Google Chat மெசேஜ்களில் வடிவமைப்பைச் சேர்த்தல்

Chat மெசேஜ்களின் தோற்றத்தை மாற்ற வடிவமைப்பு மெனுவையோ மார்க்டவுன் அம்சத்தையோ பயன்படுத்தவும்.

Google Chat மெசேஜ்களின் வடிவமைப்பை மாற்றுதல்

  1. iPhone/iPadல், Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  2. உரையாடலுக்குச் செல்லவும்.
  3. மெசேஜை டைப் செய்யவும்.
  4. இடதுபுறத்தில் உள்ள செயல் மெனு ஐகானை சேர் தட்டி and then வடிவமைப்பு வண்ண உரை என்பதைத் தட்டவும்.
  5. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • தடிமனாக்க: தடிமனாக்குவதற்கான ஐகானை தடிமனாக்கு தட்டவும்.
    • சாய்வாக்க: சாய்வாக்குவதற்கான ஐகானை சாய்வாக்கு தட்டவும்.
    • அடிக்கோடிட: அடிக்கோடிடுவதற்கான ஐகானை அடிக்கோடிடு தட்டவும்.
    • எழுத்துகள் மீது கோடிட: எழுத்துகள் மீது கோடிடுவதற்கான ஐகானை Strikethrough தட்டவும்.
    • வார்த்தைகளின் வண்ணத்தை மாற்ற: வார்த்தைகளின் வண்ணத்தை மாற்றுவதற்கான ஐகானை வண்ண உரை தட்டவும்.
    • வார்த்தைகளுக்கு முன்பு பொட்டுக்குறியைச் சேர்க்க: பட்டியலில் பொட்டுக்குறியைச் சேர்ப்பதற்கான ஐகானை பொட்டுக்குறியிட்ட பட்டியல் தட்டவும்.
  6. அனுப்புவதற்கான ஐகானை தட்டவும்.
உதவிக்குறிப்பு: வார்த்தைகளில் விரைவாக வடிவமைப்பைச் சேர்க்கவோ அகற்றவோ அவற்றைத் தொட்டுப் பிடித்து வடிவமைப்பு என்பதைத் தட்டவும்.

Google Chatடில் மார்க்டவுன் வடிவமைப்பைப் பயன்படுத்துதல்

முக்கியம்: மொபைல் சாதனத்தில் உள்ள "வடிவமைப்பு" பட்டனைப் பயன்படுத்தி வார்த்தை வடிவமைப்பை மாற்றினால் மெசேஜில் சேர்க்கப்பட்டுள்ள மார்க்டவுன் வடிவமைப்பை அது மாற்றிவிடும்.
Google Chat மெசேஜ்களில் மார்க்டவுன் வடிவமைப்பைச் சேர்க்க, வார்த்தைகளில் சிறப்பு எழுத்துக்குறிகளைச் சேர்க்கலாம்.
வடிவமைப்பு விருப்பம் மார்க்டவுன் உதாரணம்
தடிமனாக்குதல் *வார்த்தைகள்*
சாய்வாக்குதல் _வார்த்தைகள்_
எழுத்துகள் மீது கோடிடுதல் ~வார்த்தைகள்~
இன்லைன் குறியீட்டுத் தொகுப்பாக்குதல் `வார்த்தைகள்`
பல வரி குறியீட்டுத் தொகுப்பாக்குதல் ```வார்த்தைகள்```

உதவிக்குறிப்புகள்:

  • இன்லைன் குறியீட்டுத் தொகுப்பு வார்த்தைகளை மடிக்கும்.
  • பல வரி குறியீட்டுத் தொகுப்பு அசல் வரி முறிப்புகளை அப்படியே வைத்திருக்கும், வார்த்தைகளை மடிக்காது.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3980359444261456852
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false