Google Driveவில் ஃபைல்களை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்

உங்கள் Google Drive கோப்புகளை நீக்க, அவற்றை ’நீக்கியவை’க்கு நகர்த்தவும். ’நீக்கியவை’யில் உள்ள கோப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும். ’நீக்கியவை’யிலிருந்து 30 நாட்களுக்குள் அந்தக் கோப்புகளை மீட்டெடுக்கலாம். ’நீக்கியவை’யைக் காலியாக்க, அவற்றை நிரந்தரமாகவும் நீக்கலாம். ஒரே நேரத்தில் பல கோப்புகள்/கோப்புறைகளை நீக்கினாலோ மீட்டெடுத்தாலோ நிரந்தரமாக நீக்கினாலோ மாற்றங்களைப் பார்ப்பதற்குச் சிறிது நேரம் ஆகலாம். 

கோப்பை நீக்கப்பட்டவைக்கு நகர்த்துதல்

Driveவிலிருந்து கோப்பினை அகற்ற, அதை ’நீக்கியவை’க்கு நகர்த்தலாம். கோப்பு 30 நாட்களுக்கு ’நீக்கியவை’யில் இருக்கும், பிறகு தானாக நீக்கப்படும்.

நீங்கள் கோப்பின் உரிமையாளர் எனில், அதை நிரந்தரமாக நீக்கும் வரை பிறர் பார்க்க முடியும். கோப்பின் உரிமையாளர் நீங்கள் இல்லையெனில் நீக்கியவையை நீங்கள் காலியாக்கினாலும் மற்றவர்களால் கோப்பைப் பார்க்க முடியும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழ் வலது பக்கத்தில் கோப்புகள் கோப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. நீக்க விரும்பும் கோப்பிற்கு அடுத்துள்ள மேலும் மேலும் அதன் பிறகு அகற்று என்பதைத் தட்டவும்.

நீக்கியவையைக் காலியாக்குதல்

தனிப்பட்ட கோப்பை மட்டும் நிரந்தரமாக நீக்கலாம் அல்லது நீக்கியவையை முழுவதுமாகக் காலியாக்கலாம். கோப்பை நீக்கியபிறகு அதை யாருடன் பகிர்ந்தீர்களோ அவர் அதற்கான அணுகலை இழப்பார். இருப்பினும் கோப்பைப் பிறர் பார்க்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் அதற்கான உரிமையை பிறருக்கு வழங்க முடியும்.

  1. மேல் இடதுபக்கத்தில் மெனு மெனு அதன் பிறகு நீக்கியவை என்பதைத் தட்டவும்.
  2. நீக்க விரும்பும் கோப்பிற்கு அடுத்துள்ள மேலும் மேலும் அதன் பிறகு நிரந்தரமாக நீக்கு என்பதைத் தட்டவும்.

நீக்கியவையை ஒட்டுமொத்தமாகக் காலியாக்குதல்

நீக்கியவையை ஒட்டுமொத்தமாகக் காலியாக்க உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.

நீக்கியவையிலிருந்து கோப்பை மீட்டெடுத்தல்

கோப்பை நீக்கியவைக்கு நகர்த்தியிருந்து அதை மீண்டும் வைத்திருக்க விரும்பினால் Driveவில் மீண்டும் அதைச் சேர்க்க முடியும்.

  1. மேல் இடதுபக்கத்தில் மெனு மெனு அதன் பிறகு நீக்கியவை என்பதைத் தட்டவும்.
  2. சேமிக்க விரும்பும் கோப்பிற்கு அடுத்துள்ள மேலும் மேலும் அதன் பிறகு மீட்டெடு என்பதைத் தட்டவும்.

கவனத்திற்கு: நீங்கள் கோப்பின் உரிமையாளர் இல்லையெனில் உரிமையாளரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்குமாறு கூறவும்.

நீக்கிய கோப்பை மீட்டெடுக்க முடியவில்லை என்றால்

கோப்பை நீக்கியிருந்து அதை மீண்டும் பெற வேண்டியிருந்தால் Drive வல்லுநரைத் தொடர்பு கொள்ளவும். கோப்பைக் கண்டறிவதற்கு அழைப்பின் மூலமாகவோ அரட்டையின் மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

நீக்கியதை மீட்டெடுக்க விரும்புகிறீர்கள்

Google Drive அல்லது Google Drive டெஸ்க்டாப் ஆப்ஸைப் பயன்படுத்தி சமீபத்தில் எந்த ஃபைலையாவது நீக்கியிருந்தால் நீங்களே அதை மீட்டெடுக்கலாம்.

