Google Chatடில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஆப்ஸ் என்பவை சிறப்புக் கணக்குகள் ஆகும். இவற்றுக்கு மெசேஜ் செய்வதன் மூலம் Chatடின் பின்வரும் சேவைகளைப் பெறலாம்:
  • தகவல்களைத் தேடுதல்.
  • மீட்டிங்கைத் திட்டமிடுதல்.
  • பணிகளைச் செய்தல்.

Google Chatடில் ஆப்ஸ் எப்படி வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

Chatடில் ஓர் ஆப்ஸைத் தொடர்புகொள்ளும்போது ஆப்ஸால் இவற்றை அறிந்துகொள்ள முடியும்:

உரையாடலில் உள்ள பிறரின் அடிப்படைத் தகவல்களை ஆப்ஸால் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் நேரடியாக ஆப்ஸைத் தொடர்புகொள்ளும் வரை அவர்களது மின்னஞ்சல் முகவரிகளையோ தோற்றப் படங்களையோ பார்க்க முடியாது.

Meet, Google Drive போன்ற சில ஆப்ஸை Google உருவாக்கிப் பராமரித்து வருகிறது.

மூன்றாம் தரப்பு மென்பொருள் விற்பனையாளர்கள் பிற ஆப்ஸை உருவாக்கிப் பராமரித்து வருகின்றனர். நீங்கள் மூன்றாம் தரப்பு ஆப்ஸைப் பயன்படுத்தினால் வழங்குநரின் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் படித்துப் பார்த்து, மூன்றாம் தரப்பினர் உங்கள் தரவைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியம்: பணி அல்லது பள்ளிக் கணக்குகளில், நிர்வாகி உங்கள் சார்பாக ஆப்ஸை நிறுவலாம். அதன் பிறகு, அந்த ஆப்ஸ் உங்களுக்கு நேரடி மெசேஜ்களை அனுப்பலாம். அந்த ஆப்ஸை உங்களால் நிறுவல் நீக்க முடியாது. ஆனால் அந்த ஆப்ஸ் மூலமான உரையாடல்களுக்கான அறிவிப்புகளை முடக்கிக்கொள்ளலாம்.

உதவிக்குறிப்பு:

ஆப்ஸைக் கண்டறிதலும் சேர்த்தலும்

உங்கள் நிறுவன அமைப்புகளில் ஆப்ஸ் இயக்கப்பட்டிருந்தால் நீங்கள்:

  • அதற்கு நேரடியாக மெசேஜ் அனுப்பலாம்.
  • ஸ்பேஸ்கள்/உரையாடல்களில் அதைச் சேர்க்கலாம்.
  1. Chat  அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழே உள்ள Chat என்பதைத் தட்டவும்.
  3. புதிய அரட்டை  அதன் பிறகு ஆப்ஸைக் கண்டறிக என்பதைத் தட்டவும்.
  4. ஆப்ஸ் பெயரை டைப் செய்யவும் அல்லது பரிந்துரையைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் மெசேஜை டைப் செய்யவும். 
  6. அனுப்பு என்பதைத் தட்டவும்.
  7. விருப்பத்திற்குட்பட்டது: ஆப்ஸை அகற்ற, மேலே உள்ள ஆப்ஸின் பெயரைத் தட்டி அதன் பிறகு நிறுவல் நீக்கு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் சார்பில் பணிகளைச் செய்ய உங்கள் Google கணக்கை அணுக ஆப்ஸிற்கு அனுமதி தேவை. இந்த அனுமதி ஆப்ஸுக்குத் தேவைப்படும்போது, அணுகலை வழங்கும் வகையில் ஓர் அறிவிப்பு காட்டப்படும். அனுமதி வழங்க, அனுமதி என்பதைத் தட்டவும்.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் கொண்டுள்ள உங்கள் கணக்கிற்கான அணுகலை அகற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்பேஸ்கள் அல்லது உரையாடல்களில் ஆப்ஸைச் சேர்த்தல்

முக்கியம்: நீங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தினால் உங்கள் சார்பாக ஆப்ஸை நிர்வாகி நிறுவலாம். இது நிகழும்போது ஆப்ஸ் உங்களுக்கு நேரடி மெசேஜ்களை அனுப்பலாம். உங்களால் ஆப்ஸை நிறுவல் நீக்கம் செய்ய முடியாது என்றாலும் ஆப்ஸ் மூலம் நடைபெறும் உரையாடல்களுக்கான அறிவிப்புகளை முடக்கலாம்.
  1. Chat  அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. உரையாடல் அல்லது ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள, ஸ்பேஸ் பெயர் அல்லது உரையாடலின் உறுப்பினர்கள் அதன் பிறகு ஆப்ஸை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  4. ஆப்ஸைச் சேர் என்பதைத் தட்டவும்.
  5. ஆப்ஸ் பெயரை டைப் செய்யவும் அல்லது பரிந்துரையைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. முடிந்தது என்பதைத் தட்டவும்.

