மெசேஜுக்குப் பதிலளித்தல்

Google Chatடில் மெசேஜுக்குப் பதிலளிக்க நீங்கள்:

  • உரையாடலில் பதிலளிக்கலாம்.
  • ஸ்பேஸில் உள்ள மெசேஜிற்கு இன்லைனில் பதிலளிக்கலாம்.
  • உங்கள் பதிலில் ஒரு மெசேஜை மேற்கோள் காட்டலாம்.
  • பதிலுக்கான பரிந்துரையைப் பயன்படுத்தலாம்.

மெசேஜிற்குப் பதிலளித்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. ஓர் உரையாடலைத் திறக்கவும்.
  2. பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் உங்கள் மெசேஜை டைப் செய்யவும்.
  3. அனுப்பு ஐகானை கிளிக் செய்யவும்.

மெசேஜ் தொடரில் பதிலளித்தல்

முக்கியம்: இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸில் இருக்கும் மெசேஜ் தொடரில் நீங்கள் பதிலளிக்கலாம். இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. ஸ்பேஸைத் திறக்கவும்.
  2. மெசேஜின் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  3. மெசேஜ் தொடரில் பதிலளியுங்கள் ஐகானை கிளிக் செய்யவும்.
  4. மெசேஜ் தொடர் பேனலில் உங்கள் மெசேஜை டைப் செய்யவும்.
  5. அனுப்பு ஐகானை கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • பதில்கள் உள்ள மெசேஜ் தொடரைத் திறக்க, மெசேஜ் தொடரின் கீழே உள்ள பதிலை டைப் செய்வதற்கான இடத்தைக் கிளிக் செய்யவும்.
  • ஸ்பேஸில் உள்ள அனைத்து மெசேஜ் தொடர்களையும் கண்டறிய மேல் வலதுபுறத்தில், செயலில் உள்ள மெசேஜ் தொடர்கள் ஐகானை கிளிக் செய்யவும்.

உங்கள் பதிலில் ஒரு மெசேஜை மேற்கோள் காட்டுதல்

முக்கியம்: நீங்கள் ஒரு மெசேஜை மேற்கோளிட்டுக் காட்டும்போது, அந்த உள்ளடக்கம் அசல் மெசேஜைக் காட்டும். அசல் மெசேஜ் நீக்கப்பட்டாலோ திருத்தப்பட்டாலோ உங்கள் பதிலில் மேற்கோள் காட்டப்பட்ட உள்ளடக்கம் மாறாது.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. ஓர் உரையாடலைத் திறக்கவும்.
  2. மெசேஜின் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  3. மெசேஜ் தொடர்பான செயல்களில் இருந்து, பதிலில் மேற்கோளிட்டுக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மெசேஜை டைப் செய்யவும்.
  5. அனுப்பு ஐகானை கிளிக் செய்யவும்.

விரைவாகப் பதிலளிப்பதற்கான பரிந்துரைகளைப் பெறுதல்

மெசேஜ்களுக்கு விரைவாகப் பதிலளிக்க, ஸ்மார்ட் ரிப்ளையை இயக்கவும். ஸ்மார்ட் ரிப்ளை இயக்கப்பட்டிருக்கும்போது, Chatடில் பதிலை டைப் செய்வதற்கான இடத்திற்கு மேலே உங்களுக்குப் பரிந்துரைகள் காட்டப்படும்.

Chatடில் ஸ்மார்ட் ரிப்ளையை இயக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை கிளிக் செய்யவும்.
  3. “ஸ்மார்ட் ரிப்ளை” என்பதற்குக் கீழே உள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.

Gmailலில் ஸ்மார்ட் ரிப்ளையை இயக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ள உரையாடல் & Meet அதன் பிறகு உரையாடல் அமைப்புகளை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “ஸ்மார்ட் ரிப்ளை” என்பதற்குக் கீழே உள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2123255183315780838
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false