நீக்கியவையில் இருந்து மீட்டெடுத்தல்

  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் ஃபைலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் தட்டவும்
  3. மீட்டெடு என்பதைத் தட்டவும்.
ஃபைலைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அத்துடன் அதை நீக்கவில்லை என்றும் நினைக்கிறீர்கள்

இந்தப் படிகளை முயல்க

செயல்பாட்டுப் பேனலில் பார்க்கவும்

  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்
  2. கீழ் வலதுபுறத்தில் உள்ள ஃபைல்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேல் இடதுபுறத்தில் உள்ள எனது Drive என்பதைத் தட்டவும்.
  4. கீழே சென்று உங்கள் ஃபைலைத் தேடவும்.

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்தவும்

  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. உங்கள் ஃபைலைக் கண்டறிய "type:spreadsheets" போன்ற மேம்பட்ட தேடல் விருப்பங்களைப் பயன்படுத்தவும்.

இவை உதவவில்லை எனில், இவற்றைக் கருத்தில் கொள்ளவும்:

ஃபைலை நீங்கள் உருவாக்கியிருந்தால்

Driveவில் நீங்கள் உருவாக்கிய கோப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் அது அடையாளமற்றதாக இருக்கக்கூடும். ஓர் அடையாளமற்ற ஃபைல் அதன் முதல்நிலை ஃபோல்டர்கள் அனைத்தையும் இழந்திருக்கக்கூடும். ஃபைல் இருக்கிறது. ஆனால் அதைக் கண்டறிவது கடினமாக உள்ளது.

ஃபைல்கள் அவற்றின் ஃபோல்டரை எப்படி இழக்கின்றன?

  • வேறொருவரின் ஃபோல்டரில் ஃபைலை உருவாக்குகிறீர்கள் அவர், அவர் அந்த ஃபோல்டரை நீக்கிவிடுகிறார். ஃபைல் நீக்கப்படவில்லை. அந்த ஃபைல் தானாக 'எனது Driveவிற்கு' நகர்த்தப்படும்.
    கவனத்திற்கு: உங்கள் ஃபைல்களை நீங்கள் மட்டுமே நீக்க முடியும். 
  • வேறொருவருடன் ஃபோல்டரைப் பகிர்கிறீர்கள், அவர் அதில் இருந்து உங்கள் ஃபைலை அகற்றுகிறார். ஃபைல் நீக்கப்படவில்லை, அது தானாக 'எனது Driveவிற்கு' நகர்த்தப்பட்டது.

அடையாளமற்ற ஃபைல்களைக் கண்டறிதல்

  1. Driveவின் தேடல் புலத்தில் இதை உள்ளிடவும்: is:unorganized owner:me
  2. ஃபைலைக் கண்டறிந்ததும் ‘எனது Drive’ பிரிவில் உள்ள ஒரு ஃபோல்டருக்கு அதை நகர்த்தவும். இதனால் அடுத்த முறை அதை எளிதாகக் கண்டறியலாம்.

இப்போது தேடு

வேறொருவர் ஃபைலை உருவாக்கியிருந்தால்

வேறொருவர் ஃபைலை உருவாக்கியிருந்தால் அதை அவர்கள் நீக்கலாம் மறுபெயரிடலாம் மீட்டெடுக்கலாம். ஃபைலை உருவாக்கியவரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்கவோ உங்களுடன் மீண்டும் பகிரவோ கூறலாம்.

அது வேறொருவர் உருவாக்கிய ஃபோல்டரில் இருந்தால்

வேறொருவர் அந்த ஃபோல்டரை நீக்கிவிட்டால் உங்கள் Driveவில் அந்த ஃபோல்டரைப் பார்க்க முடியாது.

நீக்கப்பட்ட ஃபோல்டர்களில் உள்ள நீங்கள் உருவாக்கிய ஃபைல்களைக் கண்டறிதல்

நீக்கப்பட்ட ஃபோல்டர்களில் உள்ள அனைத்து ஃபைல்களையும் கண்டறிதல்

எதிர்காலத்தில் அந்த ஃபைலை எளிதாகக் கண்டறியும் வகையில் "எனது Drive" என்பதில் உள்ள ஃபோல்டருக்கு அதை நகர்த்தவும்.

ஃபைல்களைக் கண்டறியும் முறை பற்றிய கூடுதல் தகவல்கள்

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்திப் பார்த்தீர்களா?

