Google Chatடை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்

Google Chatடில் நீங்கள் விரைவான கேள்விகளைக் கேட்கலாம், நேரடி மெசேஜ்களை (DMகள்) அனுப்பலாம், குழு உரையாடல்களில் கூட்டுப்பணி செய்யலாம், குழுத் திட்டப்பணிகளுக்கான விர்ச்சுவல் ஸ்பேஸ்களை உருவாக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

இந்தக் கட்டுரையில் உள்ளவை

Google Chatடில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

முந்தைய Chat வசதி

தற்போதைய Chat வசதி

Gmailலில், DMகளும் ஸ்பேஸ்களும் “Chat” மற்றும் “ஸ்பேஸ்கள்” என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். Gmailலில், DMகளும் ஸ்பேஸ்களும் “Chat” பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. Gmailலில் “ஸ்பேஸ்கள்” பிரிவு இனிமேல் இருக்காது.
சமீபத்திய உரையாடல்கள், நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள மெசேஜ்கள், நட்சத்திரமிட்ட மெசேஜ்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் கண்டறிவதற்கான ஷார்ட்கட்கள் கிடையாது. Chatடில் உள்ள இந்தப் புதிய ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையானவற்றை விரைவாகக் கண்டறியலாம்: முகப்பு, குறிப்பிடல்கள் மற்றும் நட்சத்திரமிட்டவை.
மொபைலில் “Chat” மற்றும் “ஸ்பேஸ்கள்” இடையே மாறிக்கொள்ளலாம். மொபைலில் “Chat” பிரிவுக்குச் செல்லும்போது ஒரு வழிசெலுத்தல் பட்டி கீழே காட்டப்படும். முகப்பு, DMகள், ஸ்பேஸ்கள், குறிப்பிடல்கள், நட்சத்திரமிட்டவை ஆகியவற்றுக்கு இடையே மாறிக்கொள்ளலாம் அல்லது புதிய உரையாடலைத் தொடங்கலாம்.
Chat மற்றும் Gmailலில் உள்ள Chatடில் புதிய உரையாடலைத் தொடங்கப் பல்வேறு வழிகள் உள்ளன. உரையாடலையோ ஸ்பேஸையோ புதிய உரையாடல் பட்டன் மூலம் தொடங்கலாம்.

Chatடில் இங்கும் அங்கும் செல்லுதல்

முதன்மை மெனுவில் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • புதிய உரையாடலைத் தொடங்கலாம். அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு அனுப்பும் DM அல்லது திட்டப்பணிகளில் கூட்டுப்பணி செய்வதற்கான ஸ்பேஸாக இருக்கலாம்.
  • பல்வேறு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி உங்கள் உரையாடல்களைக் கண்டறியலாம்.
  • உங்கள் அனைத்து DMகளையும் ஸ்பேஸ்களையும் பார்க்கலாம்.

An image of the new Home shortcut in Google Chat

இடதுபுற மெனுவில் இவற்றில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்:

ஷார்ட்கட்கள்

இவற்றுக்கான விரைவு அணுகலைப் பெறலாம்:

  • முகப்பு: உங்களின் அனைத்து உரையாடல்களையும் பார்க்கலாம். அனைத்து அல்லது படிக்கப்படாத உரையாடல்களுக்கு இடையே மாறலாம்.
  • குறிப்பிடல்கள்: ஒருவர் நேரடியாக உங்களைக் குறிப்பிட்டுள்ள மெசேஜ்கள் அனைத்தையும் பார்க்கலாம்.
  • நட்சத்திரமிட்டவை: நீங்கள் நட்சத்திரமிட்டுள்ள முக்கிய மெசேஜ்களைக் கண்காணிக்கலாம்.

நேரடி மெசேஜ்கள்

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையேயான அனைத்து DMகளையும் பார்க்கலாம். நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு DM அனுப்பலாம்.

ஸ்பேஸ்கள் நீங்கள் உருவாக்கிய அல்லது சேர்ந்துள்ள அனைத்து ஸ்பேஸ்களையும் பார்க்கலாம்.

DM அல்லது ஸ்பேஸை உருவாக்குதல்

புதிய உரையாடல் என்பதை நீங்கள் கிளிக் செய்யும்போது DMமை உருவாக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களைச் சேர்க்கலாம், மெனுவில் வேறு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்:

ஸ்பேஸை உருவாக்குதல்

ஏதேனும் ஒரு தலைப்பு, திட்டப்பணி அல்லது பொதுவான ஆர்வம் குறித்து மட்டும் விவாதிப்பதற்கான உரையாடலை உருவாக்கலாம். உங்கள் ஸ்பேஸிற்குத் தனித்துவமான பெயரையும் தோற்றப் படத்தையும் வழங்கலாம்.

