நேரடி மெசேஜ் அனுப்புதல்

Google Chatடில் ஒருவருக்கோ குழுவிற்கோ நீங்கள் நேரடி மெசேஜ் (DM) அனுப்பலாம்.

DMகள் வேலை செய்யும் விதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • DM என்பது நீங்கள் ஒருவருக்கோ பலருக்கோ அனுப்புவதாக இருக்கலாம்.
  • உங்கள் மெசேஜை ஒருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ படித்திருந்தால், அவர்கள் கடைசியாகப் படித்த மெசேஜுக்கு அருகில் அவர்களின் தோற்றப் படம் காட்டப்படும்.
  • ஏதேனும் ஒரு தலைப்பு, திட்டப்பணி அல்லது பொதுவான ஆர்வம் குறித்து பலருடன் விவாதிக்க ஸ்பேஸை உருவாக்கலாம். ஸ்பேஸ்களுக்கும் DMகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் DMகளைக் கண்டறிதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. இடதுபுறத்தில் உள்ள நேரடி மெசேஜ்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: DMகளைத் தேட மேலே உள்ள தேடல் பட்டியைப் பயன்படுத்தவும். மெசேஜ்களைத் தேடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

DM அனுப்புதல்

முக்கியம்: நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் அனுப்புவது இதுவே முதல்முறை என்றால், அவருடன் உரையாடலைத் தொடங்கும் முன் உங்கள் மெசேஜ் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும்.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. புதிய உரையாடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யவும்.
  3. உரையாடலைத் தொடங்கு என்பதைத் தட்டவும்.
    • பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யும்போது உங்களுக்குப் பரிந்துரைகள் காட்டப்படும்.
    • குழு DMமைத் தொடங்க, கூடுதல் பெயர்களையோ மின்னஞ்சல் முகவரிகளையோ சேர்க்கவும்.
  4. பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் மெசேஜை டைப் செய்யவும்.
  5. அனுப்பு ஐகானை கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: புதிய DMமை எளிதாகத் தொடங்க, நபரின் பெயருக்கு அடுத்து உள்ள:

  • உரையாடலைத் தொடங்கு ஐகானை கிளிக் செய்யவும்.
  • Ctrl + Enter/⌘ + Enter கீபோர்டு ஷார்ட்கட்டைப் பயன்படுத்தவும்.
மெசேஜ் விருப்பங்கள்

மெசேஜை அனுப்புவதற்கு முன், பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்க்கலாம். நீங்கள்:

மேலும் விருப்பங்களுக்கு, இவற்றைச் செய்ய Google Workspace கருவிகள் ஐகானை கிளிக் செய்யவும்:

DMமை ஸ்பேஸாக மாற்றுதல்

முக்கியம்: DMமில் இருவரோ அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் DMமை ஸ்பேஸாக மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. DMமைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள உரையாடலின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  3. இந்த உரையாடலை ஸ்பேஸாக மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Workspaceஸில் DMகள் செயல்படும் விதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் பணியிடத்திலோ பள்ளியிலோ Chatடைப் பயன்படுத்தினால், உங்கள் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும் சாராதவர்களுக்கும் நீங்கள் மெசேஜ்களை அனுப்ப உங்கள் நிர்வாகி அனுமதிப்பார்.

  • கீழ்க்காணும் சூழ்நிலைகளில், உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களுடன் நீங்கள் உரையாடலாம்:
    • அவர்கள் தனிப்பட்ட Google கணக்கைப் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
    • இரண்டு நிறுவனங்களும் அதை அனுமதிக்க வேண்டும்.
  • உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களுடன் உரையாடுகிறீர்கள் என்றால் அவர்களின் பெயருக்கு அடுத்து “வெளிப்புறப் பயனர்கள்” பேட்ஜ் காட்டப்படும்.
  • குழு DMகளில் உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களைச் சேர்க்க முடியாது.
  • DMமில் பிறரைச் சேர்க்கும்போது உங்களுக்குப் பரிந்துரைகள் காட்டப்படும். Google Chatடைப் பயன்படுத்தாதவர்கள் உட்பட உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரின் பெயரும் பரிந்துரைகளில் காட்டப்படும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12052975163268596432
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false