நேரடி மெசேஜில் ஒருவரைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

Google Chatடில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடனான நேரடி மெசேஜில் (DM) ஒருவரைச் சேர்க்க அவர்களை உறுப்பினர் பட்டியலில் சேர்க்கவும் அல்லது மெசேஜில் அவர்களைக் குறிப்பிடவும்.

DMமில் பிறரைச் சேர்த்தல்

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  2. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில் நேரடி மெசேஜ்கள் ஐகானை தட்டவும்.
  3. DMமைத் திறக்கவும்.
  4. மேலே உள்ள உரையாடலின் பெயரைத் தட்டவும்.
  5. உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  6. பிறரைச் சேர்ப்பதற்கான ஐகானை தட்டவும்.
  7. பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து,and then முடிந்தது என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஒருவருடனான DMமைக் குழு DMமாக மாற்ற, மேலே உள்ள உரையாடலின் பெயரைத் தட்டி and then புதிய உரையாடலைத் தொடங்கு என்பதைத் தட்டவும்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கும் DMமில் புதிதாக ஒருவரை விரைவாகச் சேர்க்க, பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் @ என்று டைப் செய்து அவரின் பெயரை டைப் செய்யவும்.

DMமில் இருந்து பிறரை அகற்றுதல்

முக்கியம்: DMமில் இருந்து ஒருவரை அகற்றினால், அவரால்:

  • உரையாடலில் பங்கேற்க முடியாது.
  • இதுவரையிலான மெசேஜ்களைப் பார்க்க முடியாது.
  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  2. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில் நேரடி மெசேஜ்கள் ஐகானை தட்டவும்.
  3. DMமைத் திறக்கவும்.
  4. மேலே உள்ள உரையாடலின் பெயரைத் தட்டவும்.
  5. உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  6. அகற்ற விரும்புபவரின் பெயருக்கு அடுத்துள்ள கூடுதல் விருப்பங்கள் மெனுவை  தட்டி அதன் பிறகு உரையாடலில் இருந்து அகற்று என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7373623466294927102
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false