நிகழ்வை உருவாக்குதல்

கம்ப்யூட்டர் அல்லது சாதனத்திலிருந்து Google Calendar நிகழ்வுகளை உருவாக்க முடியும்.

நிகழ்வை உருவாக்கும் வழிகள்

உங்கள் கேலெண்டரில் ஒரு வெற்று நேரத்தைக் கிளிக் செய்யவும்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. விருப்பத்திற்குரியது: உங்கள் நிகழ்வில் விருந்தினர்களைச் சேர்க்க விரும்பினால் இடதுபுறத்தில் நபர்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்து உங்கள் விருந்தினர்களின் பெயர்களை உள்ளிடத் தொடங்கவும்.
  3. கேலெண்டரில் ஏற்கெனவே நிகழ்வு எதுவும் திட்டமிடப்பட்டிருக்காத நேரத்தைக் கிளிக் செய்யவும்.
  4. நிகழ்வில் தலைப்பையும் ஏதேனும் நிகழ்வு விவரங்களையும் சேர்க்கவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நீண்ட நேர நிகழ்வை உருவாக்க நேரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது மவுஸைப் பக்கத்தின் கீழே இழுக்கவும்.

உருவாக்கு என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. விருப்பத்திற்குரியது: உங்கள் நிகழ்வில் விருந்தினர்களைச் சேர்க்க விரும்பினால் இடதுபுறத்தில் நபர்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்து உங்கள் விருந்தினர்களின் பெயர்களை உள்ளிடத் தொடங்கவும்.
  3. மேலே இடது மூலையில் உள்ள உருவாக்கு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நிகழ்வில் தலைப்பையும் ஏதேனும் நிகழ்வு விவரங்களையும் சேர்க்கவும்.
  5. பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
நிகழ்வை விரைவாக உருவாக்குதல்

"தலைப்பையும் நேரத்தையும் சேர்க்கவும்" என்பது உரைப் பெட்டியில் இருந்தால் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கான நிகழ்வை விரைவாக உருவாக்க முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. நிகழ்விற்குச் சேர்க்க விரும்பும் தேதிக்கு அடுத்துள்ள இடைவெளியைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் நிகழ்விற்குத் தலைப்பையும் நேரத்தையும் சேர்க்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் அமைக்கும் நேரத்தில் கேலெண்டர் தானாக ஒரு நிகழ்வை உருவாக்கும்.

எடுத்துக்காட்டுகள்:

  • மாலை 5 மணிக்கு டென்னிஸ் பயிற்சி
  • இரவு 7 மணிக்கு இரவு உணவு

உதவிக்குறிப்பு: எந்தவொரு காட்சியிலும் நிகழ்வை விரைவில் உருவாக்க Shift + C கீபோர்ட் ஷார்ட்கட்டைப் பயன்படுத்தலாம்.

பகிர்ந்த கேலெண்டரில் நிகழ்வை உருவாக்குதல்

முக்கியம்: பகிர்ந்த கேலெண்டரில் நிகழ்வை உருவாக்க, இவற்றைச் செய்யலாம்:
  1. கம்ப்யூட்டரில் Google Calendar ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள உருவாக்கு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தலைப்பையும் நிகழ்வு விவரங்களையும் சேர்க்கவும்.
  4. கீழேயுள்ள Calendar Event என்பதற்கு அருகிலுள்ள கேலெண்டரின் பெயர் மீது தட்டவும்.
  5. கேலெண்டரின் பெயருக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும். நீங்கள் நிகழ்வுகளை உருவாக்கக்கூடிய அனைத்து கேலெண்டர்களின் பட்டியல் காட்டப்படும்.
  6. விருப்பமான கேலெண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும். காட்டப்படும் நிகழ்வில் கேலெண்டரின் பெயரும், நிகழ்வை உருவாக்கியவரின் பெயரும் இருக்கும்.

உதவிக்குறிப்பு: பிறந்தநாள் அல்லது விடுமுறைக் கேலெண்டர்களில் நிகழ்வுகளை உருவாக்க முடியாது.

நிகழ்வு விருப்பங்கள்

முழு நாள் நிகழ்வை உருவாக்குதல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேலே இடது மூலையில் உள்ள உருவாக்கு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் நிகழ்விற்கான விளக்கத்தைச் சேர்க்கவும்.
  4. தேதி மற்றும் நேரத்திற்குக் கீழே முழு நாள் என்பதை அடுத்துள்ள பெட்டியைத் தேர்வு செய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

அந்த நாளுக்கான பக்கத்தின் மேற்பகுதியில் முழு நாள் நிகழ்வுகளைப் பார்ப்பீர்கள்.

மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வை உருவாக்குதல்

நீங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வை உருவாக்க முடியும். மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வை உருவாக்குவதையும் நிர்வகிப்பதையும் குறித்து அறிக.

