Google Chatடில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடனான நேரடி மெசேஜில் (DM) ஒருவரைச் சேர்க்க அவர்களை உறுப்பினர் பட்டியலில் சேர்க்கவும் அல்லது மெசேஜில் அவர்களைக் குறிப்பிடவும்.
DMமில் பிறரைச் சேர்த்தல்
- iPhone அல்லது iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில் நேரடி மெசேஜ்கள் ஐகானை தட்டவும்.
- DMமைத் திறக்கவும்.
- மேலே உள்ள உரையாடலின் பெயரைத் தட்டவும்.
- உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
- பிறரைச் சேர்ப்பதற்கான ஐகானை தட்டவும்.
- பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து, முடிந்தது என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்புகள்:
- ஒருவருடனான DMமைக் குழு DMமாக மாற்ற, மேலே உள்ள உரையாடலின் பெயரைத் தட்டி புதிய உரையாடலைத் தொடங்கு என்பதைத் தட்டவும்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கும் DMமில் புதிதாக ஒருவரை விரைவாகச் சேர்க்க, பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் @ என்று டைப் செய்து அவரின் பெயரை டைப் செய்யவும்.
DMமில் இருந்து பிறரை அகற்றுதல்
முக்கியம்: DMமில் இருந்து ஒருவரை அகற்றினால், அவரால்:
- உரையாடலில் பங்கேற்க முடியாது.
- இதுவரையிலான மெசேஜ்களைப் பார்க்க முடியாது.
- iPhone அல்லது iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
- Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
- கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில் நேரடி மெசேஜ்கள் ஐகானை தட்டவும்.
- DMமைத் திறக்கவும்.
- மேலே உள்ள உரையாடலின் பெயரைத் தட்டவும்.
- உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
- அகற்ற விரும்புபவரின் பெயருக்கு அடுத்துள்ள கூடுதல் விருப்பங்கள் மெனுவை தட்டி உரையாடலில் இருந்து அகற்று என்பதைத் தட்டவும்.