Driveவில் துல்லியமாகத் தேட, கம்ப்யூட்டரில் Driveவைத் திறந்து இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேடல் சொற்றொடரில் பயன்படுத்தவும்:

தேடல் எடுத்துக்காட்டு
சரியான சொற்றொடர்

"சரியான சொற்றொடரை மேற்கோள் குறிகளுக்குள் வழங்கவும்"

ஒன்று அல்லது மற்றொன்று

அல்வா அல்லது லட்டு

ஒரு வார்த்தையை விலக்குதல்

ஏரிகள் அல்ல நீர்நிலை:

நீர்நிலை -ஏரிகள்

ஃபைல் உரிமையாளர்

அப்பா உரிமையாளராக உள்ள ஃபைல்கள்:

உரிமையாளர்:dad@gmail.com

அவர் பகிர்ந்த ஃபைல்கள்

அம்மா உங்களுடன் பகிர்ந்த ஃபைல்கள்:

from:mom@gmail.com

நீங்கள் பகிர்ந்த ஃபைல்கள்

அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்த ஃபைல்கள்:

to:mom@gmail.com

நட்சத்திரமிட்டவை

is:starred

நீக்கப்பட்டவை

is:trashed

ஃபைல் வகை

விரிதாள் ஃபைல் வகை:

type:spreadsheet

கால வரையறை

இதற்கு முன்னரோ பின்னரோ:18 ஜனவரி, 2015. 

before:2015-01-18

after:2015-01-18

தலைப்பு

title:"தலைப்பை இங்கே வழங்க வேண்டும்"

ஆப்ஸ்

Google Driveவில் திறக்கப்பட்ட ஃபைல்கள்:

ஆப்ஸ்:"Drive"
 

எந்தெந்த ஃபைல்களை மீட்டெடுக்க முடியும்?

நுகர்வோர் கணக்கின் (உங்கள் பணி, பள்ளி அல்லது பிற குழுவின் கணக்காக இருக்கக்கூடாது) மூலம் Google Driveவைப் பயன்படுத்தி பின்வருவதில் ஒன்று உண்மை என இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு சமீபத்தில் நீக்கப்பட்ட ஃபைல்களை மீட்டெடுக்க உதவுவோம்:

  • நீங்கள் ஃபைலை உருவாக்கியுள்ளீர்கள்.
  • Google Driveவிற்கு ஃபைலைப் பதிவேற்றியுள்ளீர்கள்.
  • வேறொருவரிடம் இருந்து ஃபைலுக்கான உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

உங்கள் பணி, பள்ளி அல்லது வேறு குழுவின் மூலமாக ஒரு கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உதவிக்கு உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் Google கணக்கு நீக்கப்பட்டிருந்தால் கோப்புகளை மீட்டெடுக்க முடியாமல் போகக்கூடும்.

உங்கள் அனுமதியின்றி உங்கள் Google Driveவை எவரேனும் அணுகியிருக்கலாம் என நீங்கள் கருதினால் உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையானவற்றைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

தேடல் சிப்களைப் பயன்படுத்துதல்

Driveவில் ஃபைல்களின் பட்டியலைச் சுருக்குவதற்கு நீங்கள் தேடல் சிப்களைப் பயன்படுத்தலாம்:

  1. Android சாதனத்தில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள Driveவில் தேடுக என்பதைத் தட்டவும்.
  3. தேடல் சிப்பைத் தேர்ந்தெடுக்க தட்டவும், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
    • வகை
    • ஃபோல்டர்கள்
    • மாற்றிய தேதி: இன்று, நேற்று, கடந்த 7 நாட்கள்
  4. சிப் மீது தட்டிய பிறகு தேடல் பட்டியில் டைப் செய்தும் உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியமாக்கலாம்.
  5. தேடு என்பதைத் தட்டவும்.

இந்தச் சிப்கள் தேடல் பட்டிக்குக் கீழே காட்டப்படும். இவை ஃபைல்கள், ஃபோல்டர்கள், துணை ஃபோல்டர்கள் ஆகிய அனைத்திலும் தேடும். தேடல் சிப்பை அகற்ற, சிப்பிற்கு வலதுபுறத்தில் உள்ள ஐகானைத் தட்டவும்.

தேடலை நீங்கள் டைப் செய்யும்போதே டைப் செய்வதைக் குறைத்து தொடர்புடைய சிப்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகள் உங்களுக்குக் காட்டப்படும்.

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுக்க வேண்டுமெனில்

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

ஃபைலை மீட்டெடுப்பதற்குக் கோர, கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

எங்களைத் தொடர்புகொள்ள, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

Drive ஆதரவு அனைத்து மொழிகளிலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் பேசுவீர்கள் எனில் மொழியை மாற்றி Driveவிற்கான வல்லுநரைத் தொடர்புகொள்ள முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் கீழே உங்கள் மொழியின் மீது கிளிக் செய்யவும்.
  3. ஆங்கிலம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் சிக்கலையும், எங்களை எவ்வாறு தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: இதை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்தமான மொழிக்கு மீண்டும் மாற்றிக்கொள்ளலாம்.

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10010982697742280381
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false