வீடியோ மீட்டிங்கைச் சேர்த்தல்

நீங்கள் பணி/பள்ளிக்கான Calendarரைப் பயன்படுத்தினால் அழைக்கப்பட்டவர்களைச் சேர்த்து, சேமி என்பதைக் கிளிக் செய்யும்போது Meet வீடியோ மீட்டிங் சேர்க்கப்படும்.

நீங்களாகவே வீடியோ மீட்டிங்கைச் சேர்ப்பதற்கு, Google Meet வீடியோ கான்ஃபிரன்ஸைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் பணி/பள்ளிக்கான Calendarரைப் பயன்படுத்தினால் G Suite Marketplaceஸில் இருந்து மூன்றாம் தரப்பு கான்ஃபரன்ஸிங் ஆப்ஸைப் பயன்படுத்த முடியும். Calendar சம்பந்தமான மேலும் பல கருவிகளைப் பெறுக.

லைவ் ஸ்ட்ரீமிங்கைச் சேர்த்தல்

நீங்கள் பணி/பள்ளிக்கான Calendarரையும் Google Meetடையும் பயன்படுத்தினால் ஒரு நிகழ்வை 100,000 பேர் வரை பார்ப்பதற்கு ’பார்க்க மட்டுமான’ லைவ் ஸ்ட்ரீமிங்கைச் சேர்க்க முடியும். வீடியோ மீட்டிங்கை எப்படி லைவ் ஸ்ட்ரீம் செய்வது என்பதை அறிக.

நிகழ்வுக்கான வண்ணத்தைத் தேர்வுசெய்தல்

நிகழ்வை உருவாக்கும்போது அந்த நிகழ்வு உங்கள் கேலெண்டர்களில் எந்த வண்ணத்தில் காட்டப்படும் என்பதைத் தேர்வு செய்ய முடியும். உங்கள் கேலெண்டரில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியை மற்றவர்களுக்குக் கொடுத்தால் தவிர நிகழ்வுகளுக்கு நீங்கள் அமைத்துள்ள வண்ணத்தை அவர்கள் பார்க்க முடியாது. கேலெண்டர் அனுமதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிக.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. ஏற்கெனவே உள்ள நிகழ்வில் வலது கிளிக் செய்யவும். பிறகு ஒரு வண்ணத்தைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் உருவாக்கியுள்ள நிகழ்வைத் திருத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. திருத்த விரும்பும் நிகழ்வில் கிளிக் செய்யவும். நிகழ்வைத் திருத்து Edit event என்பது தெரிந்தால் அதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் நிகழ்வில் மாற்றங்களைச் செய்யவும்.
  4. பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் நிகழ்வை விருந்தினர்கள் மாற்ற அனுமதித்தல்

அறைகளைச் சேர்த்தல், நேரத்தைச் சரிசெய்தல் அல்லது இணைப்புகளைச் சேர்த்தல் போன்ற நிகழ்வு விவரங்களைத் திருத்த உங்கள் விருந்தினர்களை அனுமதிக்க முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. ஒரு நிகழ்வைக் கிளிக் செய்து அதன் பிறகு நிகழ்வைத் திருத்துவதற்கான ஐகானை Edit event கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் “கெஸ்ட் அனுமதிகள்” என்பதன் கீழ் “நிகழ்வை மாற்று” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: “நிகழ்வை விருந்தினர்கள் மாற்றலாம்” என்பதைத் தேர்வுசெய்தால், உங்களைப் போன்று அவர்களும் நிகழ்வை நிர்வகிக்கலாம்.

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

நிகழ்வுகளைச் சேமிக்க முடியவில்லை

இந்த வழிமுறையை அதே வரிசையில் பின்பற்றிப் பார்க்கவும்:

  1. பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்யவும்.
  2. உங்கள் உலாவியின் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிக்கவும்.
  3. JavaScript இயக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
  4. Google Calendarரிலிருந்து வெளியேறவும்.
  5. உலாவியை மூடவும்.
  6. உலாவியைத் திறந்து Google Calendarரில் மீண்டும் உள்நுழையவும். வலை முகவரியில் "http"க்குப் பதிலாக "https" என்பதைப் பயன்படுத்தவும்.

உங்கள் கேலெண்டரை ஒத்திசைப்பதற்கு மூன்றாம் தரப்பு ஆப்ஸைப் பயன்படுத்தினால் மீண்டும் உள்நுழையும் முன் ஒத்திசைவை முடக்கவும்.

விருந்தினரைச் சேர்க்க முயலும்போது எனது தொடர்பு பரிந்துரையாகக் காட்டப்படவில்லை
சரியான மின்னஞ்சல் முகவரியுடன் இருக்கும் தொடர்புகள் மட்டுமே பரிந்துரைகளாகக் காட்டப்படும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7835166997673193050
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false