உரையாடல் அல்லது ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்றுதல்

  1. Chat  அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. உரையாடல் அல்லது ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள, ஸ்பேஸ் பெயர் அல்லது உரையாடலின் உறுப்பினர்கள் அதன் பிறகு ஆப்ஸை நிர்வகியுங்கள் அதன் பிறகு மேலும் விருப்பங்கள் என்பதைத் தட்டவும்.
    • குழு உரையாடலில் இருந்து ஆப்ஸை அகற்ற: உரையாடலில் இருந்து அகற்று என்பதைத் தட்டவும்.
    • ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்ற: ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைத் தட்டவும்.

மெசேஜ்களில் ஸ்லாஷ் கட்டளைகளைப் பயன்படுத்துதல்

ஆப்ஸுடன் விரைவாகத் தொடர்புகொள்ள Google Chatடில் ஸ்லாஷ் கட்டளைகளைப் பயன்படுத்தவும். கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஃபார்வேர்டு ஸ்லாஷை (/) டைப் செய்தவுடன் கட்டளைகளின் பட்டியல் காட்டப்படும்.

நீங்கள் பயன்படுத்தும் ஸ்லாஷ் கட்டளைகளை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். ஆப்ஸின் பதில்கள் உரையாடலில் காட்டப்படும். 

  1. Chat  அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான உரையாடல் அல்லது ஸ்பேஸைத் திறக்கவும்.
  3. பதிலளிக்கும் பகுதியில் ஃபார்வேர்டு ஸ்லாஷை (/) டைப் செய்யவும்.
    ஆப்ஸின் பட்டியல் காட்டப்படும். ஒவ்வொரு ஆப்ஸின் பெயருக்கும் கீழ் கட்டளைகளின் பட்டியல் இருக்கும். எழுத்துகளை டைப் செய்யும்போது பட்டியலில் அதனுடன் பொருந்தும் கட்டளைகள் மட்டும் காட்டப்படும். 
  4. ஒரு கட்டளையைத் தேர்வுசெய்து கூடுதல் தகவல்களை வழங்கிய பிறகு அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: உரையாடல் அல்லது ஸ்பேஸில் ஏற்கெனவே ஆப்ஸ் இல்லை என்றால் நீங்கள் மெசேஜ் அனுப்பியவுடன் அது சேர்க்கப்படும்.

Chat அல்லது Gmailலில் ஆப்ஸைப் பயன்படுத்தி கருத்து தெரிவித்தல் மற்றும் உதவி பெறுதல்

உதவி பெறவோ கருத்தை வழங்கவோ ஆப்ஸிற்கு மெசேஜ் அனுப்பலாம்.

  1. Chat  அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான உரையாடல் அல்லது ஸ்பேஸைத் திறக்கவும்.
  3. ஆப்ஸுடன் பயன்படுத்தக்கூடிய கட்டளைகளைப் பார்க்க:
    • உங்களுக்கும் ஆப்ஸுக்குமான 1:1 உரையாடலில் help என டைப் செய்யவும்.
    • ஸ்பேஸ் அல்லது குழு உரையாடலில் @appname help என்று டைப் செய்யவும். இங்கே appname என்பது ஆப்ஸின் பெயர்.
  4. ஆப்ஸ் குறித்த கருத்தை Googleளுக்கு அனுப்பவும்:
    • ஆப்ஸுக்கும் உங்களுக்குமான நேரடி மெசேஜில் feedback text என டைப் செய்யவும். இங்கே text என்பது உங்களின் கருத்து.
    • ஸ்பேஸிலோ மற்றவர்களுடனான நேரடி மெசேஜிலோ @appname feedback text என டைப் செய்யவும். இங்கே text என்பது உங்களின் கருத்து.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6986741129496005686
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false