ஸ்பேஸ்களைத் தேடுதல்

உங்கள் நிறுவனம் உருவாக்கிய ஸ்பேஸ்களைப் பார்க்கலாம். பணியிடம், பள்ளி அல்லது மற்றொரு நிறுவனத்திற்கான Chatடைப் பயன்படுத்தினால் உங்கள் நிறுவனத்தில் உள்ள பிறர் உருவாக்கிய ஸ்பேஸ்களைப் பார்க்கலாம்.

ஆப்ஸைக் கண்டறிதல்

உங்கள் வேலையைத் தானாகச் செய்வதற்கு உதவும் Chat ஆப்ஸைத் தேடலாம்.

மெசேஜ் கோரிக்கைகள்

உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களிடமிருந்து வந்த நிலுவையில் உள்ள மெசேஜ் கோரிக்கைகளைப் பார்க்கலாம். பணியிடம், பள்ளி அல்லது மற்றொரு நிறுவனத்திற்கான Chatடைப் பயன்படுத்தினால் உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களின் மெசேஜ் கோரிக்கைகளும் இவற்றில் இருக்கலாம்.

மெசேஜ்களை அனுப்புதல் மற்றும் அவற்றுக்குப் பதிலளித்தல்

நீங்கள் ஒரு மெசேஜை அனுப்பும்போதும், அதற்குப் பதிலளிக்கும்போதும் Chatடில் உள்ள பதிலை டைப் செய்வதற்கான இடத்தைப் பயன்படுத்தலாம். Chatடில் மெசேஜ்களுக்குப் பதிலளிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன.

An image of a space in Google Chat

பதிலளிக்கும்போது, நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

மெசேஜ் அனுப்புதல்

நீங்கள் டைப் செய்த மெசேஜை அனுப்பலாம்.

ஃபைல்களைப் பகிர்தல் மற்றும் பலவற்றைச் செய்தல்

Google Drive ஃபைல்களைப் பகிரலாம், Calendar அழைப்பை அமைக்கலாம் அல்லது மெசேஜில் புதிய ஆப்ஸைச் சேர்க்கலாம்.

மீட்டிங்கைத் தொடங்குதல் Google Meet மூலம் வேறொருவருடன் உடனடியாக வீடியோ அழைப்பைத் தொடங்கலாம்.
வீடியோ மீட்டிங்கைச் சேர்த்தல்

வீடியோ மீட்டிங்கில் Google Meet இணைப்பைச் சேர்க்கலாம்.

மெசேஜ்களைத் திருத்துதல் Edit

அனுப்பிய மெசேஜைத் திருத்தலாம்.

மெசேஜ்களை நீக்குதல்

அனுப்பிய மெசேஜை நீக்கலாம்.

மெசேஜ்களை வடிவமைத்தல்

வார்த்தைகளைத் தடிமனாக்கலாம், சாய்வாக்கலாம், பொட்டுக்குறிகளைப் பயன்படுத்தலாம் அல்லது வண்ணத்தைச் சேர்க்கலாம்.

மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்தல்

ஈமோஜியைச் சேர்க்கலாம்.

ஃபைலைப் பதிவேற்றுதல்

கம்ப்யூட்டரில் உள்ள ஃபைலைப் பகிரலாம்.

GIFஐப் பகிர்தல்

GIF அனிமேஷன் மூலம் ரியாக்ட் செய்யலாம்.

மெசேஜை மேற்கோளிடுதல்

நேரடியாகப் பதிலளிக்க, Chatடில் முந்தைய மெசேஜை மேற்கோளிடலாம்.

மெசேஜ் தொடரைத் தொடங்குதல் இன்லைன் மெசேஜ் தொடரைக் கொண்ட ஸ்பேஸில் மெசேஜ் அடிப்படையில் புதிய மெசேஜ் தொடரை உருவாக்கலாம்.

மெசேஜ்களைத் தேடுதல்

மெசேஜ்களைக் கண்டறிய, Chatடின் மேற்பகுதியில் உள்ள தேடல் பட்டியைப் பயன்படுத்தவும். தேடும்போது, இந்த மெசேஜ்களின் அடிப்படையில் வடிக்கட்டலாம்:

  • குறிப்பிட்ட நபர்களால் அனுப்பப்பட்டவை
  • குறிப்பிட்ட உரையாடல் அல்லது ஸ்பேஸில் அனுப்பப்பட்டவை
  • ஆவணங்கள், விரிதாள்கள், ஸ்லைடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியவை
  • குறிப்பிட்ட தேதி வரம்பிற்குள் அனுப்பப்பட்டவை
  • இணைப்புகள் இருப்பவை
  • உங்களைக் குறிப்பிடுபவை
  • நீங்கள் உறுப்பினராக இருக்கும் உரையாடல்களில் உள்ளவை

மிகச் சமீபத்தியது அல்லது உங்கள் தேடல் நிபந்தனையுடன் பொருந்தும் மெசேஜ்களின் அடிப்படையிலும் நீங்கள் வரிசைப்படுத்தலாம்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6393171260823841217
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false