்பிற்கு அடுத்துள்ள மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  4. மீட்டெடு என்பதைத் தட்டவும்.

கவனத்திற்கு: நீங்கள் கோப்பின் உரிமையாளர் இல்லையெனில் உரிமையாளரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்குமாறு கூறவும்.

நீக்கிய கோப்பை மீட்டெடுக்க முடியவில்லை என்றால்

கோப்பை நீக்கியிருந்து அதை மீண்டும் பெற வேண்டியிருந்தால் Drive வல்லுநரைத் தொடர்பு கொள்ளவும். கோப்பைக் கண்டறிவதற்கு அழைப்பின் மூலமாகவோ அரட்டையின் மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

நீக்கியதை மீண்டும் பெற விரும்புகிறீர்கள்

Google Driveவையோ Google Drive டெஸ்க்டாப் ஆப்ஸையோ பயன்படுத்தி சமீபத்தில் ஏதாவது கோப்பினை நீங்கள் நீக்கியிருந்தால் அதை நீங்களே மீட்டெடுக்கலாம்.

நீக்கியவற்றிலிருந்து மீட்டெடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com/drive/trash தளத்திற்குச் செல்லவும்.
  2. மீட்டெடுக்க விரும்பும் கோப்பின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. மீட்டெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

கோப்பினைக் கண்டறிய முடியவில்லை என்பதுடன் கோப்பினை நீக்கவில்லை எனவும் கருதுகிறீர்கள்

இந்தப் படிகளை முயல்க

செயல்பாட்டு பேனலில் பார்க்கவும்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் My Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் தகவல் தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கீழே ஸ்க்ரோல் செய்து உங்கள் கோப்பைத் தேடவும்.

மேம்பட்ட தேடலை முயல்க

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே தேடல் பட்டிக்குச் சென்று கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புகுறி கிளிக் செய்யவும்.
  3. உங்கள் கோப்பைக் கண்டறிய "type:spreadsheets" போன்ற மேம்பட்ட தேடல் விருப்பங்களைப் பயன்படுத்தவும்.

மேலே கூறப்பட்ட படிகள் உதவவில்லையெனில் இவற்றைச் செய்க:

நீங்கள் கோப்பை உருவாக்கியிருந்தால்

Driveவில் நீங்கள் உருவாக்கிய கோப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் அது அடையாளமற்றதாக இருக்கக்கூடும். ஓர் அடையாளமற்ற கோப்பு அதன் பெற்றோர் கோப்புறைகள் அனைத்தையும் இழந்திருக்கக்கூடும். கோப்பு இருந்தாலும் கூட அதைக் கண்டறிவது கடினமாக இருக்கும்.

கோப்புகள் அவற்றின் கோப்புறையை எப்படி இழக்கின்றன?

  • கோப்பினை வேறொருவரின் கோப்புறையில் உருவாக்குகிறீர்கள். அவர் அந்தக் கோப்புறையை நீக்குகிறார். கோப்பு நீக்கப்படவில்லை. அது தானாக 'எனது இயக்ககத்திற்கு' நகர்த்தப்பட்டது.
    முக்கியம்: உங்களுக்குச் சொந்தமான கோப்புகளை மட்டுமே நீங்கள் நீக்க முடியும். 
  • வேறொருவருடன் கோப்புறையைப் பகிர்கிறீர்கள், அவர் அந்தக் கோப்புறையில் இருந்து உங்கள் கோப்பினை அகற்றுகிறார். கோப்பு நீக்கப்படவில்லை, அது தானாக 'எனது இயக்ககத்திற்கு' நகர்த்தப்பட்டது.

அடையாளமற்ற கோப்புகளைக் கண்டறிதல்

  1. Driveவின் தேடல் புலத்தில் இதை உள்ளிடவும்: is:unorganized owner:me
  2. கோப்பைக் கண்டறிந்தவுடன் My Driveவில் உள்ள கோப்புறைக்கு அதை நகர்த்தவும். இதன் மூலம் அடுத்த முறை அதை எளிதாகக் கண்டறியலாம்.

இப்போது தேடு

வேறொருவர் கோப்பை உருவாக்கியிருந்தால்

வேறொருவர் கோப்பை உருவாக்கியிருந்தால் அதை அவர்கள் நீக்கலாம், மறுபெயரிடலாம், மீட்டெடுக்கலாம். கோப்பை உருவாக்கியவரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்கவோ உங்களுடன் மீண்டும் பகிரவோ கூறலாம்.

வேறொருவர் உருவாக்கிய கோப்புறையில் இருந்தால்

வேறொருவர் கோப்புறையை நீக்கிவிட்டால் உங்கள் Driveவில் அந்தக் கோப்புறையைப் பார்க்க முடியாது.

