Google Chatடின் ஏற்கக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை

முக்கியம்: Google Hangouts இப்போது Google Chat என மாறிவிட்டது. மொபைல் சாதனங்களிலோ இணையத்திலோ Hangoutsஸை இனி அணுக முடியாது. Google Hangoutsஸில் இருந்து Google Chatடுக்கு மாறுவது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

சிறந்த அனுபவத்தை எங்கள் பயனர்களுக்குத் தொடர்ந்து வழங்க, Google Chatடை ("Chat") பயன்படுத்தும்போது இந்தக் கொள்கைகளைப் பின்பற்றவும். இந்தக் கொள்கைகள் மாறக்கூடும். மேலும் தெரிந்துகொள்ள Googleளின் சேவை விதிமுறைகளைப் பார்க்கவும்.

ஸ்பேம் மற்றும் தொழில்ரீதியான பயன்பாடு

  • ஸ்பேம் என்பது அனுமதி பெறாத மற்றும் தேவையற்ற மெசேஜ்கள் ஆகும். இவற்றில் விளம்பர/தொழில்ரீதியான உள்ளடக்கம், ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பப்படும் பரிந்துரைகள் போன்றவை அடங்கும்.
  • ஸ்பேம், அதிக அளவிலான தொழில்ரீதியான மெசேஜ்கள், தானியங்கு மெசேஜ்கள்/அழைப்புகள் போன்றவற்றை அனுப்பவோ அனுப்புவதற்கு உதவவோ கூடாது.
  • அனுமதி பெறாத மார்க்கெட்டிங் அழைப்புகள் செய்வதைத் தடைசெய்யும் சட்டங்களை (எ.கா. "அழைக்க வேண்டாம்" சட்டங்கள்) மீறும் அழைப்புகளைச் செய்யக்கூடாது.

Chatடில் பயனர்களைத் தடுப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

மோசடி, ஃபிஷிங் மற்றும் ஏமாற்றக்கூடிய பிற செயல்பாடுகள்

இவை உள்ளிட்ட ஃபிஷிங் காரணங்களுக்காக Chatடைப் பயன்படுத்தக்கூடாது:

  • கடவுச்சொற்கள், நிதி விவரங்கள், தேசிய அடையாள எண்கள் ஆகியவையும் இன்ன பிறவும் உட்பட பாதுகாக்கப்பட வேண்டிய தனிப்பட்ட தரவைக் கோருதல் அல்லது சேகரித்தல்
  • தவறான பாசாங்குகளைச் செய்து பிற பயனர்களிடமிருந்து தந்திரமாகவோ அவர்களைத் திசைதிருப்பியோ ஏமாற்றியோ தகவல்களைப் பெற Chatடைப் பயன்படுத்துதல்
  • வேறொருவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல் அல்லது உங்களையோ Chat மெசேஜ் அல்லது அழைப்பைச் செய்யும் தரப்பையோ தவறாகப் பிரதிநிதித்துவம் செய்தல்

மால்வேர்

இவற்றைப் பரப்புவதை நாங்கள் அனுமதிப்பதில்லை:

  • மால்வேர்
  • வைரஸ்கள்
  • ட்ரோஜன் ஹார்ஸ்கள்
  • சிதைவடைந்த ஃபைல்கள்
  • அழிவு ஏற்படுத்தும் குறியீடு
  • Google அல்லது பிறரின் நெட்வொர்க்குகள், சேவையகங்கள், பிற உள்கட்டமைப்பு போன்றவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடும் அல்லது அவற்றுக்குத் தீங்கு விளைவிக்கும் அனைத்தும்

சிறார் பாதுகாப்பு

பின்வருபவை உட்பட சிறார்களைத் தவறாகப் பயன்படுத்தும் எவ்விதத்திலும் Chatடைப் பயன்படுத்தக்கூடாது:

  • சிறார் பாலியல் கொடுமை சார்ந்தவை அல்லது சிறாரைப் பாலியல்ரீதியாகக் காட்டும் உள்ளடக்கம்
  • சிறாரைத் தவறான எண்ணத்துடன் அணுகுதல், அதாவது சிறார் பாலியல் வன்கொடுமை, கடத்தல், சிறார்களைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக சிறார்களைத் தயார்ப்படுத்தும்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் குறைப்பதற்காக அவர்களுடன் இனிமையாகப் பழகுதல்

இந்த உள்ளடக்கத்திற்கு எதிராக, முற்றிலும் அனுமதிக்காத கொள்கையை Google கடைப்பிடிக்கிறது. அதுபோன்ற உள்ளடக்கம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்தால் காணாமல் போன மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான தேசிய அமைப்பிடம் (National Center for Missing and Exploited Children) சட்டப்படி புகாரளிப்போம். அத்துடன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் Google கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கக்கூடும்.

சிறுவர் ஆபத்தில் உள்ளார், தவறான செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறார், தவறாக வழிநடத்தப்படுகிறார் அல்லது கடத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என நம்பினால் உடனடியாக உள்ளூர் சட்ட அமலாக்கத் துறையைத் தொடர்புகொள்ளுங்கள்.

நீங்கள் ஏற்கெனவே சட்ட அமலாக்கத் துறையினரிடம் புகாரளித்த பின்னரும் உதவி தேவைப்பட்டாலோ Chatடில் சிறுவருக்கு ஆபத்து விளைவிக்கப்படுவதாக/விளைவிக்கப்பட்டதாகக் கவலைப்பட்டாலோ Googleளிடம் அதைப் பற்றிப் புகாரளிக்கலாம்.

Google தயாரிப்புகளில் சிறுவருக்கு விளைவிக்கப்படும் ஆபத்து குறித்துப் புகாரளித்தல்.

Chatடில் உங்களை ஒருவர் தொடர்புகொள்ள வேண்டாம் எனில் அவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தடுக்கலாம்.

உபத்திரவம்

  • பிறருக்கு உபத்திரவம் அளிக்கவோ மிரட்டவோ அச்சுறுத்தவோ Chatடைப் பயன்படுத்தக்கூடாது.
  • உபத்திரவம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட பிறரைத் தூண்டக்கூடாது.

தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள்

கிரெடிட் கார்டு எண்கள், தேசிய அடையாள எண்கள், கணக்கின் கடவுச்சொற்கள் போன்ற பிறரின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி வெளியிடக்கூடாது.

சட்டவிரோத நடவடிக்கைகள்

சட்டவிரோத நடவடிக்கைகளை விளம்பரப்படுத்தவோ ஒருங்கிணைக்கவோ அவற்றில் ஈடுபடவோ Chatடைப் பயன்படுத்தக்கூடாது.

கொள்கை அமலாக்கம்

இந்தக் கொள்கைகளை மீறும் கணக்குகளை Google முடக்கலாம். உங்கள் கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டுள்ளது எனக் கருதினால் எங்களைத் தொடர்புகொண்டு உங்கள் கணக்கை எப்படி மீட்டெடுக்கலாம் என்பது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5404549638046104538
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false