மெசேஜில் வேறொருவரைக் குறிப்பிடுதல்

Google Chatடில் ஒருவரின் கவனத்தைப் பெற மெசேஜில் அவரின் பெயரைக் குறிப்பிடலாம்.

உரையாடலில் இருப்பவர்களைக் குறிப்பிடுதல்

  1. மெசேஜை எழுதும்போது @ என்று டைப் செய்யவும்.
  2. ஒருவரின் பெயரை டைப் செய்யவும்.
  3. மெசேஜை அனுப்பவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஒரே மெசேஜில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களைக் குறிப்பிட, ஒவ்வொருவரின் பெயர்களையும் டைப் செய்யவும்.
  • ஒரு மெசேஜில் அனைவரையும் குறிப்பிட, @அனைவருக்கும் என்று டைப் செய்யவும்.

உங்களுக்கான குறிப்பிடல்களைக் கண்டறிதல்

பிறர் உங்களைக் குறிப்பிடும்போது, அவர்களின் மெசேஜில் உங்கள் பெயர் தனிப்படுத்திக் காட்டப்படும்.

நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரையாடல்களையும் கண்டறிய Chatடில் குறிப்பிடல்கள் என்பதற்குச் செல்லவும்.

  1. இடதுபுறத்தில், குறிப்பிடல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள மெசேஜைக் கிளிக் செய்யவும்.

முக்கியம்: குறிப்பிடல்களில் இவை உட்பட சில மெசேஜ்கள் காட்டப்படாது:

  • @அனைவருக்கும் என்று குறிப்பிடப்படும் மெசேஜ்கள்.
  • உரையாடல் தலைப்புகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்பேஸ்களில் உள்ள மெசேஜ்கள்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3423795143685814801
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false