Google Chat மெசேஜ்களில் வடிவமைப்பைச் சேர்த்தல்

Chat மெசேஜ்களின் தோற்றத்தை மாற்ற வடிவமைப்பு மெனுவையோ மார்க்டவுன் அம்சத்தையோ பயன்படுத்தவும்.

Google Chat மெசேஜ்களின் வடிவமைப்பை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உரையாடலுக்குச் செல்லவும்.
  3. மெசேஜை டைப் செய்யவும்.
  4. வடிவமைக்க விரும்பும் வார்த்தையை ஹைலைட் செய்யவும்.
  5. வடிவமைப்பு ஐகானை கிளிக் செய்யவும்.
  6. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • தடிமனாக்க: தடிமன் தடிமனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சாய்வாக்க: சாய்வு சாய்வாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அடிக்கோடிட: அடிக்கோடு அடிக்கோடிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • வார்த்தைகளின் வண்ணத்தை மாற்ற: வார்த்தைகளின் வண்ணம் ஐகானை வண்ண உரை கிளிக் செய்யவும்.
    • வார்த்தைகளுக்கு முன்பு பொட்டுக்குறியைச் சேர்க்க: பொட்டுக்குறியிட்ட பட்டியல் ஐகானை பொட்டுக்குறியிட்ட பட்டியல் கிளிக் செய்யவும்.
    • எழுத்துகள் மீது கோடிட: எழுத்துகள் மீது கோடிடும் ஐகானை Strikethrough கிளிக் செய்யவும்.
    • ஓர் இணைப்பைச் சேர்க்க:
      1. 'இணைப்பைச் செருகு' ஐகானை Insert link கிளிக் செய்யவும்.
      2. இணைப்பை வழங்கவும்.
  7. அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: வார்த்தைகளில் வடிவமைப்பை அகற்ற, அவற்றைத் தேர்ந்தெடுத்து வழிமுறை 5 மற்றும் 6ஐப் பின்பற்றவும்.

Google Chatடில் மார்க்டவுன் வடிவமைப்பைப் பயன்படுத்துதல்

முக்கியம்: வார்த்தைகளின் வடிவமைப்பை மாற்ற “வடிவமைப்பு” பட்டனையோ கீபோர்டு ஷார்ட்கட்களையோ பயன்படுத்தினால் மெசேஜில் சேர்க்கப்பட்டுள்ள மார்க்டவுன் வடிவமைப்பை அது மாற்றிவிடும். வடிவமைக்கப்பட்ட வார்த்தைகளை Chatடில் ஒட்டும்போது வடிவமைப்புகள் மாறாமல் இருக்கும்.

Google Chat மெசேஜ்களில் மார்க்டவுன் வடிவமைப்பைச் சேர்க்க, வார்த்தைகளில் சிறப்பு எழுத்துக்குறிகளைச் சேர்க்கலாம்.
வடிவமைப்பு விருப்பம் மார்க்டவுன் உதாரணம்
தடிமனாக்குதல் *வார்த்தைகள்*
சாய்வாக்குதல் _வார்த்தைகள்_
எழுத்துகள் மீது கோடிடுதல் ~வார்த்தைகள்~
இன்லைன் குறியீட்டுத் தொகுப்பாக்குதல் `வார்த்தைகள்`
பல வரி குறியீட்டுத் தொகுப்பாக்குதல் ```வார்த்தைகள்```

உதவிக்குறிப்புகள்:

  • இன்லைன் குறியீட்டுத் தொகுப்பு வார்த்தைகளை மடிக்கும்.
  • பல வரி குறியீட்டுத் தொகுப்பு அசல் வரி முறிப்புகளை அப்படியே வைத்திருக்கும், வார்த்தைகளை மடிக்காது.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4461084157130851463
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false