நீக்கப்பட்ட கோப்புறைகளில் நீங்கள் உருவாக்கிய கோப்புகளைக் கண்டறிதல்

நீக்கப்பட்ட கோப்புறைகளில் உள்ள அனைத்துக் கோப்புகளையும் கண்டறிதல்

எதிர்காலத்தில் அந்தக் கோப்பை எளிதாகக் கண்டறியும் வகையில் "எனது இயக்ககம்" என்பதில் உள்ள கோப்புறைக்கு அதை நகர்த்தவும்.

கோப்புகளைக் கண்டறியும் முறை பற்றிய கூடுதல் தகவல்கள்

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்திப் பார்த்தீர்களா?

Driveவில் உங்கள் தேடலை வடிகட்ட இந்த விருப்பங்களில் ஒன்றை தேடல் சொற்றொடரில் பயன்படுத்தவும்:

தேடல் எடுத்துக்காட்டு
சரியான சொற்றொடர்

"சரியான சொற்றொடரை மேற்கோள் குறிகளுக்குள் வழங்கவும்"

ஒன்று அல்லது மற்றொன்று

அல்வா அல்லது லட்டு

ஒரு வார்த்தையை விலக்குதல்

ஏரிகள் அல்ல நீர்நிலை:

நீர்நிலை -ஏரிகள்

கோப்பு உரிமையாளர்

அப்பா உரிமையாளராக உள்ள கோப்புகள்:

உரிமையாளர்:dad@gmail.com

பிறர் பகிர்ந்துள்ள கோப்புகள்

அம்மா உங்களுடன் பகிரந்த கோப்புகள்:

from:mom@gmail.com

நீங்கள் பகிர்ந்துள்ள கோப்புகள்

அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்த கோப்புகள்:

to:mom@gmail.com

நட்சத்திரமிட்டவை

is:starred

நீக்கப்பட்டவை

is:trashed

கோப்பு வகை

விரிதாள் கோப்பு வகை:

type:spreadsheet

கால வரையறை

இதற்கு முன்னரோ பின்னரோ:18 ஜனவரி, 2015. 

before:2015-01-18

after:2015-01-18

தலைப்பு

title:"தலைப்பை இங்கே வழங்க வேண்டும்"

ஆப்ஸ்

Google Driveவில் திறக்கப்பட்ட கோப்புகள்:

app:"Drive"
 

எந்தக் கோப்புகளை மீட்டெடுக்க முடியும்?

நுகர்வோர் கணக்கின் (உங்கள் பணி, பள்ளி அல்லது பிற குழுவின் மூலமான கணக்காக இருக்கக்கூடாது) மூலம் Google Driveவைப் பயன்படுத்தி பின்வருவதில் ஒன்று உண்மை என இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க உதவுவோம்:

  • கோப்பை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்.
  • Google Driveவிற்குக் கோப்பை நீங்கள் பதிவேற்றியுள்ளீர்கள்.
  • வேறொருவரிடமிருந்து கோப்பிற்கான உரிமையை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

பணியிடம், பள்ளி அல்லது வேறு குழுவின் மூலமாக ஒரு கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உதவிக்கு உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் Google கணக்கு நீக்கப்பட்டிருந்தால் கோப்புகளை மீட்டெடுக்க முடியாமல் போகக்கூடும்.

உங்கள் அனுமதியின்றி உங்கள் Google Driveவை எவரேனும் அணுகியிருக்கலாம் என நீங்கள் கருதினால் உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுக.

உங்கள் கோப்பை இன்னமும் கண்டறிய முடியவில்லையெனில்

உங்கள் கோப்பை மீட்டெடுக்க என்னவெல்லாம் தேவை என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

Gmailலிலிருந்து அஞ்சல்களை மீட்டெடுக்க வேண்டுமெனில்

Gmailலிலிருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

எங்களைத் தொடர்புகொள்க

எங்களைத் தொடர்புகொள்ள, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

Drive ஆதரவு அனைத்து மொழிகளிலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் பேசுவீர்கள் எனில் மொழியை மாற்றி Driveவிற்கான வல்லுநரைத் தொடர்புகொள்ள முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் கீழே உங்கள் மொழியின் மீது கிளிக் செய்யவும்.
  3. ஆங்கிலம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. மேல் இடதுபுறத்தில், மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் சிக்கலையும் எங்களை எப்படித் தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: இதை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்தமான மொழிக்கு மீண்டும் மாற்றிக்கொள்ளலாம்.

 

 
இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?