Gmail, Chat, Meet ஆகியவற்றில் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க, ஸ்மார்ட் அம்சங்களை இயக்கலாம் முடக்கலாம்.
Gmail, Chat, Meet ஆகியவற்றுக்கான ஸ்மார்ட் அம்சங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுதல்
ஸ்மார்ட் அம்சங்களை வழங்கவும், உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கவும் Gmail, Chat, Meet ஆகிய தயாரிப்புகள் தம்மிடம் உள்ள உங்கள் உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்கலாம். Gmail, Chat, Meet ஆகியவற்றுக்கு ஸ்மார்ட் அம்சங்களை இயக்கினால் இது போன்ற வசதிகள் கிடைக்கும்:
- தானியங்கு மின்னஞ்சல் ஃபில்டர்கள் மற்றும் வகைகள்
- மின்னஞ்சல்களுக்கான அதிக முன்னுரிமை அறிவிப்புகள்
- மின்னஞ்சல்களுக்கு மேலே காட்டப்படும் சுருக்கவிவரக் கார்டுகள்
- Gmailலில் ஸ்மார்ட் கம்போஸ்
- Chatடில் ஸ்மார்ட் கம்போஸ்
- Gmailலில் ஸ்மார்ட் ரிப்ளை
- முக்கிய மின்னஞ்சல்கள் குறித்த நினைவூட்டல்கள்
உங்கள் Gmail, Chat, Meet ஆகியவற்றின் உள்ளடக்கத்தையும் செயல்பாட்டையும் ஸ்மார்ட் அம்சங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுதல்
பிரத்தியேகமாக்கம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது ஸ்மார்ட் அம்சத்தின் அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. உங்கள் அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் Gmail, Chat, Meet ஆகியவற்றின் ஸ்மார்ட் அம்சங்களை இயக்கலாம் முடக்கலாம். ஸ்மார்ட் அம்சங்கள் இயக்கப்பட்டிருக்கும்போது இந்த அம்சங்களை மேம்படுத்த உங்கள் தரவு பயன்படுத்தப்படலாம்.
ஸ்மார்ட் அம்சங்களை இயக்கும்போது, இது போன்றவற்றை உங்களால் செய்ய முடியும்:
- Gmailலில் மின்னஞ்சல்களை இன்பாக்ஸ் வகைகளாக வரிசைப்படுத்துதல் மற்றும் ஃபில்டர் செய்தல்.
- Chatடில் மெசேஜை டைப் செய்யும்போது கணித்து வழங்கப்படும் வார்த்தைப் பரிந்துரைகளைப் பெறுதல்.
- Gmailலில் சுருக்கவிவரக் கார்டுகளைப் பயன்படுத்தி வரவிருக்கும் ஆர்டரைக் கண்காணித்தல்.
ஸ்மார்ட் அம்சங்களை முடக்கினால், அவற்றை மீண்டும் இயக்கும்வரை மேலே பட்டியலிட்டுள்ளவற்றை Gmail, Chat, Meet ஆகியவற்றில் நீங்கள் பயன்படுத்த முடியாது. இருப்பினும், அமைப்புகள் தனித்தனியாக இயக்கப்பட்டுள்ள அல்லது முடக்கப்பட்டுள்ள சில ஸ்மார்ட் அம்சங்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த அம்சங்களுக்கு உதவும் மாடல்களை மேம்படுத்துவதற்கு, ஒப்புதல் அளிக்காத பயனரின் தரவு பயன்படுத்தப்படுவதில்லை. சில எடுத்துக்காட்டுகள்:
நீங்கள் Google Workspace மற்றும் Maps, Wallet போன்ற பிற Google தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் Gmail, Chat, Meet ஆகியவற்றின் ஸ்மார்ட் அம்ச அமைப்புகளில் மாற்றங்களைச் செய்தால் அந்தத் தயாரிப்புகளின் ஸ்மார்ட் அம்ச அமைப்புகளின் மீது நீங்கள் தற்போது வைத்திருக்கும் கட்டுப்பாட்டை அது மாற்றாது.
Gmail, Chat, Meet ஆகியவற்றுக்கான ஸ்மார்ட் அம்சத்தின் அமைப்புகளை மாற்றுதல்
முக்கியம்:
- நீங்கள் இந்த நாடுகளில் இருந்தால் ஸ்மார்ட் அம்சங்கள் இயல்பாக முடக்கப்பட்டிருக்கும்:
- ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி
- ஜப்பான்
- சுவிட்சர்லாந்து
- யுனைடெட் கிங்டம்
- ஸ்மார்ட் அம்சத்தின் அமைப்புகளில் செய்யும் மாற்றங்கள் நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லாச் சாதனங்களுக்கும் ஆப்ஸிற்கும் பயன்படுத்தப்படும்.
- மொபைலில் Gmail ஆப்ஸைப் பயன்படுத்தும்போது மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வரவில்லை என்றால் ஆப்ஸைப் புதுப்பிக்கவும்.
- நீங்கள் கம்ப்யூட்டரில் செய்யும் சில மாற்றங்கள் மொபைல் ஆப்ஸில் செய்யப்படாது.
- கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை
கிளிக் செய்து
எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- “பொது” என்ற பிரிவுக்குக் கீழே உள்ள “ஸ்மார்ட் அம்சங்கள்” என்பதற்குச் செல்லவும்.
- “Gmail, Chat, Meet ஆகியவற்றில் ஸ்மார்ட் அம்சங்களை இயக்கு” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.