Google Chatடில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடனான நேரடி மெசேஜில் (DM) ஒருவரைச் சேர்க்க அவர்களை உறுப்பினர் பட்டியலில் சேர்க்கவும் அல்லது மெசேஜில் அவர்களைக் குறிப்பிடவும்.
DMமில் பிறரைச் சேர்த்தல்
- கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
- Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
- DMமைத் திறக்கவும்.
- மேலே உள்ள உரையாடலின் பெயரைக் கிளிக் செய்யவும்.
- பிறரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்புகள்:
- ஒருவருடனான DMமைக் குழு DMமாக மாற்ற, மேலே உள்ள உரையாடலின் பெயரைக் கிளிக் செய்து புதிய உரையாடலைத் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கும் DMமில் புதிதாக ஒருவரை விரைவாகச் சேர்க்க, பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் @ என்று டைப் செய்து அவரின் பெயரை டைப் செய்யவும்.
DMமில் இருந்து பிறரை அகற்றுதல்
முக்கியம்: DMமில் இருந்து ஒருவரை அகற்றினால், அவரால்:
- உரையாடலில் பங்கேற்க முடியாது.
- இதுவரையிலான மெசேஜ்களைப் பார்க்க முடியாது.
- கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
- Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
- DMமைத் திறக்கவும்.
- மேலே உள்ள உரையாடலின் பெயரைக் கிளிக் செய்யவும்.
- உறுப்பினர்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- அகற்ற விரும்புபவரின் பெயருக்கு அடுத்துள்ள கூடுதல் விருப்பங்கள் மெனுவை கிளிக் செய்து ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.